செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் அதிசக்திவாய்ந்த வல்கைரி ஹைப்பர் காரின் உற்பத்தி துவங்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் குறித்த சிறப்பம்சங்கள் மற்றும் இதர விபரங்களை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

இங்கிலாந்தை சேர்ந்த அஸ்டன் மார்ட்டின் நிறுவனம் உயர் வகை சொகுசு கார் தயாரிப்பில் சிறந்து விளங்குகிறது. தற்போது தனது பொறியியல் திறனை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும் விதமாக புதிய ஹைப்பர் கார் மாடலை தயாரித்துள்ளது. அஸ்டன் மார்ட்டின் வல்கைரி எனற பெயரில் வர இருக்கும் இந்த கூபே கார் உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

இந்த நிலையில், அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் காரின் உற்பத்தி இங்கிலாந்தின் கேடவுன் பகுதியில் உள்ள அஸ்டன் மார்ட்டின் ஆலையில் துவங்கப்பட்டுள்ளது. மொத்தமாக 150 கார்கள் மட்டுமே உற்பத்தி செய்யப்பட உள்ள நிலையில், முதல் கார் உற்பத்திப் பிரிவிலிருந்து வெளிவந்துள்ளது. இந்த கார் தற்போது உரிமையாளருக்கு டெலிவிரி கொடுக்க தயார் நிலையில் உள்ளது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

ஒவ்வொரு அஸ்டன் மார்ட்டின் வல்கைரி காரும் 2,000 மணி நேரம் மனித உழைப்பு மூலமாக உற்பத்தி செய்யப்படும். ஒவ்வொரு காரும் 2 முதல் 3 மில்லியன் பவுண்ட் விலை கொண்டதாக இருக்கும். மொத்தம் உற்பத்தி செய்யப்பட உள்ள 150 வல்கைரி கார்களில் 85 கார்கள் கன்வெர்ட்டிபிள் மாடலாக இருக்கும். மேலும், முதல் கன்வெர்ட்டிபிள் ரக ஹைப்பர் கார் மாடலாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

மேலும், பந்தய களத்தில் ஓட்டுவதற்கான அதிக சிறப்பம்சங்கள், ஆக்சஸெரீகள் கொண்ட 40 வல்கைரி கார்களும் உற்பத்தி செய்யப்பட உள்ளன. இந்த காரின் விலை சாதாரண ஸ்டான்டர்டு மாடலைவிட மிக அதிகமாக நிர்ணயிக்கப்படும்.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

புதிய அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் ரெட்புல் ரேஸிங் ஃபார்முலா 1 அணியின் தலைமை தொழில்நுட்ப அதிகாரி அட்ரியன் நெவே எண்ணத்தில் உருவான கார் மாடல் என்பது குறிப்பிடத்தக்கது. முதலில் ஏஎம்ஆர்பி001 என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக வெளியிடப்பட்டது. அஸ்டன் மார்ட்டின் மற்றும் ரெட்புல் ரேஸிங் ஆகியவை ஒன்றாக இணந்து செயல்பட்டபோது இந்த கார் உருவாக்கப்பட்டது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் முதலில் வெளியிடப்பட்டபோது, அதன் ஹைப்ரிட் தொழில்நுட்பம் மூலமாக 1,160 பிஎச்பி பவரையும், 900 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது வெளியிடப்பட்டுள்ள தகவல்களின்படி, பவர் 21 பிஎச்பி வரை குறைந்துவிட்டது. இதனால், தற்போது 1,139 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

இருப்பினும், அஸ்டன் மார்ட்டின் வல்கைரி காரின் வி12 எஞ்சின் வெளிப்படுத்தும் திறனும், சப்தமும் ஓட்டுபவரை பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை. இந்த காரின் 6.5 லிட்டர் வி12 எஞ்சின் மற்றும் மின் மோட்டார் பொருத்தப்பட்டு ஹைப்ரிட் மாடலாக வந்துள்ளது. இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 160 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

 செம பவர்ஃபுல்லான அஸ்டன் மார்ட்டின் வல்கைரி ஹைப்பர் கார் உற்பத்தி துவங்கியது!

அஸ்டன் மார்ட்டின் நிறுவனத்தின் உயர் அதிகாரி டோபியாஸ் மோர்ஸ் கூறுகையில்,"எங்களது முதல் ஹைப்பர் கார் மாடலான புதிய அஸ்டன் மார்ட்டின் வல்கைரி உற்பத்தி நிலையை எட்டி இருப்பது மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியான தருணமாகவும் அமைந்துள்ளது. இது சாதாரண சாலைகளுக்கான ஃபார்முலா-1 கார் மாடலாக உருவாக்கப்பட்டு இருக்கிறது. இந்த கனவு காரை உருவாக்கும் பணியில் ஈடுபட்ட அனைவரும் அதிகபட்ச திறனையும், உழைப்பையும் வெளிப்படுத்தி உள்ளனர். இந்த கார் நிச்சயம் வாடிக்கையாளர்களையும் அதிசயிக்க வைக்கும்," என்று தெரிவித்துள்ளார்.

Most Read Articles

English summary
Aston Martin has commenced the all new Valkyrie hypercar in England plant.
Story first published: Monday, November 8, 2021, 12:22 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X