ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

ஆடி இ-ட்ரான் ஜிடி காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்தும், இந்த ஆடி எலக்ட்ரிக் கார் குறித்த தகவல்களையும் இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

சமீபத்தில் இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் காரை அறிமுகப்படுத்தியதை தொடர்ந்து ஆடி நிறுவனம் அதன் மற்றொரு எலக்ட்ரிக் காரை இந்திய சந்தையில் களமிறக்க தயாராகி வருகிறது. அதுதான் இ-ட்ரான் ஜிடி ஆகும்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

ஆடி இந்தியா பிராண்டில் இருந்து மிக விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ள இ-ட்ரான் ஜிடி என்ற கிராண்ட்-டூரர் எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் இன்று (செப்.8) முதல் துவங்கப்பட்டுள்ளன. இ-ட்ரான் ஜிடி உடன் சேர்த்து ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி காரையும் ஆடி நிறுவனம் அதன் இந்திய ஷோரூம்களுக்கு கொண்டுவரவுள்ளது.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இந்த இரு இ-ட்ரான் மாடல்களின் பெயர்கள் ஏற்கனவே ஆடி இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இந்திய இணையத்தள பக்கத்திற்கு கொண்டுவரப்பட்டுவிட்டன. ஆடி இ-ட்ரான் ஜிடி என்பது அதன் பெயருக்கு ஏற்றாற்போல் முழு-எலக்ட்ரிக் 4-கதவு கூபே செடான் காராகும். ஆர்எஸ் என்பது இதன் கூடுதல் ஆற்றல்மிக்க வெர்சனாகும்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் தான் ஒரு அங்கமாக ஆடி உள்ளது. மேலும் இதே க்ரூப்பில் தான் போர்ஷே பிராண்ட்டும் உள்ளது. இந்த வகையில் போர்ஷே டைகன் எலக்ட்ரிக் காரின் ப்ளாட்ஃபாரத்தை பயன்படுத்தி வடிவமைக்கப்பட்டுள்ள இ-ட்ரான் ஜிடி & ஆர்எஸ் கார்கள் முன்னதாக இந்த 2021ஆம் ஆண்டின் துவக்கத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்டன.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

ஒரே ப்ளாட்ஃபாரத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளதால் போர்ஷே டைகுனின் சில தொழிற்நுட்பங்களை ஆடி நிறுவனம் இந்த இ-ட்ரான் மாடல்களில் பயன்படுத்தியுள்ளது. சர்வதேச நாட்டு சந்தைகளில் ஆடி இ-ட்ரான் மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி கார்களில் 85kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு ஆனது இரு மோட்டார்களுடன் வழங்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இந்த இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இந்த ஆடி எலக்ட்ரிக் கார்களில் பொருத்தப்பட்டுள்ளன. இதில் இ-ட்ரான் ஜிடி மாடலில் 469 பிஎச்பி வரையிலான ஆற்றலையும், அதேநேரம் லாஞ்ச் கண்ட்ரோல் மோடில் அதிகப்பட்சமாக 523 பிஎச்பி வரையிலான ஆற்றலையும் பெற முடியும்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இ-ட்ரானின் ஜிடி வெர்சனில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.1 வினாடிகளில் எட்டிவிடலாம். மறுப்பக்கம் ஆர்எஸ் மாடல் 590 பிஎச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறுகிறது. இந்த காரில் மணிக்கு 100கிமீ வேகத்தை இ-ட்ரான் ஜிடி-ஐ காட்டிலும் சற்று விரைவாக 3.3 வினாடிகளில் எட்டிவிடலாம்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இ-ட்ரான் ஜிடி கார் வழங்கும் ட்ரைவிங் ரேஞ்ச் 487கிமீ என ஆடி நிறுவனம் தெரிவிக்கிறது. ரேஞ்ச் என்பது முழு சார்ஜில் வாகனம் இயங்கும் தூரமாகும். அதுவே ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி மாடலின் ரேஞ்ச் 471 கிமீ ஆகும். இந்த இரு 4-கதவு கூபே எலக்ட்ரிக் செடான் கார்களிலும் குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் அமைப்பை தயாரிப்பு நிறுவனம் வழங்கியுள்ளது.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இவற்றில், வாகனத்தின் முனைகளுக்கு இடையே இயந்திர இணைப்பு எதுவும் இல்லை. ஆனால் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி கார்களில் முனைகளையும், சக்கரங்களையும் ஒருங்கிணைக்க எலக்ட்ரானிக் கண்ட்ரோல் அமைப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இந்தியாவில் விற்பனையில் உள்ள இ-ட்ரானின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.99.99 லட்சத்தில் இருந்தும், இ-ட்ரான் ஸ்போர்ட்பேக்கின் ரூ.1.18 கோடியில் இருந்தும் துவங்குகின்றன. இவற்றை தொடர்ந்து புதியதாக கொண்டுவரப்படும் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி கார்களின் விலைகள் இதனை காட்டிலும் சற்று அதிகமாகவே நிர்ணயிக்கப்படும்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இதற்கிடையில் இ-ட்ரான் ஜிடி-இன் டீசர் படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றன. இந்த வகையில் சமீபத்தில் வெளியிடப்பட்டு இருந்த டீசர் படத்தில் காரின் முன்பக்க மஞ்சள் நிற எல்இடி ஹெட்லைட் மட்டுமே காட்டப்பட்டு இருந்தது. ஆடி இ-ட்ரான் ஜிடி காரின் முன்பதிவுகள் தற்போது துவங்கப்பட்டுள்ளதால், டெலிவிரிகள் நமக்கு தெரிந்தவரையில், இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் துவங்கப்பட்டுவிடும்.

ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காருக்கான முன்பதிவுகள் துவங்கின!! டெலிவிரிகள் எப்போது?

இ-ட்ரான் & இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் இரண்டும் எஸ்யூவி உடலமைப்பை கொண்ட எலக்ட்ரிக் கார்களாகும். ஆனால் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஆர்எஸ் இ-ட்ரான் ஜிடி ஆனது செடான் ரக எலக்ட்ரிக் கார்களாகும். இதனால் விற்பனையில் உள்ள இ-ட்ரானிற்கும், இ-ட்ரான் ஜிடி காருக்கும் இடையே தோற்றத்தில் வித்தியாசம் உள்ளது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-tron GT bookings open today, September 08, 2021.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X