கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் இந்திய டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளது. இது தொடர்பான படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

ஆடி நிறுவனம் புத்தம் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை இந்தியாவில் கடந்த வாரத்தில் ரூ.79.06 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில் தற்போது இந்த 2021 ஆடி கார் இந்தியாவில் சில டீலர்ஷிப் மையங்களை வந்தடைய துவங்கியுள்ளது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

சூப்பர்கார்ஸ் & சூப்பர்பைக் இன் அகமதாபாத் என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள இதுதொடர்பான படங்களில் குஜராத்தில் உள்ள டீலர்ஷிப் ஒன்றிற்கு வந்தடைந்துள்ள ஒரு எஸ்5 ஸ்போர்ட்பேக் காரை பார்க்க முடிகிறது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

இந்த கார் கண்ணை கவரும் க்ரீன் மெட்டாலிக் நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஆடி நிறுவனம் இந்த ஆண்டில் அறிமுகம் செய்துள்ள இரண்டாவது கார் மாடல் எஸ்5 ஸ்போர்ட்பேக் ஆகும்.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

முன்னதாக இந்த ஆண்டு துவக்கத்தில் ஏ4 ஃபேஸ்லிஃப்ட் காரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருந்தது. ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்கில் 3.0 லிட்டர், வி6 டர்போ-பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

அதிகப்பட்சமாக 349 பிஎச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. இது குவாட்ரோ அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தின் உதவியுடன் என்ஜினின் ஆற்றலை அனைத்து நான்கு சக்கரங்களுக்கும் வழங்கும் விதத்தில் கார் வடிவமைக்கப்பட்டுள்ளது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

இந்த ஆடி காரில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 4.8 வினாடிகளில் எட்டிவிட முடியும். சிங்கிள்-ஃப்ரேமில் க்ரில் அமைப்பை பெறும் புதிய எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் மேலும் முன்பக்கத்தில் மேட்ரிக்ஸ் எல்இடி ஹெட்லேம்ப்களை பெற்றுள்ளது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

இவற்றுடன் தனித்தனியாக தெரியும் நிறத்திலான பின்பக்கத்தை காட்டும் பக்கவாட்டு கண்ணாடிகள், எல்இடி டெயில்லைட்கள், நான்கு-முனை எக்ஸாஸ்ட் குழாய்கள், 19 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் உள்ளிட்டவற்றையும் இந்த எஸ்5 ஸ்போர்ட்பேக் கார் கொண்டுள்ளது.

கம்பீரமாக இந்திய ஷோரூமில் காட்சித்தரும் புதிய ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக்!! டெலிவிரி விரைவில் ஆரம்பம்

லெதர்-அல்காண்ட்ரா உள்ளமைவுடன் வடிவமைக்கப்படும் இதன் உட்புற கேபினில் மல்டி மீடியா இண்டர்ஃபேஸ் நாவிகேஷன் ப்ளஸ் உடன் 10 இன்ச்சில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், விர்டியுவல் காக்பிட், பனோராமிக் சன்ரூஃப், மூன்று-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், தட்டையான-தாழ்வான ஸ்டேரிங் சக்கரம், ஸ்போர்ட்ஸ் இருக்கைகள் மற்றும் ஹெட்ஸ்-அப் திரை முதலியவற்றை ஆடி நிறுவனம் வழங்குகிறது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
New Audi S5 Sportback arrives at dealerships in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X