Just In
- 1 hr ago
இந்த ஆண்டு டொயோட்டாவிடம் இருந்து எதிர்பார்க்கப்படும் 4 புதிய கார்கள்!
- 1 hr ago
நிஜ வாழ்க்கை ஹீரோ மயூர் ஷெல்கேவை விலையுயர்ந்த பைக்கால் கவுரவித்த ஜாவா... இதோட விலை எவ்ளோ தெரியுமா?
- 2 hrs ago
சொனெட்டில் அதிரடி மாற்றங்களை கொண்டுவரும் கியா!! வேறலெவல் வசதிகள் அறிமுகமாகின்றன...
- 2 hrs ago
மறுபடியுமா... தீயாய் பரவும் கொரோனாவால் வாகன விற்பனையில் சிக்கல்... அச்சத்தில் ஆட்டோமொபைல் துறை!
Don't Miss!
- News
காய்ச்சலா.. இறுமல் இருக்கா.. சோர்வாக இருக்கிறதா.. தயங்காமல் டெஸ்ட் பண்ணுங்க.. இலவசமாக!
- Lifestyle
எந்தெந்த ராசிக்காரங்க அதிகமா பொய் சொல்லுவாங்க?உங்க ராசிப்படி நீங்க எப்படி பொய் சொல்லுவீங்க தெரியுமா?
- Movies
உதயநிதி ஸ்டாலினுக்கு இவ்வளவு பெரிய மகனா.. தோள்மேல கையப்போட்டு ஜம்முன்னு நிக்கிறாங்களே!
- Finance
இந்தியாவின் தரத்தை negative ஆக குறைத்த ஃபிட்ச்.. விளைவுகள் என்ன?
- Education
ரூ.2.20 லட்சம் ஊதியத்தில் NIT-யில் பேராசிரியர் வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Sports
ஹர்பஜன் காலில் விழுந்த சுரேஷ் ரெய்னா. களத்திலேயே நடந்த சம்பவம்.. சக வீரர்கள் திகைப்பு..காரணம் என்ன?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்தியாவில் விற்பனைக்கு வரும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு... எப்போனு தெரியுமா?
ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஆடி நிறுவனம் தனது செடான் ரக காரான, எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்திய சந்தையில் எப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்? என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக், இந்திய சந்தையில் வரும் மார்ச் 22ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. ஆடி நிறுவனம் எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் விற்பனை செய்ய சிபியூ வழியை தேர்ந்து எடுத்துள்ளது.

அதாவது முழுவதும் கட்டமைக்கப்பட்ட நிலையில், இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்டு ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் விற்பனை செய்யப்படும். ஆனால் இந்த காருக்கான முன்பதிவு இன்னும் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்படவில்லை. அதே சமயம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டவுடன் டெலிவரி பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆடி நிறுவனம் கடந்த ஆண்டு க்யூ2 எஸ்யூவி காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அந்த நிகழ்ச்சியின் கடைசியில்தான், ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு ஆடி நிறுவனம் பல்வேறு டீசர்களை வெளியிட்டு வந்தது.

அத்துடன் ஆடி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில், எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் பட்டியலும் இடப்பட்டது. இதன் மூலம் விலை தவிர்த்து, அந்த கார் குறித்த பல்வேறு தகவல்களும் தெரியவந்தன. டிசைனை பொறுத்த வரை, ஒருங்கிணைந்த எல்இடி பகல் நேர விளக்குகள் உடன் எல்இடி ஹெட்லேம்ப்களை ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் பெற்றுள்ளது.

மேலும் எஸ்5 பேட்ஜ் உடன் க்ரில் அமைப்பு, 19 இன்ச் அலாய் வீல்கள் மற்றும் பின் பகுதியில் எல்இடி டெயில்லைட்கள் ஆகியவையும் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளன. இதேபோல் இன்டீரியரை பொறுத்த வரையிலும், மிகவும் பிரீமியமான கேபினை ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் பெற்றுள்ளது.

விர்ச்சூவல் காக்பிட், பெரிய டச்ஸ்க்ரீன் இன்போடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் மற்றும் பல்வேறு கட்டுப்பாடுகளுக்கான கண்ட்ரோல்கள் உடன் தட்டையான அடிப்பாகம் கொண்ட ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகள் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம் இந்த காரில், 3.0 லிட்டர் வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் இன்ஜின் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 349 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இந்த இன்ஜினுடன் 8 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் தேர்வு ஸ்டாண்டர்டாக வழங்கப்படுகிறது.

இன்ஜின் சக்தியானது, 'க்வாட்ரோ' தொழில்நுட்பம் மூலம் நான்கு சக்கரங்களுக்கும் செலுத்தப்படும். எஸ்5 ஸ்போர்ட்பேக் கார், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிலோ மீட்டர்கள் என்ற வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டி விடும் என ஆடி நிறுவனம் தெரிவித்துள்ளது. சொகுசு கார் பிரியர்கள் மத்தியில் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.