ஐரோப்பிய டிடிஎம் கார் பந்தயத்தில் முதல் இந்தியராக களமிறங்கும் அர்ஜுன் மெய்னி!

ஐரோப்பாவில் மிகவும் பிரபலமான டிடிஎம் கார் பந்தயத்தில் இந்தியாவின் இளம் வீரர் அர்ஜுன் மெய்னி களமிறங்க உள்ளார். இந்த பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்தியர் என்ற பெருமையையும் அவர் பெற இருக்கிறார்.

ஐரோப்பிய டிடிஎம் கார் பந்தயத்தில் களமிறங்கும் அர்ஜுன் மெய்னி

ஐரோப்பாவில் நடைபெறும் டச் டூரன்வேகன் மாஸ்டர்ஸ் (DTM) என்ற டூரிங் வகை கார் பந்தயம் வெகு பிரபலமானது. கடந்த 1984ம் ஆண்டு ஐரோப்பாவை சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து இந்த கார் பந்தயத்தை துவங்கின. சாதாரண கார்களில் அதிக மாற்றங்களை செய்து பந்தய காராக பயன்படுத்துவதே இதன் முக்கிய சிறப்பாக கொண்டு நடத்தப்படுகிறது.

இதற்காக, சாதாரண காரில் சஸ்பென்ஷன், அதிக ஏரோடைனமிக்ஸை வழங்குவதற்கான கூடுதல் ஆக்சஸெரீகள் பொருத்துவதற்கும் அனுமதிக்கப்படுகிது. அதேநேரத்தில், இவை எஃப்1 மற்றும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையாக மாற்றுவதற்கு இயலாது. இதற்காக, பிரத்யேக வரைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. இந்த பந்தயம் ஜெர்மனியை மையமாக கொண்டு நடத்தப்பட்டாலும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள பந்தய களங்களில் பல சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

ரேஸ் கார்

வரும் ஜூன் மாதம் 2021ம் ஆண்டுக்கான டிடிஎம் டூரிங் கார் பந்தயம் துவங்க இருக்கிறது. இந்த பந்தயத்தில் இந்தியாவை சேர்ந்த பிரபல கார் பந்தய வீரர் அர்ஜுன் மெய்னி பங்கேற்க உள்ளார். இந்த பந்தயத்தில் பங்கேற்கும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற இருக்கிறார்.

மெர்சிடிஸ் ஏஎம்ஜி கார் நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் கெட்ஸ்பீடு பெர்ஃபார்மென்ஸ் அணி சார்பில் அவர் களமிறங்குகிறார். மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி ஜிடி3 காரை பயன்படுத்த இருக்கிறார். இந்த காரில் இந்திய தேசியக் கொடி வர்ணமும் இடம்பெறுவது பெருமையான விஷயமாக கூறலாம்.

பந்தய கார்

இந்த ஆண்டுக்கான டிடிஎம் கார் பந்தயம் 8 சுற்றுக்களுடன் 16 பந்தயங்கள் கொண்டதாக நடத்தப்படுகிறது. வரும் ஜூன் 18 முதல் 20ந் தேதி வரை முதல் பந்தயம் இத்தாலியிலுள்ள மோன்ஸா நகரில் உள்ள பந்தய களத்தில் துவங்க இருக்கிறது

இதைத்தொடர்ந்து, நோரிஸ்ரிங், லாசிட்ஸ்டிரிங் ஸோல்டர், நர்பர்க்ரிங், ரெட் புல் ரிங் மற்றும் அசென் ஆகிய பந்தயங்களிலும் நடைபெற இருக்கிறது. இறுதிப் பந்தயம் ஜெர்மனியன் ஹாக்கென்ஹெய்ம்ரிங் பந்தய களத்தில் நடக்க இருக்கிறது.

கார் பந்தய திருவிழா

இந்த பந்தயத்தில் முதல் இந்திய வீராக அர்ஜுன் மெய்னி பங்கேற்று அசத்த இருக்கிறார். 23 வயதாகும் அர்ஜுன் மெய்னி கடந்த 2006ம் ஆண்டு கோ கார்ட் பந்தயங்களில் பங்கேற்க துவங்கினார். அதன்பிறகு, படிப்படியாக முன்னணி கார் பந்தய வீரராக மாறி இருக்கிறார். கடந்த 2011ம் ஆண்டு இந்திய ஜூனியர் சாம்பியன்ஷிப் பதக்கத்தை வென்று அசத்தினார். ஜேகே ரேஸிங் சார்பில் பந்தயங்களில் பங்கேற்று வருகிறார்.

டிடிஎம் ரேஸ்

டீம் ஃபோர்ஸ் இந்தியா நடத்திய இளம் கார் பந்தய வீரர்களை கண்டறிவதற்கான தேர்வு மூலமாக அடையாளம் காணப்பட்டவர். இந்த போட்டியில் பங்கேற்க இருப்பது குறித்து அதிக மகிழ்ச்சியையும், தனது கனவுகளில் ஒன்று நனவாக இருப்பதாவும் தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்த ஆசிய லீமான்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற அனுபவம் கொண்ட இவர், இந்த ஆண்டு பிற்பாதியில் நடக்க இருக்கும் உலக பிரபலமான ஆசிய லீமான்ஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலும் பங்கேற்க உள்ளார்.

Most Read Articles

English summary
23-year-old Indian racing driver, Arjun Maini, will be entering the 2021 DTM (Deutsche Tourenwagen Masters) season. He will be racing for Mercedes-AMG Performance Team GetSpeed in the season.
Story first published: Friday, March 26, 2021, 15:00 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X