நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் மின்சார கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்தியாவில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் மின்சார கார். இந்த கார் குறித்த முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆடி நிறுவனம் இந்தியாவிற்கான முதல் மின்சார காரை அறிமுகம் செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து முடித்துவிட்டது. இ-ட்ரான் எனும் பெயரில் இரு விதமான தேர்வுகளில் அந்த மின்சார கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இது ஓர் எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் காராகும்.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் எனும் இரு விதமான தேர்வுகளிலேயே ஆடியின் மின்சார கார் விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இந்த மின்சார கார்வெகு நாட்களாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் நாளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இரு வேரியண்டுகளின் முழு விபரமும் இன்னும் வெளியிடப்பாத நிலையில், நாளை அனைத்து தகவல்களும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. விலை மற்றும் சொகுசு காரில் இடம் பெற இருக்கும் முக்கிய அம்சங்கள் என்னென்ன என்பது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல்கள் நாளையே வெளியிடப்பட உள்ளன.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆடி நிறுவனம் இ-ட்ரான் மின்சார காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சேவையாக டிஜிட்டல் தீர்வுகள் மற்றும் முன் முயற்சிகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது. இதன்படி, சேமிப்பு, ரேஞ்ஜ் கால்குலேட்டர், சார்ஜிங் நேரத்தை அளவிடுதல், இ-ட்ரான் ஆடி ஷாப், ஆடி இ-ட்ரான் ஹப், டிஜிட்டல் விற்பனை மற்றும் சார்ஜிங் மையங்கள் இருக்கும் இடம் பற்றிய தகவல் உள்ளிட்டவற்றை வழங்க இருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இந்த காருக்கு ஏற்கனவே இந்தியாவில் புக்கிங் தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ரூ. 5 லட்சம் என்ற உச்சபட்ச கட்டணத்தில் ஆடி இ-ட்ரானுக்கான மின்சார காருக்கான முன்பதிவு தொடங்கியது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

ஆடி இ-ட்ரான் மின்சார காரில் 95 kWh திறன் கொண்ட பேட்டரி இடம் பெற இருக்கின்றது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 400கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் எனும் வழங்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வழங்கப்பட்டிருக்கும் மின் மோட்டார் 408 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

தொடர்ந்து, ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் காரில் புராக்ரசீவ் ஸ்டியரிங், அடாப்டீவ் ஏர் சஸ்பென்ஷன் மற்றும் அனைத்து வீல்களும் இயங்கும் திறன் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற இருக்கின்றன. மேலும், மேட்ரிக்ஸ் ரக எல்இடி முகப்பு மின் விளக்கு, எல்இடி வால் பகுதி, சிங்கிள் ஃப்ரேம் கிரில் உள்ளிட்ட கவர்ச்சியான அலங்காரப் பணிகளையும் ஆடி இ-ட்ரான் பெற இருக்கின்றது.

நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் நாளை அறிமுகமாகிறது ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் கார்! தரமான சம்பவம் காத்திருக்கு!

இவற்றுடன் சிறப்பு கூடுதல் வசதிகளாக பனோரமிக் சன்ரூஃப், சாஃப்ட்டாக மூடக் கூடிய கதவுகள், நான்கு மண்டல க்ளைமேட் கன்ட்ரோல், விர்சுவல் காக்பிட், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் சார்ஜிங் மற்றும் நான்கு ஸ்போக்குகள் கொண்ட ஸ்டியரிங் வீல் உள்ளிட்டவையும் இ-ட்ரானில் இடம் பெற இருக்கின்றன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-tron Electric SUV To Be Launched In India Tomorrow. Read In Tamil.
Story first published: Wednesday, July 21, 2021, 16:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X