இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

மிகுந்த கவனத்தை பெற்றுள்ள பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் என்ற முழு-எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் குறித்த லேட்டஸ்ட் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதனை பற்றியும், இந்த புதிய பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரினை பற்றியும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

2021ஆம் ஆண்டு முடியும் தருவாயில் வந்துவிட்டோம். இந்த நிலையில் இப்போது பிஎம்டபிள்யூ அதன் புதிய எலக்ட்ரிக் காராக ஐஎக்ஸ் எஸ்யூவி-ஐ இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளதாக செய்திகள் தெரியவந்துள்ளன. இதுகுறித்து நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் மாடலின் இந்திய வெர்சனின் படங்களும், காரை பற்றிய முக்கிய விபரங்களும் வருகிற டிசம்பர் 11ஆம் தேதி வெளியிடப்பட உள்ளனவாம்.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

பிஎம்டபிள்யூவின் அளவிடக்கூடிய, புதிய மாடுலர் ப்ளாட்ஃபாரத்தில் முதல் மாடலாக ஐஎக்ஸ் எலக்ட்ரிக் எஸ்யூவி விளங்குகிறது. இதே ப்ளாட்ஃபாரத்தை கொண்டே எதிர்காலத்தில் வரும் பிஎம்டபிள்யூ கார்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி இட்ரைவ் தொழிற்நுட்பத்தின் ஐந்தாம் தலைமுறையை பெற்றுள்ளது. இது இரு எலக்ட்ரிக் மோட்டார்களின் மூலமாக செயல்படுகிறது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

இவற்றில் பொருத்தப்படுகின்ற அதி மின்னழுத்த பேட்டரிகள் அதிகப்பட்சமாக 496 பிஎச்பி வரையிலான ஆற்றலை மோட்டாருக்கு வழங்கக்கூடியவை உள்ளன. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 5 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் காரின் ரேஞ்ச் இந்திய சந்தையில் அதன் போட்டி மாடல்களுக்கு சவாலானதாக இருக்கும் என பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

மற்றப்படி இதன் பேட்டரி திறன் மற்றும் எலக்ட்ரிக் மோட்டாரின் திறன்கள் குறித்த விபரங்கள் தற்போதைக்கு வெளியாகவில்லை. 100kWh திறனிற்கு அதிகமான அதி மின்னழுத்த பேட்டரி என்றால், ரேஞ்ச் நிச்சயமாக 600கிமீ மேலே இருக்கும். ஐஎக்ஸ் மாடலில் பிஎம்டபிள்யூ வழங்கியுள்ள புதிய சார்ஜிங் தொழிற்நுட்பமானது 200 கிலோவாட்ஸ் வரையில் மின்னழுத்தம் கொண்ட நேர்திசை மின்னோட்ட விரைவு சார்ஜர் வரையில் ஏற்கக்கூடியது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

இதனால் இந்த காரினை வெறும் 40 நிமிடங்களில் 10%-இல் இருந்து 80% வரையில் சார்ஜ் ஏற்றிவிடலாம் என கூறப்படுகிறது. அதுவே வீட்டில் பயன்படுத்தப்படும் 11 கிலோவாட்ஸ் சுவர் மின்சாரம் என்றால், ஐஎக்ஸ் காரின் அதி மின்னழுத்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் ஏற்ற குறைந்தது 10 மணிநேரங்களை எடுத்து கொள்ளுமாம். ஐஎக்ஸ் வடிவமைப்பிற்கு அடிப்படையான ஐநெக்ஸ்ட் கான்செப்ட் முதன்முதலாக 2017இல் உலகளவில் வெளிக்காட்டப்பட்டது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

முன்பக்கத்தில், பிஎம்டபிள்யூ அடையாளங்களுள் ஒன்றான ‘கிட்னி' வடிவிலான க்ரில் அமைப்பை பெரிய அளவில் ஐஎக்ஸ் பெற்றுள்ளது. அத்துடன் இதன் முன்பக்கத்தில் செதுக்கப்பட்டது போன்ற முப்பரிமாண பொனெட் பகுதியும் வழங்கப்பட்டுள்ளது. நிலையாக, இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 20-இன்ச் அலாய் சக்கரங்கள் வழங்கப்படலாம். கூடுதல் தேர்வாக வேண்டுமானால், 21-இன்ச் மற்றும் 22-இன்ச் தேர்வுகள் வேரியண்ட்டை பொறுத்து கொடுக்கப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

