இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

இந்தியா, வேகமாக வளர்ந்துவரும் ஆட்டோமொபைல் சந்தையை கொண்ட நாடு என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனாலேயே பல வெளிநாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நம் நாட்டில் களமிறங்கி வருகின்றன. அதுமட்டுமின்றி, சீனாவை போன்று இந்தியாவும் மிக பெரிய சந்தை என்பது அனைத்து நிறுவனங்களுக்கும் நன்றாகவே தெரியும். இந்தியாவில் தொழிற்சாலையை நிறுவுவதும், தயாரிப்பு பணிகளை மேற்கொள்வதும் செலவு குறைந்ததாக இருப்பதும் வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு கூடுதல் அனுகூலாக விளங்குகிறது.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

வெளிநாடுகளில் இருந்து வருகை தரும் நிறுவனங்களுக்கே இத்தகைய சவுகரியங்கள் என்றால், இந்தியாவிலேயே உருவாகிய நிறுவனங்களுக்கு எத்தகைய சலுகைகள் கிடைக்கும் என்பதை நினைத்து பாருங்கள். அத்தகைய உள்நாட்டு ஆட்டோமொபைல் நிறுவனங்களை பற்றி தான் இனி இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். வாருங்கள் செய்திக்குள் போவோம்.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்

இந்தியாவின் பழமையான வாகன தயாரிப்பு நிறுவனமாக விளங்கும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் 1942இல் நிறுவப்பட்டது. மேற்கு வங்காள மாநிலம், கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் அடையாளமே அதன் பிரபலமான அம்பாசடார் கார் தான். அந்த காலக்கட்டத்தில் பல பகுதிகளில் அதிகாரப்பூர்வ அரசாங்க வாகனமாகவும், விஐபிகள் & அரசியல்வாதிகள் பெரிதும் விரும்பி வாங்கக்கூடிய வாகனமாகவும் விளங்கிய அம்பாசடார் கார்கள் பல வருடங்களுக்கு விற்பனையில் இருந்தன.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

அதன்பின் அம்பாசடார் கார்களின் விற்பனையில் தொய்வு ஏற்பட, ஹிந்துஸ்தான் மோட்டார்ஸின் காலமும் நிறைவு பெறும் நிலைக்கு வந்தது. தற்சமயம் மிட்சுபிஷி நிறுவனத்துடன் இணைந்து அந்த நிறுவனத்தின் பஜேரோ ஸ்போர்ட் & அவுட்லேண்டர் கார்களை ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் இந்தியாவில் விற்பனை செய்து வருகிறது. இதற்கிடையில் இந்த நிறுவனம் சமீபத்தில் அம்பாசடார் பிராண்டிற்கு புத்துயிர் கொடுக்கும் நோக்கில் அந்த பிராண்டினை பியாஜியோட் சிட்ரோன் நிறுவனத்திடம் விற்றுள்ளது.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

டாடா மோட்டார்ஸ்

கிட்டத்தட்ட 80 வருடங்களுக்கு முன்பு நிறுவப்பட்டு, தற்சமயம் உலகளவில் கால்பதித்துள்ள டாடா க்ரூப்பின் ஒரு அங்கமாக விளங்கும் டாடா மோட்டார்ஸ் தற்போதைக்கு இந்தியாவின் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமாக விளங்குகிறது. இந்தியாவில் மட்டுமின்றி டாடா மோட்டார்ஸுக்கு தென்னாப்பிரிக்கா, தாய்லாந்து, அர்ஜெண்டினா மற்றும் யுனிட்டெட் கிங்டமிலும் தொழிற்சாலைகள் உள்ளன.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

நம்பகத்தன்மை மற்றும் சிறந்த எரிபொருள் திறனிற்காக டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமானதாக உள்ளது. அத்துடன், சமீபத்திய மாடர்ன் டாடா கார்கள் உலகளாவிய என்சிஏபி மோதல் சோதனைகளில் சிறப்பான மதிப்பெண்களை பெற்று வருகின்றன. இதன் மூலம் தரமான, பாதுகாப்புமிக்க கார்களை வழங்கும் நிறுவனமாகவும் வாடிக்கையாளர்களால் டாடா மோட்டார்ஸ் பார்க்கப்படுகிறது.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

