எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் அதன் அதிக விலைக் கொண்ட சூப்பர் கார் ஒன்றை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. காரின் விலை மற்றும் அதில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் பற்றிய தகவலையே இப்பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் பதிவிற்குள் போகலாம்.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இது அப்டேட் செய்யப்பட்ட கார் மாடலாகும். ஆகையால், பல்வேறு புதிய சிறப்பு மாற்றங்கள் இந்த காரில் இடம் பெற்றிருக்கின்றன. இந்த புதுப்பித்தலின் காரணமாக ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் கூடுதல் கவர்ச்சியான சொகுசு காராக மாறியிருக்கின்றது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை நாட்டில் சிபியூ என்று அழைக்கப்படும் முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனமாக இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்க இருக்கின்றது. எனவேதான் இந்த காருக்கு மிக அதிக விலையை நிறுவனம் நிர்ணயித்துள்ளது. மேலும், புதுப்பித்தலின் காரணமாகவும் இதன் விலை லேசாக ஏற்றத்துடன் காணப்படுகின்றது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் புதிய ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு ரூ. 1.04 கோடி என்ற விலையை நிர்ணயித்துள்ளது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த உச்சபட்ச விலையிலேயே ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் சொகுசு கார் விற்பனைக்கு வந்திருக்கின்றது. ஆடி நிறுவனம் மிக சமீபத்திலேயே எஸ்5 ஸ்போர்ட்பேக் மற்றும் ஆர்எஸ்7 ஸ்போர்ட்பேக் ஆகிய அதிக திறன் கொண்ட வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கியது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

இதைத் தொடர்ந்து இவற்றின் வரிசையில் ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரையும் நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் கார் மாடல்களின் எண்ணிக்கையை விரிவாக்கம் செய்யும் நோக்கில் ஆடி நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதனடிப்படையிலேயே புதிய மாடல்களை ஆடி நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கிய வண்ணம் இருக்கின்றது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

மிக மிக சமீபத்தில் தனது எலெக்ட்ரிக் கார்களான இ-ட்ரான் மற்றும் இ-ட்ரான் ஸ்போர்க் பேக் கார்களை நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருந்தது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் ஆடி ஆர்எஸ்5 காரில் மேலே கூறியதைப் போல் புதுப்பித்தலின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கின்றன.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

அந்தவகையில், ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் புதிய ஹெட்லேம்ப் பயன்படுத்தப்பட்டுள்ளது. இத்துடன், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட மூன்று பாகங்கள் கொண்ட ஏர்-இன்லெட்டுகள், பெரிய உருவத்திலான ஒற்றை துண்டு கிரில், கூட்டப்பட்ட வீல் ஆர்சுகள், மிக சாய்வான ரூஃப்லைன் மற்றம் 19 இன்சிலான வீல் ஆகியவை இதில் இடம் பெற்றிருக்கின்றன.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

இதுமட்டுமின்றி புதிய டிசைனில் வால் பகுதி மின் விளக்கு, புதுப்பிக்கப்பட்ட பம்பர் மற்றும் உருமாற்றப்பட்ட டிஃப்யூஸர் ஆகியவையும் ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை அலங்கரிக்கும் வகையில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. காருக்குள் மிக சூப்பர் அம்சம் என கூறுமளவிற்கு 10.1 இன்சிலான தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வழங்கப்பட்டிருக்கின்றது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

இது ஆடி நிறுவனத்தின் எம்எம்ஐ அகுவஸ்டிக் ரெஸ்பான்ஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டிருக்கின்றது. இது டிரைவரை நோக்கியிருக்கும் வகையில் பொருத்தப்பட்டிருக்கின்றது. மேலும், 12.3 இன்சிலான விர்சுவல் காக்பிட் வசதியும் இக்காரில் வழங்கப்பட்டுள்ளது. இதில், பழைய ரோடரி கன்ட்ரோல்கள் நீக்கப்பட்டு புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

ஆடி நிறுவனம் இந்த காரில் மிக சிறந்த வெளிப்பாட்டிற்காக 2.9 லிட்டரிலான ட்வின் டர்போசார்ஜட் டிஎஃப்எஸ்ஐ வி6 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 450 ஹார்ஸ்பவர் மற்றும் 600 என்எம் டார்க்கை வெளியற்றும் திறன் கொண்டது.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வில் இயங்கும். இக்காரின் உச்சபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆகும். இத்துடன் மணிக்கு 280கிமீ வேகத்தை கூடுதல் தேர்வாக ஆடி வழங்க இருக்கின்றது. ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் வெறும் 3.9 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறன் கொண்டது என்பது கூடுதல் சிறப்பு தகவல்.

எக்ஸ்-ஷோரூம் விலையே இவ்ளோ அதிகமா? மிக மிக அதிக விலையில் ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் அறிமுகம்!

இக்காரின் வருகை இந்திய சொகுசு மற்றும் ஸ்போர்ட்ஸ் கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் அண்மைக் காலங்களாக சொகுசு மற்றும் அதி திறன் வாய்ந்த கார்களுக்கு வரவேற்பு சற்று அதிகமாக கிடைத்து வருகின்றது. இதனடிப்படையில், ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கும் நாட்டில் நல்ல டிமாண்ட் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi launches 2021 rs5 sportback in india here is full details
Story first published: Monday, August 9, 2021, 13:20 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X