கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி கார் அறிமுகம்!

ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரின் தயாரிப்பு நிலை வெர்ஷன் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ரெனால்ட் கைகர் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவியின் கான்செப்ட் வெர்ஷன் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தயாரிப்பு நிலை வெர்ஷன் இன்று (ஜனவரி 28) அதிகாரப்பூர்வமாக பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

மிகவும் சவால் நிறைந்த சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி செக்மெண்ட்டில் ரெனால்ட் கைகர் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. மாருதி சுஸுகி விட்டாரா பிரெஸ்ஸா, கியா சொனெட், ஹூண்டாய் வெனியூ, டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி300, ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட், டொயோட்டா அர்பன் க்ரூஸர் மற்றும் கடந்த டிசம்பர் மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட நிஸான் மேக்னைட் உள்ளிட்ட கார்களுடன் ரெனால்ட் கைகர் போட்டியிடும்.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

க்விட் மற்றும் ட்ரைபர் கார்களை போல், ரெனால்ட் கைகர் காரும் முதலில் இந்திய சந்தையில்தான் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. அத்துடன் சர்வதேச சந்தைகளுக்காக இந்தியாவில் இந்த காம்பேக்ட் எஸ்யூவியை உற்பத்தி செய்யவும் ரெனால்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. கிட்டத்தட்ட கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்ட கான்செப்ட் மாடலை போலவேதான் இன்று வெளியிடப்பட்டுள்ள தயாரிப்பு நிலை மாடல் உள்ளது.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

தயாரிப்பு நிலை மாடலானது, கான்செப்ட் மாடலை 80 சதவீதம் ஒத்திருக்கும் என ரெனால்ட் நிறுவனம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், எல்இடி ஹெட்லேம்ப்கள், 16 இன்ச் டைமண்ட் கட் அலாய் வீல்கள், 'C' வடிவ எல்இடி டெயில்லைட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த காரின் பின் பகுதியில் ஸ்போர்ட்டியான ஸ்பாய்லர் வழங்கப்பட்டுள்ளது. ஐஸ் கூல் ஒயிட், பிளானெட் க்ரே, மூன்லைட் க்ரே, ப்ரவுன், காஸ்பியன் ப்ளூ, ரேடியண்ட் ரெட் மற்றும் டயூயல் டோன் வண்ண தேர்வுகள் உள்பட மொத்தம் 8 வண்ண தேர்வுகளில் இந்த கார் கிடைக்கும்.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

இந்த காரின் பூட் ஸ்பேஸ் 405 லிட்டர்கள். இது இந்திய செக்மெண்ட்டில் தாராளமான பூட் ரூம் இட வசதிகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதே சமயம் இந்த காம்பேக்ட் எஸ்யூவி 205 மிமீ க்ரவுண்ட் க்ளியரன்ஸை பெற்றுள்ளது. இந்த காரின் கேபினை பொறுத்தவரை, ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்பிளே வசதிகளுடன் 8 இன்ச் டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

அதே சமயம் 7 இன்ச் டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் வயர்லெஸ் போன் சார்ஜர், பல்வேறு கண்ட்ரோல்களுக்கான ஸ்விட்ச்கள் உடன் கூடிய மூன்று ஸ்போக் ஸ்டியரிங் வீல், PM 2.5 ஏர் ஃபில்டர், கீ லெஸ் எண்ட்ரி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், ஆம்பியண்ட் லைட்டிங் உள்ளிட்ட வசதிகளையும் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி பெற்றுள்ளது. இந்த காரில் ட்யூயல்-டோன் கேபின் வழங்கப்படுகிறது.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

அதே சமயம் ரெனால்ட் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி காரில், நார்மல், ஈக்கோ மற்றும் ஸ்போர்ட்ஸ் என மொத்தம் மூன்று டிரைவிங் மோடுகள் வழங்கப்படும். நிஸான் மேக்னைட் காம்பேக்ட் எஸ்யூவி காரில் உள்ள அதே 1.0 லிட்டர் டர்போசார்ஜ்டு மூன்று சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ரெனால்ட் கைகர் காரிலும் வழங்கப்படவுள்ளது. அதே சமயம் ரெனால்ட் கைகர் காரின் விலை குறைந்த வேரியண்ட்களில், 1.0 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் தேர்வு வழங்கப்படும். இதில், டர்போசார்ஜ்டு பெட்ரோல் இன்ஜின் 100 பிஎஸ் பவரையும், 160 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. அதே சமயம் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் அதிகபட்சமாக 72 பிஎஸ் பவரையும், 96 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. டிரான்ஸ்மிஷனை பொறுத்தவரை 5 ஸ்பீடு மேனுவல், ஏஎம்டி மற்றும் சிவிடி தேர்வுகள் வழங்கப்படும்.

கண்ணை கவரும் டிசைன், அட்டகாசமான வசதிகள்... ரெனால்ட் கைகர் காம்பேட் எஸ்யூவி கார் அறிமுகம்!

ஆனால் கைகர் காம்பேக்ட் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி மற்றும் முன்பதிவு விபரங்களை ரெனால்ட் நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. எனினும் வெகு விரைவில் ரெனால்ட் கைகர் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிஸான் மேக்னைட்டை போல் சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டால், ரெனால்ட் கைகர் நல்ல வரவேற்பை பெறும் என்பதில் சந்தேகமில்லை.

Most Read Articles
English summary
All-New Renault Kiger Unveiled In India: Design, Features, Pics, Engine Details & More. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X