புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் விலை குறைவான எஸ்யூவி மாடலாக வர இருக்கும் இ.க்யூ.ஏ. எஸ்யூவி வெளியிடப்பட்டுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி காரின் முக்கிய அம்சங்கள் மற்றும் இதர விபரங்களை விரிவாக இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

சொகுசு கார் தயாரிப்பில் சிறந்து விளங்கும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் EQ என்ற குடும்ப வரிசையில் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில், தனது ஜிஎல்ஏ காம்பேக்ட் எஸ்யூவி அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள EQA250 எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலை முதல்முறையாக பொது பார்வைக்காக வெளியிட்டுள்ளது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இரண்டாம் தலைமுறை மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்ஏ அடிப்படையிலான மாடல் என்பதால் தோற்றத்தில் அதிக ஒற்றுமைகள் உள்ளன. இருப்பினும், சில மாறுதல்களுடன் இந்த எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் தனித்துவப்படுத்தப்பட்டுள்ளது. முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி டெயில் லைட் பார் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த காரின் கேபின் ஜிஎல்ஏ எஸ்யூவியை போலவே இருக்கிறது. இரண்டு திரைகளுடன் கூடிய டேஷ்போர்டு அமைப்பு முக்கிய கவர்ச்சியாகவும், அதிக தகவல்களையும், பொழுது போக்கு வசதிகளையும் பெறுவதற்கு உதவும். எலெக்ட்ரிக் ஆர்ட் மற்றும் ஏஎம்ஜி என இரண்டு விதமான இன்டீரியர் தீம் கொண்ட தேர்வுகளில் வர இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி காரில் 188 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்ட மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த கார் ஃப்ரண்ட் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

இந்த காரில் 66.5kWh பேட்டரி பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும் பட்சத்தில், 486 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

சிறிது காலம் கழித்து இதன் மற்றொரு லாங் ரேஞ்ச் வேரியண்ட்டும் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த வேரியண்ட்டானது இரண்டு மின் மோட்டார்கள் கொண்டதாக இருப்பதுடன், 500 கிமீ தூரம் வரை பயணிக்கும் என்று சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

புதிய இக்யூஏ எலெக்ட்ரிக் காரின் பேட்டரியை டிசி ஃபாஸ்ட் சார்ஜர் பயன்படுத்தினால், 30 நிமிடங்களில் 80 சதவீதம் அளவுக்கு சார்ஜ் ஏற்றிவிட முடியும். சாதாரண 11kW ஏசி சார்ஜர் பயன்படுத்தினால் 6 மணிநேரம் பிடிக்கும்.

புதிய மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஏ எலெக்ட்ரிக் எஸ்யூவி வெளியீடு... முக்கிய அம்சங்கள் ஒரு பார்வை!

கடந்த ஆண்டு தனது EQC எலெக்ட்ரிக் காரை மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் களமிறக்கியது. முதல் லாட் முழுவதும் விற்று தீர்ந்துள்ளதாக தெரிவித்தது. எலெக்ட்ரிக் காருக்கு இருக்கும் குறிப்பிடத்தக்க வர்த்தக வளர்ச்சியை மனதில் வைத்து, EQA எலெக்ட்ரிக் காரையும் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் கொண்டு வருவதற்கு பரிசீலிக்கும் என்று நம்பலாம். அடுத்த ஆண்டு இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

English summary
Mercedes Benz has revealed all electric EQA SUV globally.
Story first published: Thursday, January 21, 2021, 10:16 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X