அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

ஆடி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் செடான் கார் மாடலாக இ-ட்ரான் ஜிடி மின்சார கார் உலக அளவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போர்ஷே நிறுவனம் உருவாக்கிய சக்திவாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டாருடன் மிரட்டும் இந்த புதிய கார் குறித்த பல முக்கியத் தகவல்களை இந்த செய்தியில் தொடர்ந்து பார்க்கலாம்.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

கொரோனா பிரச்னைக்கு பிறகு துவங்கி இருக்கும் நடப்பு தசாப்தத்தில் வாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் முழு கவனமும் மின்சார வாகனங்கள் மீது செலுத்தத் துவங்கி இருக்கின்றன. மின்சார கார்களின் மீது இருந்து வந்த பல தொழில்நுட்ப சவால்களை கடந்து, பயணிக்கும் தூரம் மற்றும் செயல்திறன் என இரண்டிலும் மிகச் சிறந்த வாகனங்களை உருவாக்கும் வல்லமையை பல நிறுவனங்கள் பெற்றுள்ளன. அந்த வரிசையில், ஜெர்மனியை சேர்ந்த சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி, தனது முதல் எலெக்ட்ரிக் செடான் கார் மாடலை வெளியிட்டுள்ளது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

ஆடி இ-ட்ரான் ஜிடி என்ற பெயரில் இந்த புதிய எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. போர்ஷே டைகன் காரின் சேஸி, பேட்டரி, மின் மோட்டார் மற்றும் முக்கிய பாகங்களின் அடிப்படையில்தான் ஆடி இ-ட்ரான் ஜிடி செடான் காரும் உருவாக்கப்பட்டுள்ளது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

அதாவது, ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் கீழ் இரு நிறுவனங்களும் செயல்பட்டு வருவதால், தயாரிப்பு செலவீனத்தை வெகுவாக குறைக்கும் வகையில், இரண்டு கார்களும் ஒரே கட்டமைப்புக் கொள்கையில்தான் சில மாற்றங்களுடன் உருவாக்கப்பட்டுள்ளன.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

புதிய ஆடி இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் செடான் கார் ஸ்டான்டர்டு மற்றும் ஆர்எஸ் என்ற அதிசெயல்திறன் மிக்க தேர்வு என இரண்டு மாடல்களில் வர இருக்கிறது. இந்த காரில் 93kWh பேட்டரி தொகுப்பும், இரண்டு மின் மோட்டார்களும் உள்ளன. இந்த பேட்டரியும், இரண்டு மின் மோட்டார்களும் இணைந்து மிகச் சிறந்த செயலாற்றலை வெளிப்படுத்தும்.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

ஆடி இ-ட்ரான் ஜிடி காரின் ஸ்டான்டர்டு மாடலானது 470 எச்பி பவரையும், ஆர்எஸ் என்ற அதி உயர்செயல்திறன் கொண்ட மாடலானது 522 எச்பி பவரையும் வெளிப்படுத்தும். இதில், ஓவர்பூஸ்ட் என்ற டிரைவிங் மோடு பயன்படுத்தும்போது அதிகபட்சமாக 637 எச்பி பவரை வாரி வழங்கும் திறன் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

ஆடி இ-ட்ரான் ஜிடி எலெக்ட்ரிக் செடான் காரின் ஸ்டான்டர்டு மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 4.1 வினாடிகளிலும், ஆர்எஸ் மாடலானது 3.3 வினாடிகளிலும் எட்டிவிடும் வல்லமை கொண்டது. இந்த கார் 2,313 கிலோ எடை கொண்டது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

இந்த காரின் மிக முக்கிய விஷயமாக இதன் செயல்திறன் மட்டுமின்றி, இதன் பயணிக்கும் தூரம் சிறப்பாக இருக்கிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்யும்போது 487 கிமீ தூரம் வரை அதிகபட்ச பயண தூரத்தை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் பேட்டரி மிக விரைவாக சார்ஜ் ஏற்றும் திறன் கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

புதிய ஆடி இ-ட்ரான் காரில் 12.3 அங்குல வெர்ச்சுவல் காக்பிட் முறையில் செயல்படும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.1 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது. நப்பா லெதர் இன்டீரியர் அம்சம், வாடிக்கையாளரின் விருப்பத் தேர்வாக கொடுக்கப்படுகிறது. ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே மூலமாக தகவல்களை பெறும் வசதியும் உள்ளது.

அசத்தும் ரேஞ்ச், மிரட்டும் பவர்... ஆடியின் புதிய இ ட்ரான் ஜிடி செடான் கார் வெளியீடு!

இந்த கார் ஐரோப்பிய சந்தையில் முதலில் விற்பனைக்கு வருகிறது. இந்திய வருகை குறித்து இதுவரை தகவல் இல்லை. ஆனால், இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் எலெக்ட்ரிக் கார்களின் வருகை துவங்கி இருப்பதால், இந்த புதிய மாடல் நிச்சயம் இந்தியாவில் வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
German luxury car maker Audi has revealed e-tron GT with up to 487 km-range.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X