ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

சொகுசு உற்பத்தி நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் மின்சார காரை குறைவான விற்பனையில் களமிறக்குவதற்கான முயற்சியில் களமிறங்கியிருக்கின்றது. இதுகுறித்த முக்கிய தகவல்களை இப்பதிவில் பார்க்கலாம், வாங்க.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான ஆடி, இந்தியாவில் அதன் மின்சார கார்களை மிகவும் குறைவான விலையில் விற்பனைக்குக் களமிறக்குவதற்கான முயற்சியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து பிரபல ஆங்கிலசெய்தி தளம் ஒன்று வெளியிட்டிருக்கும் செய்தியில், "நிறுவனம் அதன் மின் வாகன உற்பத்தியை உள்நாட்டில் தொடங்குவதற்கான திட்டத்தை கையிலெடுத்திருப்பதாக" தெரிவித்துள்ளது.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

தற்போது நிறுவனம் அதன் மின்சார இருசக்கர வாகனங்களை சிகேடி வாயிலாகவே (முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனங்களாக) இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கி வருகின்றது. இதுமாதிரியான வாகனங்களுக்கு நம் நாட்டில் வரி அதிகம் ஆகும். ஆகையால், ஆடி மின்சார கார்கள் பல மடங்கு அதிக விலைக் கொண்டதாகக் காட்சியளிக்கின்றன.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

இதனை உள்நாட்டில் வைத்து உற்பத்தி செய்தால் பல மடங்கு வரியைக் குறைத்து, காரின் விலையையும் குறைக்க முடியும். ஆகையால், ஆடி நிறுவனம் அதன் மின்சார கார்களை இந்தியாவிலேயே வைத்து தயாரிக்க திட்டமிட்டிருக்கின்றது. நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு இந்தியாவில் நல்ல வரேவற்புக் கிடைத்து வருகின்றது.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

நிறுவனம், இ-ட்ரான் எஸ்யூவி மற்றும் இ-ட்ரான் ஜிடி ஆகிய சொகுசு மின்சார கார்களுக்கு நல்ல டிமாண்ட் நிலவி வருகின்றது. இதன் முதல் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட வெகுசில நாட்களிலேயே அனைத்து யூனிட்டுகளும் விற்று தீர்ந்தன. இத்தகைய அமோக வரவேற்பை ஆடி மின்சார கார்கள் பெற்று வருகின்றது.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

இத்தகைய சூழ்நிலையிலேயே குறைவான விலையில் இன்னும் பல மடங்கு விற்பனை விகிதத்தை உயர்த்தும் முயற்சியில் நிறுவனம் களமிறங்கியிருக்கின்றது. தற்போது நிறுவனம் இரண்டாம் பேட்ச் மின்சார கார்களுக்கான புக்கிங்கைத் தொடங்கியிருக்கின்றது. வரும் ஜனவரி மாதம் இவை டெலிவரி கொடுக்கப்படும் என நிறுவனம் தெரிவித்திருக்கின்றது.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

ஆடி நிறுவனத்தின் இந்திய தலைவர் பல்பீர் சிங் தில்லான் இதுகுறித்து கூறியதாவது, "மின்சார வாகனங்களுக்கான வரவேற்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் வளர்ந்து காணப்படுகின்றது. இந்தியாவில் இறக்குமதி செய்யும் வாகனங்களுக்கு 60 முதல் 110 சதவீதம் வரை இறக்குமதி வரி வசூலிக்கப்படுகின்றது. இந்த வரியில் இருந்து எங்களுக்கு 3 முதல் 5 ஆண்டுகள் வரை வரி விலங்க வேண்டும் என அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்க இருக்கின்றோம். உற்பத்தி உள்ளூர்மயமாக்கலை ஆராய இது பெரிய அளவில் உதவும்" என்றார்.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

ஆகையால், நிறுவனம் மிக விரைவில் ஆடி இ-ட்ரான் மின்சார கார்களை இந்தியாவில் வைத்து உற்பத்தி செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அது எப்போது முழுமையாக இப்பணியைத் தொடங்கும் என்ற அதிகாரப்பூர்வ தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

ஆடி இ-ட்ரான் எலெக்ட்ரிக் எஸ்யூவி இந்தியாவில் ரூ. 99.99 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையிலும், உயர் நிலை வேரியண்ட் ரூ. 1.18 கோடி என்ற விலையிலும் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. ஆடி இ-ட்ரான் ஜிடியின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலையே ரூ. 1.79 கோடிகள் ஆகும். இதன் உச்ச நிலை வேரியண்ட் ரூ. 2.04 கோடிகள் ஆகும்.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

இத்தகைய அதிகபட்ச விலையிலேயே ஆடி நிறுவனத்தின் மின்சார கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இதனைக் குறைக்கும் முயற்சியிலே சொகுசு கார் உற்பத்தி நிறுவனம் ஆடி களமிறங்கியிருக்கின்றது. நிறுவனத்தின் இந்த முயற்சி இந்திய ஆடி கார் பிரியர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

ரொம்ப ரொம்ப கம்மி விலையில் ஆடி இ-கார் கிடைக்க போகுது... எவ்வளவு குறைவான விலையில் விற்பனைக்கு வரும்?

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்து வருகின்றது. குறிப்பாக சொகுசு ரக மின்சார வாகனங்களுக்கு கூடுதல் வரவேற்புக் கிடைத்து வருகின்றது. இதை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆடி நிறுவனத்தின் மின்சார கார்களுக்கு கிடைத்து வரும் வரவேற்பு அமைந்திருக்கின்றது. இதேபோன்று, புக்கிங் தொடங்கப்பட்ட சில தினங்களிலேயே மினி நிறுவனத்தின் மின்சார கார்களும் விற்று தீர்ந்திருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.

Most Read Articles

மேலும்... #ஆடி #audi
English summary
Audi working to get e cars much cheaper in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X