உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

உலகின் முதல் எலக்ட்ரிக் தீயணைப்பு வாகனம் அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் வாகனத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

இந்த உலகின் முதல் எலக்ட்ரிக் தீயணைப்பு வாகனம் வால்வோ க்ரூப் உடன் இணைந்து தீயணைப்பு வாகனங்களை தயாரிக்கும் ரோசென்பாயர் என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

‘ரெவோல்யூஷ்னரி டெக்கானலஜி' (புரட்சிகர தொழிற்நுட்பம்) என அழைக்கப்படும் இந்த எலக்ட்ரிக் வாகனம் முன்னதாக கடந்த 2019ல் கான்செப்ட் வடிவத்தில் வெளியிடப்பட்டது. அதன்பின் பெர்லீன், அம்ஸ்டர்டம் மற்றும் துபாய் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர சோதனைகளில் உட்படுத்தப்பட்டது.

Image Courtesy: azfamily powered by 3TV & CBS5AZ

இந்த வாகனத்தில் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதில் ஒவ்வொரு மோட்டார் உடனும் 2-ஸ்பீடு ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

இதன் பேட்டரி தொகுப்பிற்கு ஜெனரேட்டராக செயல்பட அதிகப்பட்சமாக 272 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 6-சிலிண்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. மொத்தமாக இந்த எலக்ட்ரிக் மோட்டார் அமைப்பின் மூலம் அதிகப்பட்சமாக 490 எச்பி மற்றும் 50,000 என்எம் டார்க் திறனை பெற முடியுமாம்.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

இதன் பேட்டரியை சார்ஜ் ஏற்ற 150 கிலோவாட்ஸ் டிசி விரைவு சார்ஜர் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் 50 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரையிலான சார்ஜ்ஜை வெறும் 1 மணிநேரத்தில் நிரப்பிவிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

மேலும் பேட்டரியின் ஆற்றலை வாகனத்தின் வெவ்வேறு விதமான பயன்பாட்டிற்கு பயன்படுத்தி கொள்ளும் வகையிலும் இந்த தீயணைப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

இந்த ட்ரக் அவசர நேரத்திற்கு ஏற்ப வளைவுகளிலும் வேகமாக செயல்படக்கூடியது என வால்வோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இதற்காகவே இந்த எலக்ட்ரிக் வாகனம் பிரத்யேகமாக, காற்று இயக்கவியலுக்கு உகந்த விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

அதேநேரம் பாதுகாப்பு விஷயத்திலும் இந்த வாகனத்தில் எந்தவொரு குறைவும் இல்லை. தன்னிச்சையான சஸ்பென்ஷன் அமைப்பை பெற்றுள்ள இந்த எலக்ட்ரிக் தீயணைப்பு வாகனத்தில் ஹைட்ரோபியூனமடிக் சேசிஸ் வழங்கப்பட்டுள்ளது.

உலகின் முதல் மின்சார தீயணைப்பு வாகனம்!! அமெரிக்காவில் பயன்பாட்டிற்கு வந்தது!

இந்த எலக்ட்ரிக் ட்ரக் நிச்சயம் அமெரிக்க தீயணைப்பு துறையில் புதிய மாற்றங்களை கொண்டுவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், பூஜ்ஜிய மாசு உமிழ்வினால் இவ்வாறான எலக்ட்ரிக் தீயணைப்பு வாகனங்களை மற்ற நாட்டு அரசாங்கங்களும் தாரளமாக வாங்க முன் வரலாம்.

Most Read Articles
English summary
World's first electric fire truck demonstrated by Arizona fire department.
Story first published: Friday, April 2, 2021, 15:36 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X