பவர்ஃபுல் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் செடான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

செயல்திறன் மிக்க எஞ்சின் மற்றும் அதிக கவர்ச்சியை அளிக்கும் அம்சங்களுடன் கூடிய புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் சொகுசு கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த 2017ம் ஆண்டு ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய்பட்டது. ஆடி ஏ5 சொகுசு செடான் காரின் பவர்ஃபுல் வெர்ஷனாக இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் களமிறக்கப்பட்டது. இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் தனக்கென தனி வாடிக்கையாளர் வட்டத்தை இந்த கார் பெற்றுள்ளது.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த நிலையில், அதிக சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்டுள்ள எஸ்-5 ஸ்போர்ட்பேக் கார் இன்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. வடிவமைப்பிலும், தொழில்நுட்ப அம்சங்களிலும் பல்வேறு மாறுதல்களுடன் இந்த புதிய மாடல் வந்துள்ளது.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

புதிய ஆடி எஸ்-5 ஸ்போர்ட்பேக் காரில் கூர்மையான டிசைன் அம்சங்களுடன் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள் இடம்பெற்றுள்ளன. கருப்பு வண்ணத்திலான தேன்கூடு வடிவ க்ரில் அமைப்பும், அதில் சில்வர் வண்ண அலங்கார பாகங்களும் அசத்துகின்றன. புதிய பம்பர் அமைப்பு, 19 அங்குல அலாய் வீல்கள், நான்கு புகைப்போக்கி குழல்கள், ஸ்பாய்லர் ஆகியவை இந்த காரின் தோற்றத்தை மிரட்டலாகவும், வசீகரமாகவும் காட்டுகின்றன.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரின் உட்புறத்தில் முழுவதும் கருப்பு வண்ண இன்டீரியர் தீம் கொடுக்கப்பட்டுள்ளது. 10 அங்குல தொடுதிரையுடன் கூடிய ஃப்ளோட்டிங் வகை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.2 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், எஸ் பேட்ஜ் கொண்ட தட்டையான அடிப்பாகத்துடன் கூடிய 3 ஸ்போக் ஸ்டீயரிங் வீல் ஆகியவை சிறப்பு சேர்க்கின்றன.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த செயல்திறன் மிக்க சொகுசு செடான் காரில் வி6 சிலிண்டர் அமைப்புடைய 3.0 லிட்டர் ட்வின் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 354 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 8 ஸ்பீடு ட்ரிப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

ஆடி நிறுவனத்தின் க்வாட்ரோ ஆல் டிரைவ் சிஸ்டம் மூலமாக அனைத்து சக்கரங்களுக்கும் எஞ்சின் சக்தி செலுத்தப்படுகிறது. இந்த கார் பூஜ்ய நிலையில் இருந்து 100 கிமீ வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 250 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமை வாய்ந்தது.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் டைனமிக், கம்ஃபோர்ட், எஃபிசியன்சி, ஆட்டோ மற்றும் இன்டிவிஜூவல் என 5 விதமான டிரைவிங் மோடுகள் கொடுக்கப்பட்டுள்ளன. இது ஓட்டுனரின் விருப்பம் மற்றும் சாலை நிலைகளை பொறுத்து மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும்.

ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம்!

2021 மாடலாக வந்துள்ள புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் காருக்கு ரூ.79.06 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இறக்குமதி செய்து விற்பனை செய்யப்பட உள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் ஏஎம்ஜி சி43, பிஎம்டபிள்யூ எம்340ஐ ஆகிய கார்களுக்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi has launched S5 Sportback performance sedan in India and priced at Rs.79.06 lakh (Ex-showroom India).
Story first published: Monday, March 22, 2021, 11:38 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X