விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் ரூ.8.48 லட்சம் என்ற ஆரம்ப விலையில் புதிய பொலிரோ நியோ காரை அறிமுகப்படுத்தியது. முந்தைய டியூவி300 மாடலுக்கு மாற்றாக கொண்டுவரப்பட்டுள்ள பொலிரோ நியோ ஏற்கனவே டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கிவிட்டது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

அவற்றை பற்றி நமது செய்தி தளத்தில் கூட பதிவிட்டு இருந்தோம். ஆனால் அவை அனைத்துமே புதிய பொலிரோ நியோவின் டாப் வேரியண்ட்களாகும். இந்த புதிய மஹிந்திரா வாகனம் என்4, என்8, என்10 மற்றும் என்10(O) என நான்கு விதமான வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இதில் விலை குறைவான என்4 வேரியண்ட்டை பற்றி பெரிய அளவில் நாம் பார்க்கவில்லை. இந்த குறையை சரிச்செய்யவே பொலிரோ நியோவின் என்4 வேரியண்ட்டை விவரிக்கும் வீடியோ ஒன்று அமர் டிராயன் என்ற யுடியூப் சேனலின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

பொலிரோ நியோவின் மற்ற வேரியண்ட்களுடன் ஒப்பிடும்போது ஆரம்ப நிலை என்4 வேரியண்ட் வெளிப்பக்கத்தை சுற்றிலும் க்ரோம் பாகங்களை இழந்துள்ளதை தெளிவாக பார்க்க முடிகிறது. தேன்க்கூடு டிசைனிலான முன்பக்க க்ரில் அமைப்பு பளபளப்பான கருப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

எல்இடி டிஆர்எல்கள் மற்றும் ஃபாக் விளக்குகள் போன்றவை இந்த மலிவான பொலிரோ நியோவில் இல்லை. பக்கவாட்டிற்கு வந்தால், 15 இன்ச் இரும்பு சக்கரங்களில் மூடிகள் எதுவும் வழங்கப்படவில்லை. அதேபோல் மற்ற வேரியண்ட்களில் வழங்கப்படும் பக்கவாட்டு படிக்கட்டும் என்4 வேரியண்ட்டில் தவிர்க்கப்பட்டுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

மற்றப்படி கருப்பு நிற கதவு கைப்பிடிகள் மற்றும் பிளாஸ்டிக் க்ளாடிங் அப்படியே தொடரப்பட்டுள்ளன. பின்பக்கத்தில் பின்கதவில் ஸ்பேர் சக்கரமும், அதற்கு மேலே நிறுத்து விளக்கும் வழங்கப்பட்டுள்ளன. ஆனால் ஆண்டென்னா, பின் ஜன்னல் கண்ணாடி வைபர் & டிஃபாக்கர் உள்ளிட்டவை என்4-இல் இல்லை.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

உட்புறத்தில் விலை குறைவான வேரியண்ட்டாக இருப்பினும் இதன் கேபினும் இரட்டை நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் பவர் ஜன்னல் கண்ணாடிகளையும் இது கொண்டுள்ளது. இவற்றினால் இது மலிவான பொலிரோ நியோ என்பதையே ஒரு நிமிடம் மறந்துவிடுகிறோம்.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

ஆனால் கேபினில் வழங்கப்படாத பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் திரை, மேனுவல் டிம்மிங் ஐஆர்விஎம்கள் உள்ளிட்டவை இது என்4 வேரியண்ட் என்பதை நமக்கு உணர்த்துகின்றன. பழுப்பு நிற துணியால் வடிவமைக்கப்பட்டுள்ள இதன் இருக்கை அமைப்பில், இரண்டாவது இருக்கை வரிசைக்கும் தலைக்கான தலையணை வழங்கப்பட்டுள்ளது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

இவற்றுடன் ஆரம்ப நிலை பொலிரோ நியோ வேரியண்ட்டாக இருப்பினும் இரட்டை காற்றுப்பைகள், ஏபிஎஸ், இபிடி, பின் பார்க்கிங் சென்சார்கள் உள்ளிட்டவை இதிலும் கொடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு மலிவு வேரியண்ட்டிலும் ஏகப்பட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளதால் பிரிவில், கொடுக்கும் பணத்திற்கு ஏற்ற வாகனமாக பொலிரோ நியோ பார்க்கப்படுகிறது.

விலை குறைவான மஹிந்திரா பொலிரோ நியோ காரிலேயே இவ்வளவு வசதிகளா!! விவரிக்கும் வீடியோ இதோ!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் மற்றும் ஸ்கார்பியோ மாடல்களின் மூன்றாம் தலைமுறை லேடார் ஃப்ரேம் சேசிஸில் புதிய பொலிரோ எஸ்யூவி வாகனம் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் 1.5 லிட்டர் எம்ஹாவ்க் டீசல் என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படுகிறது, ஆட்டோமேட்டிக் தேர்வு இல்லை.

Most Read Articles
மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo: What all does the most affordable, base N4 trim offer?.
Story first published: Wednesday, July 21, 2021, 2:37 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X