இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்! விலை ரொம்ப அதிகம்! அதவிட அம்சங்கள் பல மடங்கு அதிகமா இருக்கு!

ஆடி நிறுவனம் இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் ஸ்போர்ட்பேக் கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார்கள் குறித்த சுவாரஷ்ய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம், வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

ஆடி நிறுவனம் இந்தியாவில் அதன் மூன்று எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. மூன்றுமே எஸ்யூவி ரக கார்கள் ஆகும். ஆடி இ-ட்ரான் 50, ஆடி இ-ட்ரான் 55 மற்றும் ஆடி இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 ஆகிய பெயர்களில் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனைக்கு வந்திருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இந்திய மின்சார வாகன சந்தையை அதகளப்படுத்தும் வகையில் மூன்று கார்கள் இன்று (ஜூலை 22) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டிருக்கின்றன. இந்த மின்சார கார்களில் நம்ப முடியா திறன் கொண்ட இரண்டு டைனமிக் வசதிகள் கொண்ட மின்மோட்டார்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இவை முன் மற்றும் பின் வீல்களுக்கு இயங்கு சக்தியை வழங்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆகையால், முற்றிலும் விநோதமான இயக்க அனுபவத்தை பெற முடியும் என ஆடி கூறுகின்றது. இதில், ஆரம்ப நிலை மாடலாக ஆடி இ-ட்ரான் 50 இருக்கின்றது. இதற்கு ரூ. 99.99 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இதற்கு அடுத்தபடியாக ஆடி இ-ட்ரான் 55 மாடல் உள்ளது. இந்த வேரியண்டிற்கு ரூ. 1,16 கோடி என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உச்சபட்ச மாடலாக ஆடி இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 காட்சியளிக்கின்றது. இதற்கு ரூ. 1.17 கோடி என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

நிற தேர்வு:

ஆடி இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட் கார்கள் ஒட்டுமொத்தமாக ஒன்பது விதமான நிற தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். டைபூன் கிரே (Typhoon Gray), சியாம் பீஜ் (Siam Beige), மைதோஸ் பிளாக் (Mythos Black), கிளாசியர் வெள்ளை (Glacier White), கிளாசியர் நீலம் (Galaxy Blue), ஃப்ளோரட் சில்வர் (Floret Silver), கேடளுன்யா சிவப்பு (Catalunya Red), நவர்ரா நீலம் (), பிளாஸ்மா நீலம் (ஸ்போர்ட்பேக் இ-ட்ரானில் மட்டுமே இந்த நிறம் கிடைக்கும்) (Navarra Blue Plasma Blue) ஆகியவையே ஆகும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

வெளிப்புற தோற்றம்:

இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55 மற்றும் இ-ட்ரான் 55 ஸ்போர்ட்பேக் ஆகிய மாடல்களுக்கு இடையே உருவ அமைப்பு மட்டுமே வித்தியாசமாக காணப்படுகின்றது. இ-ட்ரான் 50, இ-ட்ரான் 55 ஆகிய இரண்டும் ஒரே தோற்றத்திலும், இ-ட்ரான் 55 ஸ்போர்ட்பேக் மட்டும் ஸ்போர்ட்ஸ் கார்களுக்கு இணையான தோற்றத்திலும் காட்சியளிக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

ஸ்போர்ட்ஸ் கார்களைப் போன்று காட்சியளிப்பதற்காக சற்று சரிவலான மேற்கூரை அமைப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி பிற அம்சங்கள் அனைத்தும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்கின்றன. அந்தவகையில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்புகள், எல்இடி டிஆர்எல்கள், பூட் லிட் பகுதியில் எல்இடி பார், எல்இடி வால்பகுதி மின் விளக்கு, 20 இன்சிலான அலாய் வீல்கள், இரு பக்கத்திலும் சார்ஜிங் பாயிண்ட் உள்ளிட்டவை இருக்கின்றன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

காரின் உட்பகுதி:

