இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

உலகளாவிய வெளியீட்டிற்கு முன்னதாக ஆடி க்யு4 இ-ட்ரான் மாடல்களின் டீசர் ஒன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. அதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் தெரிந்துகொள்வோம்.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

ஆடி அதன் இ-ட்ரான் முழு-எலக்ட்ரிக் வாகன வரிசையை இரு புதிய மாடல்களுடன் இன்னும் சில நாட்களில் விரிவுப்படுத்தவுள்ளது. க்யு4 இ-ட்ரான் மற்றும் அதன் கூபே வெர்சனான க்யு4 இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் என்பவை தான் இந்த இரு புதிய இ-ட்ரான் மாடல்கள் ஆகும்.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

இந்த இரு ஆடி இ-ட்ரான் கார்களும் வருகிற 14ஆம் தேதி உலகளவில் வாடிக்கையாளர்களுக்கு வெளிக்காட்டப்பட உள்ளன. இந்த நிலையில்தான் தற்போது இந்த இரு கார்களில் ஒன்றின் முன்பக்கத்தை வெளிக்காட்டுவது போன்றதான படம் வெளியிடப்பட்டுள்ளது.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

முன்பக்கம் கூட முழுவதுமாக இல்லை, இரு முன்பக்க ஹெட்லேம்ப்களில் ஒன்று மட்டும் தான் காட்டப்பட்டுள்ளது. ஏனெனில், இந்த புதிய கார்களின் பகல்நேரத்திலும் எரியும் விளக்குகளை வாடிக்கையாளர்களே கஸ்டமைஸ்ட் செய்து கொள்ளலாம் என்பதை கூறும் விதத்திலேயே இந்த இந்த படம் ஆடியின் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

புதிய க்யு4 இ-ட்ரான் கார்கள் ஆடி நிறுவனத்தின் எலக்ட்ரிக் மயமாக்கலுக்கான மிக முக்கிய படியாகும். அதேநேரம் இந்த எலக்ட்ரிக் கார்கள் வேகமாக வளர்ந்துவரும் கவர்ச்சிக்கரமான காம்பெக்ட்-கார் பிரிவிலும் சேர்த்து நிலைநிறுத்தப்பட உள்ளன.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

ஆடி இ-ட்ரான், இ-ட்ரான் ஸ்போர்ட்பேக் மற்றும் இ-ட்ரான் ஜிடி கார்களுக்கு பிறகு வடிவமைக்கப்பட்டுள்ள நான்காவது இ-ட்ரான் மாடல்கள் இவையாகும். இந்த இ-ட்ரான் மாடல்களின் கேபினை ஏற்கனவே நாம் நம்து செய்திதளத்தில் பார்த்திருந்தோம்.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

மாடர்ன் மற்றும் நேர்த்தியான தோற்றத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இவற்றின் கேபின்கள் புதிய தொழிற்நுட்பங்களை உள்ளடக்கியுள்ளன. நப்பா லெதர் என ப்ரீமியம் தரத்திலான பாகங்களின் மூலமாக இவற்றின் கேபின் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

புதிய க்யு4 இ-ட்ரான் கார்களின் எலக்ட்ரிக் மோட்டார், பேட்டரி உள்ளிட்டவை ஆடி இ-ட்ரான் அல்லது ஐக்யு4, என்யாக் போன்ற ஃபோக்ஸ்வேகன் க்ரூப்பில் இருக்கும் மற்ற இவி வாகனங்களில் இருந்து பெறப்பட்டு பொருத்தப்பட்டிருக்கலாம்.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

இந்த இரு எலக்ட்ரிக் ஆடி கார்களை பற்றிய விபரங்கள் எதுவும் பெரிய அளவில் கிடைக்க பெறவில்லை. எப்படி இருந்தாலும், அவை அனைத்தையும் ஆடி நிறுவனம் வருகிற 14ஆம் தேதி அதிகாரப்பூர்வ தெரியப்படுத்திவிடும்.

இரு புதிய எலக்ட்ரிக் கார்களின் வெளியீட்டிற்கு தயாராகும் ஆடி!! இன்னும் சில நாட்களில் அறிமுகமாகிறது!

இதனால் இந்த புதிய கார்களை பற்றி மேலும் தெரிந்து கொள்ள 14ஆம் தேதி வரையில் காத்திருக்க வேண்டும். தற்போதைய ஆடி இ-ட்ரான் எலக்ட்ரிக் காரின் விலைகள் ரூ.1 கோடியில் இருந்து ரூ.1.50 கோடி வரையில் உள்ளன.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi Q4 E-Tron teased ahead of 14 April debut. Read Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X