மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் செடான் காரான இ-ட்ரான் ஜிடி-யின் டீசர் படம் ஒன்று புதியதாக வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் தயாரிப்பு கூறவந்துள்ள விஷயத்தை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இந்திய சந்தையில் விற்பனைக்கு வரவுள்ளதாக எதிர்பார்க்கப்படும் லக்சரி எலக்ட்ரிக் கார்களில் ஆடியின் இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் செடான் காரும் ஒன்றாகும். ஆடியின் முதல் எலக்ட்ரிக் காராக இ-ட்ரான் அறிமுகப்படுத்தப்பட்டது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இதனுடன் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் மாடலும் விற்பனையில் உள்ளது. இ-ட்ரானின் விலைகள் ரூ.99.99 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்க, இ-ட்ரான் ஸ்போர்ட்பேக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.18 கோடியாக உள்ளது. இந்த நிலையில் இ-ட்ரான் ஜிடி காரையும் விற்பனைக்கு கொண்டுவர ஆடி நிறுவனம் தயாராகி வருகிறது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

அதன் ஒரு பகுதியாகவே தற்போது டீசர் படம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் காரின் முன்பக்க மஞ்சள் நிற எல்இடி ஹெட்லைட் மட்டுமே காட்டப்பட்டுள்ளது. கார் முழுவதும் அடர் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருப்பது போன்று உள்ளது. நமக்கு தெரிந்த வரையில் ஆடி இ-ட்ரான் ஜிடி கார் இன்னும் சில வாரங்களில் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிடலாம்.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இ-ட்ரான் & இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் இரண்டும் எஸ்யூவி ரக வடிவமைப்பை கொண்ட எலக்ட்ரிக் கார்களாகும். ஆனால் இ-ட்ரான் ஜிடி ஆனது கூபே போன்று இருக்கும் செடான் ரக எலக்ட்ரிக் காராகும். இதனால் இந்த ஆடி எலக்ட்ரிக் செடான் காருக்கு வெளிநாட்டு சந்தைகளில் விற்பனையில் டெஸ்லா மாடல் எஸ் & மெர்சிடிஸ்-பென்ஸ் இக்யூஎஸ் என்ற எலக்ட்ரிக் செடான் கார்களே போட்டியாக விளங்குகின்றன. இவ்வளவு ஏன் போர்ஷே டைகன் கூட போட்டியாக உள்ளது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

சர்வதேச சந்தைகளில் ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் கார் குவாட்ரோ & ஆர்எஸ் என்ற இரு விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் ஆர்எஸ், செயல்திறன்மிக்க வேரியண்ட்டாகும். அலுமினியம், அதி-வலிமைமிக்க இரும்பு மற்றும் கார்பன் ஃபைபர் என எடை குறைவான பாகங்களால் இந்த எலக்ட்ரிக் செடான் காரை ஆடி நிறுவனம் தயாரிக்கிறது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இதனால் இந்த எலக்ட்ரிக் காரின் எடை வெறும் 2300 கிலோ மட்டுமே ஆகும். ஆடி மட்டுமின்றி ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் உள்ள மற்றொரு சொகுசு கார் பிராண்டான போர்ஷேவின் உதவியுடனே ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் செடான் கார் வடிவமைக்கப்பட்டது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இதனால் தான் இ-ட்ரான் ஜிடி மற்றும் ஃபோர்ஷே டைகுன் என்ற இரு எலக்ட்ரிக் கார்களிலும் ஒரே சேசிஸ் மற்றும் ஜே 1 இவி பேட்டரி ஃப்ளாட்பாரம் பயன்படுத்தப்பட்டுள்ளது. இயந்திர பாகங்களை பொறுத்தவரையில், 85kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு உடன் முன்பக்கத்தில் ஒன்று, பின்பக்கத்தில் ஒன்று என இரு எலக்ட்ரிக் மோட்டார்கள் இ-ட்ரான் ஜிடி காரில் வழங்கப்படவுள்ளன.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இவற்றின் உதவியுடன் ஸ்டாண்டர்ட் குவாட்ரோ வேரியண்ட்டில் எலக்ட்ரிக் மோட்டார் அதிகப்பட்சமாக 469 எச்பி பவரையும் 630 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்துகிறது. அதுவே ஆர்எஸ் வேரியண்ட்டில் 590எச்பி மற்றும் 830 என்எம் டார்க் திறன் வரையிலான ஆற்றலை பெறலாம். இதனால் தான் இதனை செயல்திறன்மிக்க வேரியண்ட் என்கிறோம்.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இந்த ஆர்எஸ் வெர்சனில் பின்பக்க மோட்டார் உடன் 2-ஸ்பீடு டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது. இ-ட்ரான் ஜிடி காரை முழுவதுமாக சார்ஜ் செய்து அதிகப்பட்சமாக 487கிமீ தொலைவிற்கு பயணிக்க முடியும் என்கிற தயாரிப்பு நிறுவனம். அதேநேரம் இந்த எலக்ட்ரிக் செடானின் ஆர்எஸ் வேரியண்ட்டில் சற்று குறைவாக 471கிமீ வரையில் மட்டுமே செல்ல முடியுமாம்.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

இவை இரண்டும் ஐரோப்பிய எடை குறைவான வாகன ஒத்திசைவு சோதனை செயல்முறை (WLTP)-இன் முடிவுகளாகும். இ-ட்ரான் ஜிடி குவாட்ரோ காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 4.1 வினாடிகளில் எட்டிவிடலாம். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 245கிமீ ஆகும். அதேநேரம் ஆர்எஸ் வெர்சனில் இந்த வேகத்தை சற்று வேகமாக 3.3 வினாடிகளிலேயே அடைந்துவிடலாம்.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

அதேபோல் இதில் 250kmph வரையிலான வேகத்தையும் அடையலாம். ஆடி இ-ட்ரான் ஜிடி எலக்ட்ரிக் காரின் உட்புறத்தில் 10.1 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் ஹெட்-யூனிட் மற்றும் 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் வழங்கப்படுகிறது.

மூன்றாவது எலக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்கும் ஆடி!! எந்த மாதிரியான கார் தெரியுமா? விரைவில் அறிமுகம்

வெளிப்பக்கத்தில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் மற்றும் 20 & 21 இன்ச் தேர்வுகளில் சக்கரங்களை இந்த கார் பெற்றுவரவுள்ளது. இவற்றுடன் காற்று-சஸ்பென்ஷன் மற்றும் டங்க்ஸ்டன் கார்பைட்-ஆல் பூசப்பட்ட ப்ரேக் காலிபர்களையும் இந்த எலக்ட்ரிக் செடான் காரில் எதிர்பார்க்கலாம்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi India teases e-tron GT electric sedan.
Story first published: Wednesday, August 18, 2021, 7:30 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X