ஆடி இ ட்ரான் சொகுசு எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்திய அறிமுக விபரம்!

ஆடி இ ட்ரான் சொகுசு எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறித்த அதிகாரப்பூர்வமாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஆடி இ ட்ரான்

இந்தியாவில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களுக்கு பிரகாசமான வர்த்தக வாய்ப்பு இருக்கிறது. கடந்த ஆண்டு முதல் மாடலாக வந்த மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி எலெக்ட்ரிக் காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து, பிற சொகுசு கார் நிறுவனங்களும் இந்தியாவில் சொகுசு எலெக்ட்ரிக் கார்களை களமிறக்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

ஆடியின் முதல் எலெக்ட்ரிக் கார்

அந்த வகையில், ஆடி நிறுவனமும் தனது இ ட்ரோன் எலெக்ட்ரிக் காரை இந்தியாவில் களமிறக்குவதற்கு ஆயத்தமாகி வருகிறது. கடந்த ஆண்டு விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்ட இந்த கார் கொரோனா பிரச்னையால் அறிமுகம் தள்ளிப் போனது.

இந்த நிலையில், ஜாகுவார் ஐ பேஸ் மற்றும் வால்வோ எக்ஸ்சி40 எலெக்ட்ரிக் கார்கள் வர இருப்பது அண்மையில் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்ட நிலையில், ஆடி நிறுவனமும் இ ட்ரோன் காரை அறிமுகம் செய்வதை உறுதி செய்துள்ளது.

ஆடி எலெக்ட்ரிக் கார்

அதாவது, இந்த ஆண்டின் முதல் பாதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் இந்த புதிய சொகுசு எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்துவிடும். மிஞ்சி போனால் வரும் ஜூன் மாதத்திற்குள் இந்த கார் இந்தியாவில் விற்பனைக்கு வருவது உறுதியாகிவிட்டது.

கடந்த 2019ம் ஆண்டு உலக அளவில் ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் கார் அறிமுகமானது. அப்போதே, சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் இந்த கார் பெரிய அளவிலான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்த காரில் ஆடியின் பாரம்பரியத்தை பரைசாற்றும் வகையிலான பெரிய க்ரில் அமைப்பு இடம்பெற்றுள்ளது.

முக்கிய அம்சங்கள்

மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், மடிப்புகளுடன் வலிமையான பானட், ரூஃப் ரெயில்கள், பிரம்மாண்ட வீல் ஆர்ச்சுகள், எல்இடி டெயில் லைட் க்ளஸ்ட்டர்கள், இரண்டு டெயில் லைட் க்ளஸ்ட்டர்களை விளக்கு மூலமாக இணைக்கும் விசேஷ லைட் பார் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

இந்த காரில் பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம், மல்டி ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

ஆடி மின்சார கார்

ஆடி இ ட்ரான் காரில் 95kWh பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. முன் ஆக்சிலில் உள்ள மின் மோட்டார் மட்டும் 168 பிஎச்பி பவரையும், 247 என்எம் டார்க் திறனையும் வழங்கும். பின் ஆக்சிலில் உள்ள மின் மோட்டார் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 314 என்எம் டார்க் திறனையும் வழங்கும்.

மிரட்டும் பூஸ்ட் டிரைவிங் மோடு

இந்த காரின் பேட்டரித் தொகுப்பு மற்றும் மின் மோட்டார்கள் இணைந்து அதிகபட்சமாக 356 பிஎச்பி பவரையும், 561 என்எம் டார்க் திறனும் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூஸ்ட் மோடில் வைத்து இயக்கும்போது அதிகபட்சமாக 402 பிஎச்பி பவரையும், 664 என்எம் டார்க் திறனையும் 8 வினாடிகளுக்கு வழங்கும்.

சோதனை நிலைகளில் ஆடி இ ட்ரான் எலெக்ட்ரிக் சொகுசு கார் 400 கிமீ வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும். அதேநேரத்தில், ஓட்டுதல் முறை, தட்பவெப்பம், சாலை நிலை போன்றவற்றால் இதன் நடைமுறை பயன்பாட்டில் இந்த ரேஞ்ச் சற்று குறைய வாய்ப்பு இருக்கிறது.

எதிர்பார்க்கும் விலை

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி காருக்கு நேரடி போட்டியாக எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, இந்த காரும் ரூ.1 கோடி விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. சொகுசு எலெக்ட்ரிக் காரை வாங்க விரும்பும் இந்தியர்களுக்கு மிகச் சிறந்த தேர்வாக அமையும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has teased e-Tron SUV in India ahead of launch.
Story first published: Wednesday, March 10, 2021, 18:26 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X