பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக இருக்கும் நிலையில், மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

இந்தியாவில் ஹேட்ச்பேக் கார்கள் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. சிறிய குடும்பங்களுக்கும், நகர பகுதிகளில் ஓட்டுவதற்கும் ஹேட்ச்பேக் கார்கள்தான் மிகவும் ஏற்றவை. இந்த சூழலில் இந்தியாவில் தற்போது பெட்ரோல், டீசல் விலை மிகவும் அதிகமாக உள்ளது. எனவே சிறப்பான மைலேஜை வழங்க கூடிய ஹேட்ச்பேக் கார்களை வாங்குவதுதான் வாடிக்கையாளர்களின் எண்ணமாக உள்ளது. அவர்களுக்காக இந்திய சந்தையில் கிடைக்கும் சிறப்பான மைலேஜை வழங்க கூடிய ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

மாருதி சுஸுகி வேகன் ஆர் - ஒரு லிட்டருக்கு 20.52 கிலோ மீட்டர் முதல் ஒரு கிலோவிற்கு 32.52 கிலோ மீட்டர்

இது இந்தியர்களுக்கு விருப்பமான ஃபேம்லி ஹேட்ச்பேக் காராக திகழ்கிறது. இந்த கார் சிறப்பான இடவசதியை வழங்குவதுடன், நடைமுறை பயன்பாட்டிற்கு ஏற்றதாகவும் திகழ்கிறது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பரந்து விரிந்த சர்வீஸ் நெட்வொர்க் காரணமாக வேகன் ஆர் காரின் உரிமையாளராக இருப்பது சிறப்பான அனுபவமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜினில் இந்த கார் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்குகிறது. அத்துடன் ஃபேக்டரி-ஃபிட்டட் சிஎன்ஜி கிட் உடனும் மாருதி சுஸுகி வேகன் ஆர் கார் கிடைக்கிறது. பெட்ரோல், டீசலை விட சிஎன்ஜி எரிபொருளின் விலை குறைவு என்பது மற்றொரு முக்கியமான சிறப்பம்சம்.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் - ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் முதல் 28 கிலோ மீட்டர் வரை

ஹூண்டாய் கிராண்ட் ஐ10 நியோஸ் கார், 1 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் தேர்வுகளை பெற்றுள்ளது. இந்த காரின் இரண்டு பெட்ரோல் இன்ஜின்களும் ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வழங்க கூடியதாக உள்ளன. அதே நேரத்தில் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 23-28 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியதாக இருக்கிறது.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

டாடா அல்ட்ராஸ் - ஒரு லிட்டருக்கு 18 முதல் 25 கிலோ மீட்டர்

இந்தியாவின் மிகவும் பாதுகாப்பான ஹேட்ச்பேக் என்ற பெருமையை தன்வசம் வைத்திருக்கும் டாடா அல்ட்ராஸ் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு வகையான இன்ஜின் தேர்வுகளுடனும் கிடைக்கிறது. இந்த காரின் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 21 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியது. அதே நேரத்தில் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 18 கிலோ மீட்டர் மைலேஜை கொடுக்க கூடியது.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

அதே சமயம் இந்த காரின் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 25 கிலோ மீட்டருக்கும் அதிகமான மைலேஜை வாரி வழங்குகிறது. ஒரு பிரீமியம் ஹேட்ச்பேக் காருக்கு இது உண்மையிலேயே மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் சந்தேகமில்லை. டாடா அல்ட்ராஸ் கார், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் முழுமையாக 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

ஹூண்டாய் ஐ20 - ஒரு லிட்டருக்கு 20 கிலோ மீட்டர் முதல் 25 கிலோ மீட்டர்

ஹூண்டாய் ஐ20 காரில், 1.2 லிட்டர் டீசல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1 லிட்டர் டர்போ பெட்ரோல் என மொத்தம் மூன்று இன்ஜின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இதில், 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20-21 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. 1 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜினும் கிட்டத்தட்ட இதே அளவிற்கான மைலேஜைதான் வழங்குகிறது.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

அதே சமயம் 1.2 லிட்டர் டீசல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் மைலேஜை வழங்கும் திறன் வாய்ந்ததாக உள்ளது. இதுவும் டாடா அல்ட்ராஸை போல், பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த கார்தான். டாடா அல்ட்ராஸ், மாருதி சுஸுகி பலேனோ போன்ற கார்களுடன் ஹூண்டாய் ஐ20 போட்டியிட்டு வருகிறது.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

மாருதி சுஸுகி பலேனோ - ஒரு லிட்டருக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர்

மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின்தான் பலேனோ காரிலும் வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் ஒரு லிட்டருக்கு 24 கிலோ மீட்டர் வரை மைலேஜ் வழங்க கூடியது. டாடா அல்ட்ராஸ், ஹூண்டாய் ஐ20 ஆகிய கார்களை போலவே மாருதி சுஸுகி பலேனோவும் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டை சேர்ந்த கார்தான்.

பெட்ரோல், டீசல் விலை பற்றிய கவலையை விடுங்க... மைலேஜை வாரி வழங்கும் ஹேட்ச்பேக் கார்கள் உங்களுக்காக!

டாடா டியாகோ - ஒரு லிட்டருக்கு 20 முதல் 24 கிலோ மீட்டர்

டாடா டியாகோ 'ஃபன் டூ டிரைவ்' கார் ஆகும். டாடா டியாகோ கார் 20 முதல் 24 கிலோ மீட்டர் மைலேஜை வழங்க கூடியது. இந்தியாவின் பாதுகாப்பான கார்களில் ஒன்று என்பது இந்த காரின் கூடுதல் சிறப்பம்சம் ஆகும். டாடா டியாகோ கார் சாலை விபத்துக்களில் இருந்து பல முறை பயணிகளின் உயிரை காப்பாற்றியுள்ளது.

Most Read Articles

English summary
Best mileage hatchbacks maruti suzuki wagonr hyundai grand i10 nios tata altroz
Story first published: Friday, December 24, 2021, 18:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X