வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

ஆடி நிறுவனம் இ-ட்ரான் ஜிடி காரை வருகிற பிப்ரவரி 9ஆம் தேதி அறிமுகப்படுத்தவுள்ளதை டீசர் ஒன்றின் மூலமாக உறுதிப்படுத்தியுள்ளது. அதனை பற்றி இந்த செய்தியில் பார்ப்போம்.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

ஆடி இ-ட்ரான் ஜிடி காரின் கான்செப்ட் மாடல் 2018ல் வெளியிடப்பட்டது. அதன்பின் அந்த கான்செப்ட் மாடலின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இந்த ஆடி ஜிடி கார் கிட்டத்தட்ட மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த 2021 பிப்ரவரி 9ஆம் தேதி அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

ஸ்போர்ட்ஸ் சலூன் கார்கள் போன்று வடிவமைக்கப்பட்டுள்ள புதிய ஆடி இ-ட்ரான் ஜிடி கார் சில தொழிற்நுட்பங்களை பிரபலமான போர்ஷே டைகனில் இருந்து பெற்றுள்ளது. சர்வதேச நாடுகளின் ஷோரூம்களுக்கு இந்த கார் இந்த 2021ஆம் ஆண்டின் இறுதியில் சென்றடையும் என கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

வழக்கமான ஆடி இ-ட்ரான் கூபே செடான் காரின் தோற்றத்துடன் ஒப்பிடுகையில் அதன் புதிய ஜிடி வெர்சனின் தோற்றம் எந்த விதத்தில் குறையில்லாமல் இருக்கும் என்பது உறுதி. அதன் காற்று இயக்கவியலுக்கு இணக்கமான தோற்ற பண்பை அப்படியே பெற்றிருக்கும்.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

இதனை நிழல் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் இ-ட்ரான் ஜிடி காரின் புதிய டீசர் படம் சிறிது உறுதிப்படுத்துகிறது. ஆனால் உண்மையில் டீசரில் காட்டப்பட்டுள்ள காரை பார்க்கும்போது 2018ல் வெளியிடப்பட்ட இ-ட்ரான் ஜிடி காரின் கான்செப்ட் வெர்சன் தான் நினைவிற்கு வருகிறது.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

இந்த டீசர் படத்தின் மூலம் இந்த புதிய ஆடி காரின் தோற்றத்தை பற்றி பெரிய அளவில் எதையும் பெற முடியவில்லை. ஆனால் இந்த கார் தொடர்பான முந்தைய படங்கள் புதிய ஒற்றை-ஃப்ரேம் க்ரில், சில முரட்டுத்தனமான ஹெட் லைட்கள் & டெயில் லைட்கள் மற்றும் வளைவான மேற்கூரை உள்ளிட்டவற்றை புதிய இ-ட்ரான் ஜிடி பெற்றுவரவுள்ளதை வெளிக்காட்டி இருந்தன.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

ஒரே ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பினால் போர்ஷே டைகனின் ஜே1 சேசிஸ் இந்த ஆடி காரிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது. வழக்கமான ஆடி இ-ட்ரான் காரில் முன்சக்கரங்களை கண்ட்ரோல் செய்ய இரு மோட்டார்கள் சிங்கிள்-ஸ்பீடு கியர்பாக்ஸ் உடன் வழங்கப்படுகின்றன. பின் சக்கரங்களுக்காக 2-ஸ்பீடு கியர்பாக்ஸ் தனித்தனியாக பொருத்தப்படுகின்றது.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

அதுவே இ-ட்ரான் ஜிடி கார் அதிகப்பட்சமாக 590 எச்பி மற்றும் 830 என்எம் டார்க் திறனில் இயங்கும் விதத்தில் வழங்கப்படும் என தகவல்கள் கூறுகின்றன. போர்ஷே டைகனில் இருந்து பெறப்பட்டு இ-ட்ரான் ஜிடி காரில் பொருத்தப்பட்டுள்ள 83.7 kWh லித்தியம்-இரும்பு பேட்டரி அதிகப்பட்சமாக 400கிமீ ரேஞ்சை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் பிப்ரவரி 9ல் அறிமுகமாகும் ஆடியின் புதிய ஜிடி கார்!! 2021 இ-ட்ரான் ஜிடி..

இந்த பேட்டரியை சார்ஜ் செய்ய 800-வோல்ட் சார்ஜிங் சிஸ்டம் வழங்கப்படவுள்ளது. வயர் இல்லா சார்ஜிங் தொழிற்நுட்பத்துடன் கொடுக்கப்படவுள்ள இந்த சார்ஜர் மூலமாக பேட்டரியின் சார்ஜை 20 நிமிடத்தில் 80 சதவீதம் நிரப்பிவிடலாம் என கூறப்படுகிறது.

Most Read Articles
மேலும்... #ஆடி #audi
English summary
Audi e-Tron GT Teased Ahead Of Launch
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X