மற்ற சர்வதேச சந்தைகளில் எக்ஸ் ட்ரைவ் 40 மற்றும் எக்ஸ் ட்ரைவ் 50 என்கிற இரு விதமான வேரியண்ட்களில் புதிய பிஎம்ட்பிள்யூ ஐஎக்ஸ் விற்பனை செய்யப்படுகிறது. இதில் எக்ஸ் ட்ரைவ் 40 வேரியண்ட்டில் அதிகப்பட்சமாக 326 பிஎச்பி மற்றும் 630 என்எம் டார்க் திறனை பெற முடிகிறது. ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகப்பட்சமாக 414 கிமீ தொலைவிற்கு இந்த வேரியண்ட்டில் செல்ல முடிகிறது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

ஐஎக்ஸ் எக்ஸ் ட்ரைவ் 40 வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 6.1 வினாடிகளில் எட்டிவிடலாம். எக்ஸ் ட்ரைவ் 50 வேரியண்ட்டில் 523 பிஎச்பி மற்றும் 765 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றல் கிடைக்கிறது. அதிகப்பட்சமாக 611 கிமீ தொலைவிற்கு சிங்கிள் முழு சார்ஜில் செல்லக்கூடிய இந்த வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடலாம்.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

இந்த இரு வேரியண்ட்டிலும் முன் பக்கத்தில் ஒன்று, பின் பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்படுகின்றன. இதனை காட்டிலும் முக்கிய சிறப்பம்சமாக அனைத்து-சக்கர ட்ரைவ் அமைப்பு பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் வழங்கப்படுகிறது. இது பயண சூழலை பொறுத்து முன் சக்கரங்களுக்கும், பின் சக்கரங்களுக்கும் வெவ்வேறான டார்க் திறன்களை வழங்கக்கூடியதாக உள்ளது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

அதேநேரம் முழுவதுமாக பின் சக்கரங்களில் மட்டுமே இயங்கக்கூடிய ஐஎக்ஸ் எலக்ட்ரிக் காரும் உள்ளது. மற்றும் தேவை என்றால் அனைத்து சக்கரங்களிலும் இயங்கக்கூடிய ஐஎக்ஸ் மாடலும் உள்ளது. ஆனால் இதில் முற்றிலும் பின் சக்கரங்களில் மட்டுமே இயங்கக்கூடிய ஐஎக்ஸ் மாடல்கள் செயல்திறன்மிக்கவைகளாக உள்ளன. முழுவதுமாக வெளிநாட்டு தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட நிலையில், சிபியூ முறையில் ஐஎக்ஸ் இந்தியாவில் விற்பனை செய்யப்பட உள்ளது.

இந்தியாவிற்கான முதல் பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் கார்! வரும் டிசம்பர் துவக்கத்தில் அறிமுகம்? விலை எவ்ளோ இருக்கும்?

மற்றப்படி இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு பிஎம்டபிள்யூ நிறுவனம் நிர்ணயிக்கவுள்ள எக்ஸ்-ஷோரூம் விலைகள் குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்திய சந்தையில் இந்த பிஎம்டபிள்யூ எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூசி, ஆடி இட்ரான் எஸ்யூவி & ஸ்போர்ட்பேக் மற்றும் ஜாகுவார் ஐ-பேஸ் உள்ளிட்டவை போட்டியாக விளங்கவுள்ளன. இதனால் ஐஎக்ஸ் மாடலின் ஆரம்ப விலையினை ரூ.1 கோடியில் எதிர்பார்க்கிறோம்.

Most Read Articles

English summary
All-electric BMW iX SUV India launch on December 11.
Story first published: Saturday, November 27, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X