அசோக் லேலண்ட்

லாரிகள் மற்றும் பெரிய அளவிலான ஆட்டோமொபைல் வாகனங்களில் மொத்த இந்திய வர்த்தகம் மற்றும் போக்குவரத்தும் ஒரு காலத்தில் அசோக் லேலண்ட்டை தான் நம்பியிருந்தன என்று சொன்னால் அது மிகையில்லை. தற்சமயம் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் இருந்து ஏகப்பட்ட கமர்ஷியல் வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

நமது தமிழகத்தை தாயகமாக கொண்ட அசோக் லேலண்ட்டின் முதல் தொழிற்சாலை வட சென்னையில், எண்ணூரில் அமைக்கப்பட்டது. இது இன்னும் செயல்பட்டு வருகிறது. அதன்பின் ஓசூர், மஹாராஷ்டிரா, ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் புதிய தொழிற்சாலைகளை இந்த நிறுவனம் நிறுவியது. இந்த தொழிற்சாலைகளில் இருந்து பொது பயன்பாட்டிற்கான கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமின்றி, பிரத்யேகமான இராணுவ வாகனங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன, தொடர்ந்து தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

ஈச்சர் மோட்டார்ஸ்

கமர்ஷியல் வாகன தயாரிப்பிற்கு பிரபலமான ஈச்சர் மோட்டார்ஸ் தான் ராயல் என்பீல்டு மோட்டார்சைக்கிள்களுக்கு தாய் நிறுவனமாக விளங்குவது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கலாம். குட்எர்த் என்கிற பெயரில் 1948இல் நிறுவப்பட்ட இந்த நிறுவனம் ஆரம்பக்கால கட்டத்தில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் டிராக்டர்களை விநியோகம் செய்வதற்கும், அவற்றிற்கான பராமரிப்பு சேவைகளை வழங்கக்கூடிய நிறுவனமாகவே இருந்தது.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

அதன்பின், 1959இல் ஜெர்மன் நாட்டை சேர்ந்த ஈச்சர் டிராக்டர்ஸ் நிறுவனத்துடன் சேர்ந்து ஈச்சர் மோட்டார்ஸ் நிறுவனம் ஈச்சர் டிராக்டர் கார்பிரேஷன் ஆஃப் இந்தியா என்கிற டிராக்டர்கள் தயாரிப்பு & விற்பனை நிறுவனத்தை நிறுவியது. இருப்பினும் தற்சமயம் டிராக்டர்கள் விற்பனையில் இல்லாத ஈச்சர் மோட்டார்ஸின் ராயல் என்பீல்டு பிராண்ட் இன்று உலகம் முழுவதிலும் விரிவடைந்துள்ளது. 1990இல் என்ஃபீல்டின் பங்குகளை ஈச்சர் மோட்டார் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிலேயே உருவான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டும் இத்தனையா!! டாப் பிராண்ட்கள்...

மஹிந்திரா & மஹிந்திரா

குறிப்பாக டிராக்டர்களை அதிகளவில் விற்பனை செய்யும் ஆட்டோமொபைல் நிறுவனமாக மஹிந்திரா & மஹிந்திரா விளங்குகிறது. கமர்ஷியல் வாகனங்கள் மட்டுமின்றி தனிப்பயன்பாட்டு கார்களும் மஹிந்திரா பிராண்டில் இருந்து விற்பனையாகி வருவதை பார்த்து கொண்டுதான் இருக்கிறோம். கார்கள் விற்பனையில் சமீபத்தில் பிராண்டின் லோகோவை மாற்றி இருந்த மஹிந்திரா கடைசியாக கடந்த செப்டம்பரில் எக்ஸ்யூவி700 மாடலை அறிமுகப்படுத்தி இருந்தது.

Most Read Articles
English summary
Automobile Brands Born In India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X