புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இந்த கார் வரவு குறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்கும் வகையில் டீசரும் வெளியிடப்பட்டுள்ளது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

ஆடி ஏ5 ஸ்போர்ட்பேக் சொகுசு காரின் அதிக செயல்திறன் மிக்க மாடலாக எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் உருவாக்கப்பட்டு இருக்கிறது. தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்த கார் கூபே ரக வடிவமைப்பை பெற்றிருக்கிறது. 4 கதவுகள் கொண்ட மாடலாகவும் வர இருக்கிறது. டீசரில் இடம்பெற்றிருக்கும் டர்போ புளூ என்ற நீல வண்ணத் தேர்வு கவரும் வகையில் உள்ளது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

இந்த காரில் எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் பொருத்தப்பட்டு இருக்கின்றன. மேலும், புதிய வடிவமைப்பிலான 19 அங்குல அலாய் வீல்கள், மறுவடிவமைப்பு பெற்ற முன்புற பம்பர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு வி6 பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 344 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் இணைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 4.7 வினாடிகளில் எட்டிவிடும்.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் உட்புறத்தில் முழுமையான கருப்பு வண்ண இன்டீரியர் கொடுக்கப்பட்டு இருக்கிறது. கனெக்டெட் கார் தொழில்நுட்பமும் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரின் டீசர் வெளியீடு... முக்கிய அம்சங்கள் விபரம்!

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்படும். ரூ.65 லட்சம் முதல் ரூ.70 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு செய்யப்பட்டு இருக்கிறது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has teased the S5 Sportback facelift model for India ahead of launch.
Story first published: Friday, March 5, 2021, 16:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X