பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

கை விடப்பட்ட வாகன உதிரி பாகங்களை கொண்டு மினி காரை ஓர் நபர் உருவாக்கியிருக்கின்றார். இந்த காரை தங்களுக்கு ஒப்படைத்தால் புத்தம் புதிய மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero) காரை வழங்க இருப்பதாக ஆனந்த் மஹிந்திரா ட்வீட் செய்திருக்கின்றார். இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

மஹாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் நபர் கை விடப்பட்ட பழைய உலோகங்களைக் கொண்டு சிறிய நான்கு சக்கர வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார். இந்த தனித்துவமான படைப்பு நெட்டிசன்களை வெகுவாகக் கவர்ந்திருக்கின்றது. நெட்டிசன்களை மட்டுமில்லைங்க இணையத்தில் மிகவும் ஆக்டிவாக தென்படும் நபரான பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திராவும் இதனை வெகுவாகப் பாராட்டி இருக்கின்றார்.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

வழக்கமான நெட்டிசன்களைப் போலவே இணையத்தில் மிகவும் துடிப்பாக இருக்கும் நபர்களில் ஒருவராக ஆனந்த் மஹிந்திரா இருக்கின்றார். இவர் கண்களில் படும் புதுமைகளுக்கு எப்போதும் பாராட்டு உண்டு. அந்தவகையிலேயே, கை விடப்பட்ட வாகன கழிவுகளால் உருவாக்கப்பட்ட நான்கு சக்கர வாகனம் பற்றிய வீடியோ அவரது கண்களில் பட்டிருக்கின்றது.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

அந்த வீடியோவை உடனடியாக பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, அதனை உருவாக்கிய நபருக்கு பெரும் பாராட்டுக்களை தெரிவித்தார். யுட்யூப் சேனல் ஒன்று வெளியிட்டிருக்கும் தகவலின்படி காரை உருவாக்கியவரின் பெயர் தத்தேத்ரயா லோஹர் என்பது தெரிய வந்திருக்கின்றது. பெரியளவில் படித்திராத இந்த நபர் தனது மகனின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் விதமாக இக்காரை வடிவமைத்திருக்கின்றார்.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

இதுவே தற்போது இணையத்தில் பலரின் பாராட்டை அவருக்கு பெற்றுக் கொடுக்க காரணமாக அமைந்திருக்கின்றது. இந்த வீடியோவை தனது சொந்த டுவிட்டர் கணக்கில் பகிர்ந்த ஆனந்த் மஹிந்திரா, "இந்த படைப்பு எந்த விதிமுறைகளையும் பின்பற்றி உருவாக்கப்படவில்லை. அதேநேரத்தில் இதனை படைத்தவரின் புத்தி கூர்மை மற்றும் திறன்களைப் பாராட்டுவதை நான் ஒருபோதும் நிறுத்த மாட்டேன்" என்றார்.

தொடர்ந்து, மினி காரில் பயன்படுத்தப்பட்டிருப்பது மஹிந்திராவின் ஜீப் வாகனத்தை குறிக்கும் வகையில் இருப்பதையும் அவர் அவரது பதிவில் குறிப்பிட்டிருக்கின்றார். ஆகையால், இதனை பலர் மினி ஜீப் என்றே குறிப்பிட தொடங்கியிருக்கின்றனர். இந்த வாகனம் குறித்த வீடியோ ஒட்டுமொத்தமாகவே 45 செகண்டுகள் மட்டுமே காட்சியைக் கொண்டிருக்கின்றது.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

அவ்வீடியோவில் வாகனம் எப்படி இயங்குகின்றது என்பதை தத்தேத்ரயா லோஹர் செயல்முறை செய்து காண்பிக்கின்றார். இந்த வாகனத்தின் உருவாக்கம் வெறும் கை விடப்பட்ட பொருட்களால் மட்டுமே உருவாக்கப்படவில்லை. சில பொருட்களை அவர் பணம் கொடுத்து பெற்று, அவ்வாகனத்தை உருவாக்கியிருக்கின்றார்.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

அந்தவகையில், மினி ஜீப்பின் உருவாக்கத்திற்காக அவர் ரூ. 60 ஆயிரம் வரை செலவு செய்திருக்கின்றார். இதனை அதே வீடியோவில் அவர் தெரிவித்திருக்கின்றார். மினி காரில் கிக்-ஸ்டார்ட் செய்யும் வசதிக் கொண்ட மோட்டார் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் இருசக்கர வாகனத்துடையது என கூறப்படுகின்றது.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

ஆனால், அது எந்த பைக் மாடலுடையது என்பதை அவர்கள் குறிப்பிடவில்லை. அதேநேரத்தில் இந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, ஆனந்த் மஹிந்திரா செய்த டுவீட் 14 ஆயிரத்திற்கும் அதிகமான லைக்ஸ்களையும், 1300 மறு ட்வீட்டுகளையும் பெற்றிருக்கின்றது.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

ஆனந்த் மஹிந்திரா மினி ஜீப்பினை உருவாக்கியவரை வெறும் பாராட்டியதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. அவருக்கு சிறப்பு சன்மானம் ஒன்றையும் அறிவித்திருக்கின்றார். அதாவது, தனது நிறுவனத்தின் பிரபல தயாரிப்புகளில் ஒன்றான பொலிரோ காரை தத்தேத்ரயா லோஹருக்கு பரிசாக வழங்க இருப்பதாக அறிவித்திருக்கின்றார்.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

ஆனால், இதற்கு ஒரே ஒரு கன்டிஷனை அவர் போட்டிருக்கின்றார். தத்தேத்ரயா உருவாக்கிய மினி ஜீப்பினை தங்களிடம் எக்ஸ்சேஞ்ஜ் செய்தால் பொலிரோ கார் வழங்கப்படும் என அவர் தெரிவித்திருக்கின்றார். மேலும், அந்த மினி ஜீப்பினை மஹிந்திரா ரிசர்ச் வேல்லியில் அரிய வாகனங்களில் ஒன்றாக காட்சிப்படுத்த இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றார்.

பொலிரோ காரை இலவசமா தர்றோம்... இந்த காரை கொடுத்துடுங்க! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை!

இது தத்தேத்ரயா லோஹரின் தயாரிப்பிற்கு மேலும் பல மடங்கு புகழை சேர்க்கும். அதேவேலையில், இந்த வாகனத்தை தத்தேத்ரயா லோஹரால் தொடர்ச்சியாக பயன்படுத்த முடியாது. இது ஓர் மாற்றியமைக்கப்பட்ட வாகனம் என்பதனால், அதனை சட்டப்படி சாலையில் இயக்குவது குற்றமாகும். ஆகையால், இதனை சாலையில் அதிகாரிகள் கண்டால் அதன் மீது நடவடிக்கைப் பாயலாம். இதற்கு முன்னரே இக்காரை எக்ஸ்சேஞ்ச் செய்துகொள்ளுமாறு ஆனந்த் மஹிந்திரா கோரிக்கை விடுத்திருக்கின்றார்.

Most Read Articles
English summary
Anand mahindra offers bolero to who builds vehicle using abandoned parts
Story first published: Wednesday, December 22, 2021, 17:29 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X