Just In
- 46 min ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 48 min ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 1 hr ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 1 hr ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- Movies
ரம்ஜான் நாளில் சிம்பு ரசிகர்களுக்கு ட்ரீட்.. ஸ்பெஷல் அப்டேட்டை வெளியிட்டது படக்குழு!
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- News
எவரெஸ்ட் மலை சிகரத்தையும் விட்டு வைக்காத கொரோனா - மலையேற்ற வீரருக்கு தொற்று உறுதி
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Finance
900 வருட வரலாறுள்ள பிரம்மாண்ட சொத்தினை வாங்கிய முகேஷ் அம்பானி.. எங்கே தெரியுமா?
- Lifestyle
கொரோனா சோதனை முடிவு நெகட்டிவாக வந்தாலும் இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு ஆபத்துத்தானாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உள்ளூரில் கட்டமைக்கப்பட்ட ஜீப் ரேங்லர் அறிமுகம்... அடேங்கப்பா நம்ப முடியாத வகையில் குறைந்த விலை...
உள்ளூரில் கட்டமைக்கப்பட்ட ரேங்லர் எஸ்யூவி காரை ஜீப் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை நம்ப முடியாத வகையில் குறைந்திருப்பதாக கூடுதல் சிறப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த மேலும் பல முக்கிய தகவல்களை இப்பதிவில் காணலாம்.

பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஜீப், மிக சமீபத்தில் தனது குறிப்பிட்ட தயாரிப்புகளை உள் நாட்டிலேயே (இந்தியாவில்) வைத்து கட்டமைக்க இருப்பதாக தகவல் வெளியிட்டிருந்தது. இதனடிப்படையில், குறிப்பிட்ட சில பிரபலமான மாடல்களின் கட்டமைப்பு பணிகளையும் நிறுவனம் இந்தியாவில் தொடங்கியது.

அந்தவகையில், முழுக்க முழுக்க இந்தியாவிலேயே வைத்து கட்டமைக்கப்பட்ட கார் மாடலான ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரையே நிறுவனம் தற்போது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு அறிமுகமாக விலையாக ரூ. 53.90 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.

இந்த விலை இதற்கு முன்னதாக விற்பனைச் செய்யப்பட்டு வந்ததைக் காட்டிலும் மிக குறைந்த விலை என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, சுமார் 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையிக்கின்றது. இக்காரை புக் செய்த வாடிக்கையாளர்களுக்கு இம்மாதத்தில் இருந்தே டெலிவரி கொடுக்கப்பட இருப்பதாக ஜீப் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

ஜீப் நிறுவனம் இந்தியாவில் கார் கட்டமைப்பு பணியைத் தொடங்கி விற்பனைக்குக் கொண்டு வரும் முதல் வாகனம் ரேங்லர் எஸ்யூவி காரே ஆகும். இப்பணிகளுக்கான உற்பத்தி ஆலை மஹாராஷ்டிரா மாநிலம் புனேவில் உள்ள ரஞ்ஜன்காவுனில் செயல்பட்டு வருகின்றது.

ரேங்லர் எஸ்யூவியைத் தொடர்ந்து காம்பஸ் எஸ்யூவி காரையும் உள்ளூர் உற்பத்தி பாகங்களைக் கொண்டு உருவாக்கும் பணியில் ஜீப் ஈடுபட்டு வருகின்றது. ஆகையால் இந்த காரும் மிக விரைவில் குறைந்த விலையில் விற்பனைக்கு வர இருப்பது உறுதியாகியுள்ளது.

இதுதவிர, இந்த அமெரிக்க கார் உற்பத்தி நிறுவனம் ஜீப் கிராண்ட் செரோக்கி எஸ்யூவி காரின் கட்டமைப்பையும் இந்தியாவிலேயே தொடங்க திட்டமிட்டிருக்கின்றது. இந்த பணிகள் 2022ம் ஆண்டில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜீப் ரேங்லர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 262 எச்பி மற்றும் 400 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது. இந்த எஞ்ஜினைக் கட்டுப்படுத்துவதற்காக 8 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இத்துடன், அதிக எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும் நோக்கில் சில தனித்துவமான தொழில்நுட்ப வசதிகளை ஜீப் பயன்படுத்தியுள்ளது.

இத்துடன், ஸ்டாப்-ஸ்டார்ட் சிஸ்டமும் இக்காரில் இணைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த காரை மார்ச் 15ம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக ஜீப் அறிவித்திருந்தது. ஆனால், கோவிட்-19 வைரசால் நிலவி வரும் சில இக்கட்டான சூழ்நிலை இக்காரின் அறிமுகத்தை தாமதாக்கியது.

இந்த நிலையிலேயே இன்று (மார்ச் 17) ஜீப் ரேங்லர் எஸ்யூவி கார் அறிமுகம் அரங்கேறியிருக்கின்றது. புதிய ஜீப் ரேங்லர் எஸ்யவி கார் இந்தியாவில் லேண்ட் ரோவர் டிஃபெண்டர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி 350டி ஆகிய சொகுசு கார்களுக்கு போட்டியளிக்கும் வகையில் விற்பனைக்குக் களமிறங்கியிருக்கின்றது.

ஜீப் நிறுவனம் இந்த கார் கட்டமைப்புகளை இந்தியாவில் கடந்த பிப்ரவரி மாதமே தொடங்கியது. இந்த நிலையில், மிக விரைவில் இக்காரை விற்பனைக்கு கொண்டு வந்திருக்கின்றது. இதுதவிர, ரேங்லர் 80வது ஆண்டுவிழா (Anniversary) எனும் சிறப்பு எடிசனையும் நிறுவனம் விற்பனைச் செய்து வருகின்றது.

ஜீப் ரேங்லர் எஸ்யூவி சொகுசு காரில் லெதர் இருக்கை, சாஃப்ட் டச் டேஷ்போர்டு, யுகனெக்ட் இன்ஃபோடெயின்ட் சிஸ்டம், ஆப்பிள் கார்ப்ளே மற்றும் ஆட்டோ ஆண்ட்ராய்டு வசதிக் கொண்ட திரை, ஸ்டியரிங் வீலில் பல்வேறு விதமான கருவிகளின் கட்டுப்பாட்டு பொத்தான் என எக்கசக்க அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன.

இதுபோன்ற பிரமாண்ட அம்சங்களைக் கொண்டிருக்கின்ற காரணத்தினால்தான் இக்கார் ஆடி க்யூ5, வால்வோ எக்ஸ்சி60 மற்றும் பிஎம்டபிள்யூ 5 செரீஸ் ஆகிய கார்களுக்கும் போட்டியாக இருக்கின்றது. புதிய ஜீப் ரேங்லர் ஒட்டுமொத்தமாக ஐந்துவித நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும். அவை, பிரைட் வெள்ளை, ஸ்டிங் கிரே, கிராணைட் கிரிஸ்டல், கருப்பு, ஃபையர் கிராக்கர் சிவப்பு ஆகியவை ஆகும்.