ஆடி இ-ட்ரான் காரில் மூன்று திரைகள் இடம் பெற்றிருக்கின்றன. ஒன்று இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டராகவும், மற்றொன்று இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமாகவும், மூன்றாவது ஒன்று இருக்கைகள் மற்றும் க்ளைமேட் கன்ட்ரோல்களைக் கட்டுப்படுத்துவதற்காகவும் வழங்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இதுமட்டுமின்றி நான்கு மண்டல க்ளைமேட் கன்ட்ரோல், வாய்ஸ் அசிஸ்டண்ட், என் ஆடி கன்னெக்ட், பனோரமிக் சன்ரூஃப், ஹெட்ஸ் அப்-டிஸ்ப்ளே, ஒயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜிங், ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே வசதி மற்றும் பல்வேறு கன்ட்ரோல்கள் கொண்ட இரட்டை ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகியவை மின்சார கார்களில் இடம் பெற்றிருக்கின்றன

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

மேலும், காருக்குள் அமர்ந்திருக்கும் அதிக அமைதியான உணர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக சிறப்பு தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இது, வெளியில் இருந்து ஒலி மற்றும் அதிர்வுகளைக் குறைக்கும் வகையில் செயல்படும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

மின் மோட்டார் மற்றும் செயல்திறன்:

மேலே கூறியதைப் போல் இரு விதமான டைனமிக் வசதிகள் கொண்ட மின் மோட்டார் எலெக்ட்ரிக் கார்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. அந்தவகையில், ஆரம்ப நிலை மாடலாக இருக்கும் ஆடி இ-ட்ரான் 50 வெர்ஷனில் 308 பிஎச்பி மற்றும் 540 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடிய மின் மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இத்துடன், 71 kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் ச செய்தால் 370 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மின்சார காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 190 கிமீ ஆகும். இது வெறும் 6.8 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டதாகவும் இருக்கின்றது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

ஆடி இ-ட்ரான் 55 மற்றும் இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் 55 கார்களில் ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் மின்மோட்டார் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இந்த மின் மோட்டார் 402 பிஎச்பி மற்றும் 664 என்எம் டார்க்கை வெளியேற்றக் கூடியது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இந்த காரில் 95 kWh திறன் கொண்ட பேட்டரி பயன்படுத்தப்பட்டிருக்கின்றது. இதனை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 480 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். அனைத்து மின்சார கார் மாடல்களிலும் சூப்பர் ஃபாஸ்ட் திறன் கொடுக்கப்பட்டுள்ளது. 150 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் மையத்தில் வைத்து சார்ஜ் செய்தால் வெறும் 30 நிமிடங்களில் பூஜ்ஜியத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய முடியும்.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட 50kW ஃபாஸ்ட் சார்ஜிங் மையங்களைப் பயன்பாட்டிற்கு கொண்டு வர இருப்பதாக ஆடி அறிவித்துள்ளது. வழக்கமான சார்ஜிங் மையங்களில் வைத்து சார்ஜ் செய்தால் முழுமையாக சார்ஜாக 8.5 மணி நேரங்கள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது ஆடி இ-ட்ரான்... விலை ரொம்ப அதிக இருந்தாலும், அம்சங்களும் பல மடங்கு அதிகமா இருக்கு!

பாதுகாப்பு வசதிகள்:

ஆடி இ-ட்ரான் மின்சாரகார்களில் பாதுகாப்பு அம்சங்களாக 8 ஏர் பேக்குகள், பிரேக் அசிஸ்ட், ஏபிஎஸ், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டிராக்சன் கன்ட்ரோல், பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், ப்ரீ சென்ஸ் பேசிக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன.

இத்துடன் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக 8 வருடங்கள் அல்லது 1,60,000 கிமீ வாரண்டி மற்றும் இரண்டு வருடங்கள் வழக்கமான வாரண்டியை வழங்க ஆடி திட்டமிட்டுள்ளது. தொடர்ந்து, 2+2 அல்லது 2+3 கூடுதல் வாரண்டி தேர்வையும் வழங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றுடன், கூடுதல் சிறப்பு சலுகையாக 5 வருடங்கள் சாலையோர அசிஸ்டண்ட் வழங்கப்பட இருக்கின்றது. இன்னும் ஏராளமான சிறப்பு திட்டங்களை இ-ட்ரான் மின்சார கார்களுக்காக ஆடி அறிவித்திருக்கின்றது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Launched e-Tron Electric SUV In India At Rs 99.99 Lakh. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X