புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

புதிய தலைமுறை ஃபோர்ஸ் குர்கா வாகனத்தின் இந்திய அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தினை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

2020 ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து புதிய தலைமுறை குர்கா வாகனத்தை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகப்படுத்திவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

ஆனால் கொரோனா வைரஸ் பரவலின் காரணமாக கிட்டத்தட்ட 18 மாதங்கள் தாமதமாக, வருகிற 2021 செப்டம்பர் 15ஆம் தேதி 2021 ஃபோர்ஸ் குர்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக ஒருவழியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள டீசர் படத்தில் புதிய குர்கா வாகனத்தை சற்று சிறியதாகவே பார்க்க முடிந்தாலும், அதன் மேற்கூரையில் பொருத்தப்பட்டுள்ள தண்டவாளங்களை தெளிவாக பார்க்க முடிகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

இதில் இருந்து இத்தகைய வசதி இந்த ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனத்தில் வழங்கப்பட உள்ளது மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில், ஆட்டோ எக்ஸ்போவின் போது கொண்டிருந்த ஆரஞ்ச் நிறத்தில் காட்சியளிக்கின்ற 2021 குர்கா வாகனம் பிஎஸ்6க்கு இணக்கமானதாக கொண்டுவரப்படுவது மட்டுமின்றி, தூய்மையான என்ஜின், அப்டேட் செய்யப்பட்ட ஸ்டைல் & பாதுகாப்பு அம்சங்களையும் பெற்று வரவுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

புதிய குர்கா பிஎஸ்6 வாகனத்தில் அப்டேட் செய்யப்பட்ட 2.6 லிட்டர், 4-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட உள்ளது. அதிகப்பட்சமாக 89 பிஎச்பி மற்றும் 260 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டீசல் என்ஜின் உடன் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட உள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

இந்த டிரான்ஸ்மிஷன் ஆனது டிரான்ஸ்ஃபர் கேஸ்-ஐ பயன்படுத்தி வாகனத்தின் அனைத்து சக்கரங்களுக்கும் என்ஜினின் ஆற்றலை வழங்கும். ஆஃப்-ரோடு வாகனம் என்பதை நியாயப்படுத்துவதற்காக மேனுவல் லாக்கிங் டிஃப்ரென்ஷியல் மற்றும் குறை-விகித கியர்பாக்ஸை 2021 குர்காவும் தொடரும் என்றே தெரிகிறது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

அதேபோல் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட ஸ்னோர்கில் காற்று-ஏற்பானையும் இந்த எஸ்யூவி வாகனத்தில் எதிர்பார்க்கிறோம். வெளிப்புற தோற்றத்தை பொறுத்தவரையில், சில கவனிக்கத்தக்க மாற்றங்களை புதிய தலைமுறை குர்காவில் எதிர்பார்க்கலாம்.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

ஆதலால் ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அளவிற்கு புத்துணர்ச்சியான தோற்றத்தில் 2021 குர்கா கொண்டுவரப்படும். இந்த வகையில் இதன் முன்பக்கத்தில் மறுவேலை செய்யப்பட்ட க்ரில், க்ரில் பகுதிக்கு இரு முனைகளிலும் ஒருங்கிணைக்கப்பட்ட எல்இடி டிஆர்எல்களுடன் புதிய ஹெட்லேம்ப்கள் மற்றும் புதிய டிசைனில் முன் பம்பர் உள்ளிட்டவை வழங்கப்பட உள்ளன.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

மற்றப்படி தனது பெட்டகம் வடிவத்தை விட்டுக்கொடுக்காமல், முந்தைய தலைமுறை போல் ஆஃப்-ரோடு வாகனங்களுக்கே உண்டான முரட்டுத்தனமான தோற்றத்தில் புதிய குர்கா வடிவமைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் புதிய தலைமுறை அப்கிரேடாக வாகனத்தை சுற்றிலும் கருப்பு நிற பிளாஸ்டிக் கிளாடிங்குகளை ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் கொண்டுவந்துள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

ஆட்டோ எக்ஸ்போவில் நிறுத்தப்பட்டு இருந்த புதிய குர்காவின் பின்பக்கத்தில் திருத்தப்பட்ட டெயில்லேம்ப்கள், டெயில்கேட்டில் பொருத்தப்பட்ட ஸ்பேர் சக்கரம், மறுவேலை செய்யப்பட்ட பின்பக்க பம்பர் மற்றும் முன் & பின்பக்கத்தில் ஸ்கஃப் தட்டுகள் பொருத்தப்பட்டு இருந்தன.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

புதிய குர்காவின் உட்புறம் மிகவும் மாடர்ன் தோற்றத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்படி டேஸ்போர்டின் மைய பகுதியில் புதிய தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் இரு அனலாக் டயல்களை இரு முனைகளிலும் கொண்ட பல-தகவல் திரை உடன் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டரை இதன் கேபின் பெறவுள்ளது.

புதிய ஃபோர்ஸ் குர்கா பிஎஸ்6 வாகனத்தின் அறிமுக தேதி அறிவிப்பு!! 18 மாத காத்திருப்பு முடிவுக்கு வருகிறது

இவற்றுடன் இரண்டாவது இருக்கை வரிசைக்கும் வட்ட வடிவிலான காற்று ஏற்பான்கள், டாப் வேரியண்ட்களில் க்ளைமேட் கண்ட்ரோல், மொபைல் சார்ஜிங் துளைகள் உள்ளிட்டவற்றையும் புதிய தலைமுறை குர்காவின் கேபினில் எதிர்பார்க்கிறோம். இந்த ஆஃப்-ரோடு வாகனத்தின் பின்பக்கத்தில் எதிரெதிரே பார்க்கப்பட்ட விதத்தில் இருக்கை அமைப்பு வழங்கப்பட உள்ளது. இவை போதாது என்போர்க்காக, தொழிற்சாலையில்-பொருத்தப்படும் ஆக்ஸஸரீகளையும் 2021 குர்காவை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க ஃபோர்ஸ் மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

Most Read Articles

English summary
Force Gurkha Reveal Date Announce.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X