ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கும் Apple காரின் அறிமுகம் குறித்த முக்கிய தகவல்கள் இந்த 2021ஆம் வருடத்திற்குள் அறிவிக்கப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

ஆட்டோமொபைல் துறையில் நுழைவது குறித்து Apple நிறுவனம் இந்த 2021ஆம் ஆண்டு முடிவதற்கு உள்ளாக தனது நிலைப்பாட்டை அறிவிக்கலாம் என நோபல் பரிசு வென்றவரும், தற்சமயம் எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்படும் லித்தியம்-இரும்பு பேட்டரிகளுக்கு முன்னோடியுமான Akira Yoshino தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

2019ல் வேதியியலில் நோபல் பரிசு பெற்றவரான Akira Yoshino ஜப்பானியன் இரசாயன நிறுவனமான அசோஹி கேசி-இன் கௌரவ உறுப்பினராக இருக்கிறார். எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்து சமீபத்தில் பேட்டியளித்த Akira Yoshino, பல தகவல் தொழிற்நுட்ப துறை நிறுவனங்கள் ஆட்டோமொபைல் துறையில் நுழைய தயாராகி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

இதில் Apple நிறுவனமும் ஒன்று என ஸ்பெஷலாக குறிப்பிட்டு பேசிய Akira Yoshino, "அவர்கள் என்ன செய்ய போகிறார்கள்? விரைவில் இது தொடர்பான ஒரு அறிவிப்பை வெளியிடுவார்கள் என நான் நினைக்கிறேன். எந்த மாதிரியான காரை அவர்கள் அறிவிக்கவுள்ளனர்? எந்த வகையை சேர்ந்த பேட்டரி? அவர்கள் அநேகமாக 2025இல் வர விரும்புகிறார்கள் போல.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

இதுதான் அவர்களது விருப்பமும் என்றால், இந்த வருட இறுதிக்குள் அவர்கள் ஏதாவது ஒரு அறிவிப்பை அறிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். இது எனது தனிப்பட்ட கருத்தே ஆகும்" என்றார். 2014இல் இருந்து Apple நிறுவனம் எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுப்பட்டு வருகிறது. அதன் நாட்டில், திட்டம் Titan என்ற கான்செப்ட்டை Apple நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

Apple பிராண்டில் இருந்து புதிய கார் வெளிவருவதற்கான அனைத்து வேலைகளும் ஒருபக்கம் நடைபெற்று கொண்டிருக்கிறது. மிகவும் நேர்த்தியான பேட்டரி தொழிற்நுட்பத்தை Apple நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், கார் தயாரிப்பிற்காக இந்த நிறுவனம் சில தென்கொரிய கார் தயாரிப்பு நிறுவனங்களுடன் ஆலோசித்து வருகிறது.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

இது Hyundai நிறுவனமாக இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. ஏனெனில் Hyundai-இன் E-GMP platform-ஐ Apple நிறுவனத்திற்கு பிடித்துள்ளது. இதனை கலிஃபோரினிய எலக்ட்ரிக் கார் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஒன்றுடன் இணைந்துதான் Hyundai உருவாக்கியுள்ளது. Canoo என பெயர் கொண்ட இந்த ஸ்டார்ட்-அப் நிறுவனத்தை சொந்தமாக்க Apple முயற்சித்தது, ஆனால் அது நடக்கவில்லை.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

இருப்பினும், BMW எலக்ட்ரிக் கார்களின் உருவாக்கத்திற்கு முக்கிய காரணமாக விளங்கிய Canoo-வின் துணை நிறுவனரை Apple நிறுவனம் பணியில் அமர்த்தியது. அத்தோடு, முன்னாள் Porsche மற்றும் Tesla அதிகாரிகள் தான் Apple நிறுவனத்தின் முக்கிய பொறுப்புகளில் இருக்கின்றனர்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

மேலும், Apple Watch-இன் தயாரிப்பு தலைவரான Kevin Lynch-ஐயும் தனது கார் தயாரிப்பு பணிகளில் Apple இணைத்து கொண்டுள்ளது. Kevin Lynch முன்பு இந்த Apple கார் தயாரிப்பு திட்டத்திற்காக Adobe-இல் தலைமை தொழிற்நுட்ப அதிகாரியாக இருந்தார். நோபல் பரிசு பெற்ற Akira Yoshino கூறுவதைபோல், Apple கார் வெளிவருவதற்கு எப்படியிருந்தாலும் 2024-25 ஆகிவிடும்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

முதல் காரில் இருந்தே எலக்ட்ரிக்கில் தான் Apple நிறுவனம் கொண்டுவரவுள்ளது. இதனால் Apple கார்கள் எதிர்காலத்தில் Tesla எலக்ட்ரிக் கார்களுக்கு நேரடி போட்டி மாடல்களாக விளங்கலாம். இவற்றுடன், கார்களுக்கான வயர் இல்லா சார்ஜிங் மற்றும் பேட்டரி தொழிற்நுட்பங்களில் புதுமைகள் குறித்தும் இந்த பேட்டியில் Akira Yoshino பேசியுள்ளார்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

வயர் இல்லா சார்ஜிங் சாத்தியமானது தான் என கூறிய அவர், இதனை பார்க்கிங் பகுதியிலும், ஏன் சாலையில் கூட பெறலாம் என்கிறார். அதேபோல் தானியங்கி கார்களின் மீதும் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ள Akira Yoshini, தானியங்கி வாகனங்கள் நடைமுறைக்கு வந்தால், அது மக்க்ளின் வாகன பயன்பாட்டில் மிக பெரிய மாற்றத்தை கொண்டுவந்துவிடும் என தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் காரை பற்றிய அறிவிப்பு இந்த ஆண்டிற்குள் வெளிவரும்!! விற்பனை 2025ல் இருந்துதான், சொன்னது யார் தெரியுமா?

மேலும் அவர் பேசுகையில், 2030 முதல் 2050ஆம் காலக்கட்டத்தில் எரிபொருளை தானியங்கி வாகனங்கள் மூலமாக மீண்டும் பயன்படுத்தும் வழக்கம் வரலாம். ஏனெனில் செலவுகள் மற்றும் தொழிற்நுட்பம் போன்ற பிரச்சனைகளுக்கு அதற்குள் தீர்வுகள் காணப்பட்டுவிடும் என தெரிவித்தார்.

Most Read Articles
English summary
Apple Car To Be Announced In 2021, Says Noble Prize Winner Akira Yoshino.
Story first published: Saturday, August 28, 2021, 3:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X