520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

அதிக தொழில்நுட்ப சிறப்புகள் கொண்ட இரண்டு புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை ஆடி கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய கார்கள் பற்றிய பல்வேறு முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

எலெக்ட்ரிக் கார் சந்தையில் வலுவான வர்த்தகத்தை பெறுவதற்கான முயற்சிகளில் ஆடி கார் நிறுவனம் இறங்கி இருக்கிறது. இதற்காக, இரண்டு புதிய எஸ்யூவி மாடல்களை இன்று உலக அளவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய மாடல்கள் க்யூ4 இ-ட்ரான் மற்றும் க்யூ4 ஸ்போர்ட்பேக் என்ற பெயர்களில் வந்துள்ளன.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

எலெக்ட்ரிக் கார்களுக்காக ஃபோக்ஸ்வேகன் குழுமம் உருவாக்கி இருக்கும் பிரத்யேகமான Electric Drive Matrix (MEB) என்ற புதிய கட்டமைப்புக் கொள்கையில் இந்த இரண்டு மின்சார எஸ்யூவி மாடல்களும் உருவாக்கப்பட்டுள்ளன.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

முதலாவதாக தனது தாயகமான ஜெர்மனியில் இந்த புதிய மின்சார எஸ்யூவிகளை ஆடி கார் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்தது. இந்த புதிய மாடல்கள் 41,900 யூரோ (இந்திய மதிப்பில் ரூ.37.72 லட்சம்) ஆரம்ப விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

புதிய ஆடி க்யூ4 இ ட்ரான் மற்றும் க்யூ4 ஸ்போர்ட்பேக் கார்கள் தலா மூன்று வேரியண்ட்டுகளில் கிடைக்கும். க்யூ4 35 இ ட்ரான், க்யூ4 40 இ ட்ரான் மற்றும் க்யூ4 50 இ ட்ரான் ஆகிய வேரியண்ட் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

இதில், க்யூ4 35 இ ட்ரான் மாடலில் 52kWh பேட்டரியும், க்யூ4 40 இ ட்ரான் மற்றும் க்யூ4 50 இ ட்ரான் மாடல்களில் 77kWh பேட்டரித் தொகுப்பும் பொருத்தப்பட்டுள்ளன. க்யூ4 35 மற்றும் 40 மாடல்களானது ரியர் வியூ டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கிறது. இந்த மாடல்கள் முறையே 167 பிஎச்பி பவரையும், 201 பிஎச்பி பவரையும் வெளிப்படுத்தும். ஒரு மின் மோட்டாரில் இயங்கும்.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

அடுத்து, க்யூ4 50 இ ட்ரான் மாடலானது விலை உயர்ந்த மாடலாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த மாடலானது 295 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டது. இந்த மாடலில் இரண்டு எலெக்ட்ரிக் மோட்டார்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில், முன்புற ஆக்சிலில் உள்ள மின் மோட்டார் அதிக பவர் தேவைப்படும்போது மட்டும் இயங்கும்.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

புதிய க்யூ4 35 இ ட்ரான் மாடலானது பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்பட்சத்தில் சோதனகளின்படி 341 கிமீ தூரமும், க்யூ4 40 இ ட்ரான் மாடலானது 349 கிமீ தூரம் வரையிலும், இதன் அதிக திறன் கொண்ட மாடல் 520 கிமீ தூரம் வரையிலும் பயணிக்கும். விலை உயர்ந்த க்யூ4 50 இ ட்ரான் மாடலானது வேரியண்ட்டை பொறுத்து 488 கிமீ முதல் 497 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

புதிய ஆடி க்யூ4 இ ட்ரான் காரில் டிசைனுக்கு வலு சேர்க்கும் விதத்தில் க்ரில் போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இரண்டு மாடல்களிலும் எல்இடி ஹெட்லைட்டுகள் கொடுக்கப்படுகின்றன. விருப்பத் தேர்வில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட்டுகளும் உண்டு.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

க்யூ4 ஸ்போர்ட்பேக் மாடலானது கூபே கார்களுக்குரிய போன்ற பின்புறம் தாழ்ந்து செல்லும் கூரை அமைப்பை பெற்றுள்ளது. இந்த கார்களில் பாடி கிளாடிங் சட்டங்கள், ஸ்பாய்லர், எல்இடி டெயில் லைட்டுகள், எல்இடி பார் லைட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன.

 520 கிமீ ரேஞ்ச்... 2 புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவிகளை அறிமுகப்படுத்தியது ஆடி!

இந்த கார்களில் உட்புறம் முழுமையான கருப்பு வண்ண தீம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. நீல வண்ண அலங்கார அம்சங்கள் உட்புறத்தை வசீகரமாக காட்டுகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே ஆகியவையும் முக்கிய அம்சங்களாக உள்ளன.

Most Read Articles
--

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has revealed all new Q4 e-Tron And Q4 Sportback e-Tron electric SUV models and it is goes on sale first in Germany.
Story first published: Thursday, April 15, 2021, 16:54 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X