6புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்!

ஆரம்பநிலை மின் வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று ஒட்டுமொத்தமாக 6 புதுமுக மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் அறிமுக நிகழ்வில் மத்திய மற்றும் மாநில அரசு அமைச்சர்கள் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்வு பற்றிய சிறப்பு தகவலைக் கீழே காணலாம்.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் பாலன் இன்ஜினியரிங் நிறுவனம், அதன் ஆறு புதுமுக மின்சார வாகனங்களை நாட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஓர் ஆரம்பநிலை வாகன உற்பத்தி நிறுவனம் ஆகும். இதுவே வெவ்வேறு துறையில் பயன்படக்கூடிய வகையில் மின்சார வாகனங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

கார்கோ, விவசாயம் மற்றும் குடிமை வசதி பணிகள் ஆகியவற்றில் பயன்படக்கூடிய வகையிலான வாகனங்களை நிறுவனம் அறிமுகப்படுத்தியிருக்கின்றது. இதன் அறிமுக விழாவில் கர்நாடகா மாநிலத்தின் தொழில்துறை அமைச்சர் ஜக்தீஷ் ஷெட்டர் மற்றும் கெமிக்கல் மற்றும் உரம் துறையின் அமைச்சர் சதானந்தா கவுடா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

இவர்களுடன், வீடியோ கான்ஃபெரன்சிங் வாயிலாக மத்திய அமைச்சர் நிதின் கட்கரியும் கலந்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தகுந்தது. புதுமுகு மின் வாகனங்களின் அறிமுகம் பெங்களூருவில் உள்ள ஹோட்டல் லலித் அசோக் எனும் இடத்திலேயே அரங்கேறியது. இந்த நிகழ்வில் அமைச்சர்கள் மட்டுமின்றி மாநிலத்தின் முக்கிய அரசு அதிகாரிகளும் பங்கேற்றனர்.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

லோடு வாகனம் - விஷ்வாஸ், கார்பேஜ் வாகனம் - ஸ்வச் ரத், பாசஞ்ஜர் ஆட்டோ ரிக்ஷா பி5, தூய்மை வாகனம், ஃபுமிகேஷன் (கொசு மருந்து உமிழும்) வாகனம் மற்றும் புஷ் கார்ட் கமலா ஆகியவற்றையே பாலன் இன்ஜினியரிங் நிறுவனம் அறிமுகப்படுத்திய மின் வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்கள் கிராமப்புறங்களின் மிக சவாலான சாலையைக் கூட மிக சுலபமாக கையாளும் சிறப்பு திறன்களுடன் உருவாகியிருக்கின்றது.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

தொடர்ந்து, இந்த மின் வாகனங்களின்மீது அதிக நம்பிக்கையை ஏற்படுத்தும் வகையில் 4 ஆண்டுகள் வாரண்டியை மோட்டார் மற்றும் பேட்டரிகளுக்கு தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கின்றது. தற்போது அறிமுகம் செய்யப்பட்டிருக்கும் மின்வாகனங்கள் எளிமையான் காய் கறி விற்பனையாளர்கள் மற்றும் வாடகை வாகன ஓட்டுநர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும் என நிறுவனம் நம்பிக்கைத் தெரிவித்துள்ளது.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

இவர்களுக்கு அரசுத்துறைகளுக்கும் இந்த வாகனங்களும் மிகுந்த உதவியை வழங்க இருக்கின்றன என பாலன் இன்ஜினியரிங் தெரிவித்திருக்கின்றது. மின் வாகனங்களின் விலை, பேட்டரி திறன் மற்றும் பிற சிறப்பம்சங்கள் பற்றிய தகவல் வெளியிடப்படவில்லை. இதுகுறித்த தகவல்கள் மிக விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

தற்போது மாதம் ஒன்றிற்கு 300 முதல் 400 யூனிட் வரையிலான உற்பத்தி திறனுடன் பாலன் இன்ஜினியரிங் நிறுவனம் பெங்களூருவில் இயங்கி வருகின்றது. இதனை அதிகரிக்கச் செய்யும் வகையில் புதிய தொழிற்சாலையை பால்கோட் பகுதியில் நிறுவ நிறுவனம் திட்டமிட்டுக் கொண்டிருக்கின்றது. அடுத்த 6-9 மாதங்களுக்குள் இந்த தயாரிப்பு ஆலையில் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுவிடும் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

6 புதுமுக மின் வாகனங்கள் அறிமுகம்... இவை ரொம்ப ஸ்பெஷலானவை! அறிமுக நிகழ்வில் பங்கேற்ற மத்திய, மாநில அமைச்சர்கள்...

25 ஏக்கர் பரப்பளவில் இந்த ஆலை உருவாக்கப்பட்டு வருகின்றது. வருடத்திற்கு சுமார் 25 யூனிட்டுகள் உற்பத்தி என்ற முதல் கட்ட திட்டத்தின் அடிப்படையில் இந்த ஆலை இயங்கும். இதனைத் தொடர்ந்தே உற்பத்தி அதிகரிப்பு பணி இங்கு மேற்கொள்ளப்பட இருக்கின்றது. சுமார் 50 கோடி முதலீட்டில் செய்யப்பட்டு வரும் இந்த விரிவாக்கம் பணியின் மூலம் 500க்கும் அதிகமானோர் வேலைப் பலனை அடைய இருக்கின்றனர்.

Most Read Articles

English summary
Bengaluru Based Automaker Balan Engineering Launches 6 New Electric Vehicles In India. Read In Tamil.
Story first published: Friday, January 29, 2021, 17:48 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X