மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

ஆஸ்திரேலியா எதிரான டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டதற்காக இந்திய ஆண்கள் கிரிக்கெட் அணியின் குறிப்பிட்ட ஆறு வீரர்களுக்கு தார் வாகனங்களை வழங்கவுள்ளதாக மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவரான ஆனந்த் மஹிந்திரா இந்த ஆண்டு துவக்கத்தில் அறிவித்து இருந்தார்.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இந்த ஆறு வீரர்கள் நடராஜன், சுப்மான் கில், வாஷிங்டன் சுந்தர், மொகமது சிராஜ், ஷர்துல் தாகூர் மற்றும் நவ்தீப் சைனி ஆவர். நம்மூர் நடராஜன் சிவப்பு நிறத்தில் தார் வாகனத்தை பெற்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இந்த ஆறு வீரர்களில் நவ்தீப் சைனி மற்றும் சுப்மான் கில் தவிர்த்து மற்ற அனைவருமே தங்களது தார் வாகனங்களை டெலிவிரி எடுத்துவிட்டனர். தற்போது சுப்மான் கில்லும் தனது தாரை டெலிவிரி எடுத்துள்ளார்.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

அவர் டெலிவிரி எடுத்தார் என்று சொல்வதை காட்டிலும் அவரது குடும்பத்தினர் வந்து டெலிவிரி எடுத்தனர் என்று தான் சொல்ல வேண்டும். ஐபிஎல் போட்டிகளில் கலந்து கொண்டு இருப்பதால் சுப்மான் கில் வரவில்லை.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இருப்பினும் சுப்மான் கில் தனது டுவிட்டர் பக்கத்தில், மஹிந்திரா தாரை டெலிவிரி எடுப்பது மிக சிறந்த தருணமாகும். இத்தகைய தருணத்தில் கலந்து கொள்ளவே விரும்பினேன். ஆனந்த் மஹிந்திரா சார் உங்களது இந்த அன்பளிப்பிற்கு நன்றி.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இந்தியாவிற்காக விளையாடுவது மரியாதைக்குரியது. நான் களத்தில் இறங்கும் போதெல்லாம் எனது சிறந்ததை வழங்க முயற்சிப்பேன் என குறிப்பிட்டு டெலிவிரி பெறும் போது எடுக்கப்பட்ட படத்தை பதிவிட்டுள்ளார்.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

சுப்மான் கில் டெலிவிரி எடுத்திருப்பது கருப்பு நிற தாரின் டாப் எல்.எக்ஸ் வேரியண்ட்டாகும். மேற்கூரை, நீக்க முடியாத வகையில் ஹார்ட் டாப்-ஆக உள்ளது. வாகனத்தில் வழங்கப்பட்டுள்ள என்ஜின், ட்ரான்ஸ்மிஷன் குறித்த விபரங்களை சுப்மான் கில் வெளியிடவில்லை.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

புதிய தலைமுறை மஹிந்திரா தார் கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்திய வாடிக்கையாளர்களின் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல வரவேற்பை பெற்றுவரும் தார் ஆஃப்-ரோட்டிற்கும் ஏற்ற வாகனமாகும்.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

அதுமட்டுமில்லாமல் இந்தியாவில் மலிவான விலையில் கிடைக்கும் 4X4 எஸ்யூவி வாகனமும் மஹிந்திரா தார் தான். முற்றிலும் புதிய ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால், முந்தைய தலைமுறையை காட்டிலும் சற்று நீளமானது மற்றும் அகலமானது.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இருப்பினும் மஹிந்திரா தார் வாகனங்களுக்கே உண்டான பெட்டகம் வடிவத்தை இதன் புதிய தலைமுறையும் தொடர்ந்துள்ளது. தாரின் உட்புறத்தில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் மேற்கூரையில் பொருத்தப்பட்ட ஸ்பீக்கர்கள் சிறப்பம்சங்களாக வழங்கப்படுகின்றன.

மஹிந்திரா தாரை டெலிவிரி எடுத்த இளம் இந்திய கிரிக்கெட் வீரர்!! ஆனந்த் மஹிந்திராவின் அன்பளிப்பு!

இவற்றுடன் பல-செயல்பாட்டு ஸ்டேரிங் சக்கரம், க்ரூஸ் கண்ட்ரோல், நேருக்கு நேரான பின் இருக்கைகளை பெற்றுள்ள புதிய தலைமுறை தாரை வாடிக்கையாளர்கள் ஹார்ட் மேற்கூரை மட்டுமின்றி நீக்கக்கூடிய சாஃப்ட் மேற்கூரை தேர்விலும் வாங்கலாம்.

Most Read Articles

English summary
Shubman Gill receives mahindra thar gift from anand mahindra.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X