எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

வெறும் 75 ஆயிரம் ரூபாய்க்குள் கிடைக்க கூடிய சிறந்த செகண்ட் ஹேண்ட் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

இந்தியாவின் யூஸ்டு கார் மார்க்கெட்டில் ஒவ்வொரு பட்ஜெட்டிற்கும் விலையில் மாடல்கள் கிடைக்கின்றன. ஆனால் கொரோனா வைரஸ் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளால் தற்போது நிறைய பேருக்கு நிதி நெருக்கடிகள் இருக்கும். எனவே 75 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

ஹூண்டாய் சாண்ட்ரோ (2008-2010)

இந்தியாவில் மிகவும் பிரபலமாக உள்ள ஹேட்ச்பேக் கார்களில் ஹூண்டாய் சாண்ட்ரோவும் ஒன்று. உங்கள் பட்ஜெட் 75 ஆயிரம் ரூபாய்க்குள் என்றால், சாண்ட்ரோ ஸிங்க் (Santro Xing) நல்ல தேர்வாக இருக்கும். இதன் இன்ஜின் நம்பத்தன்மை வாய்ந்தது என்பதுடன், நீண்ட ஆயுளையும் பெற்றிருப்பது மிகவும் சிறப்பான விஷயம்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

மாருதி ஆல்டோ 800

75 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்களின் பட்டியலில் அடுத்து வருவது மாருதி ஆல்டோ 800 (Maruti Alto 800). இந்த பட்ஜெட்டில் பழைய வடிவம் மற்றும் புதிய வடிவம் என இரண்டு மாடல்களையும் வாங்க முடியும். இது இந்தியாவின் சிறிய குடும்பங்களுக்கு விருப்பமான ஹேட்ச்பேக் கார் ஆகும்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

மாருதி ஆல்டோ 800 கார் இந்திய சந்தையில் இன்றளவும் இருக்கிறது. இது மிகப்பெரிய சாதகம் ஆகும். ஏனெனில் மிகவும் பழைய காரை வாங்குகிறோம் என்ற எண்ணம் உங்களுக்கு ஏற்படாது. அத்துடன் மாருதி சுஸுகி நிறுவனத்தை சேர்ந்த கார் என்பதால், சர்வீஸ் போன்ற விஷயங்களுக்கும் பிரச்னை வராது என்பது மற்றொரு சாதகம்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

டாடா இண்டிகோ

இந்தியாவின் முதல் சப்-4 மீட்டர் செடான் (Sub-4-metre Sedan) ரகத்தை சேர்ந்த கார் என்ற பெருமை டாடா இண்டிகோவிற்கு உண்டு. செகண்ட் ஹேண்டு மார்க்கெட்டில், நீங்கள் ஒரு பட்ஜெட் காரை வாங்க விரும்புகிறீர்கள் என்றால், டாடா இண்டிகோ இசிஎஸ் (Tata Indigo eCS) உங்களுக்கு மிகச்சிறந்த தேர்வாக இருக்கும்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

டாடா இண்டிகா

நீங்கள் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த தயாரிப்பு என டாடா இண்டிகா (Tata Indica) காரை கூறலாம். இந்த காருக்காக நீங்கள் செய்யும் செலவு மிகச்சிறந்த முதலீடு. குறிப்பாக நீங்கள் முதல் முறையாக கார் வாங்குபவர் என்றால், டாடா இண்டிகா மிகச்சிறந்த தேர்வு. 75 ஆயிரம் ரூபாய் பட்ஜெட்டிற்குள் டாடா இண்டிகா மிக எளிமையாக கிடைக்கும்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

ஹோண்டா சிட்டி (2006-2008)

ஹோண்டா சிட்டி செடான் ரகத்தை சேர்ந்த கார் ஆகும். 75 ஆயிரம் ரூபாய் என்ற மிக குறைந்த பட்ஜெட்டில் வாங்கினாலும், உங்களுக்கு சொகுசான பயண அனுபவம் கிடைக்கும். ஹோண்டா சிட்டி காரை சொந்தமாக வைத்திருப்பது உண்மையிலேயே மிகச்சிறப்பான விஷயம். ஹோண்டா சிட்டி காரில் முதலீடு செய்வதற்கு பெரும்பாலும் யாரும் தயக்கம் காட்டுவதே இல்லை.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

ஃபோர்டு ஐகான்

ஃபோர்டு ஐகான் கார் அதன் காலகட்டத்தில் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது. இந்த காரிலும் நீங்கள் துணிந்து முதலீடு செய்யலாம். வீணாக பணத்தை செலவழித்து விட்டோமே என்ற வருத்தம் உங்களுக்கு ஏற்படாது. இந்தியாவின் யூஸ்டு கார் மார்க்கெட்டில், ஃபோர்டு ஐகான் மிக எளிதாக கிடைக்கிறது. சற்று அதிக தொகை செலவாகிறது என்றாலும் கூட, நீங்கள் யோசிக்காமல் இந்த காரை வாங்கலாம்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

கவனமா இருங்க!

நாங்கள் இங்கே தொகுத்து வழங்கியிருப்பது மிகச்சிறந்த கார்கள் ஆகும். ஆனால் காரின் உரிமையாளர் பயன்படுத்திய விதம், எத்தனை உரிமையாளர்கள்? என்பது போன்ற பல்வேறு அம்சங்களை பொறுத்து ஒவ்வொரு காரின் கண்டிஷனும் மாறுபடும். எனவே காரின் கண்டிஷனை உறுதி செய்து கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

இவை அனைத்தும் 75 ஆயிரம் ரூபாய் என்ற மிக குறைவான பட்ஜெட்டில் கிடைப்பதால், பழுதுகள் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே நீங்கள் சரியாக சோதனை செய்யாவிட்டால், உங்களுக்கு பிரச்னைகள் ஏற்படலாம். காரை முழுமையாக சோதனை செய்யாமல், பணத்தை செலவழித்து வாங்கி விடாதீர்கள்.

எல்லாமே பெஸ்ட்... வெறும் 75 ஆயிரத்திற்குள் வாங்க கூடிய செகண்ட் ஹேண்ட் கார்கள்... இவ்ளோ நாளா இது தெரியாம போச்சே

ஒருவேளை உங்களுக்கு சந்தேகம் இருந்தால், நல்ல நம்பிக்கையான மற்றும் செகண்ட் ஹேண்ட் கார்களை வாங்குவதில் நிபுணத்துவம் பெற்றவர்களின் உதவியை நாடுங்கள். மெக்கானிக்குகள், நண்பர்கள் போன்றவர்களின் உதவியை நீங்கள் கோரலாம். உங்களுக்கு சிக்கல் ஏற்படாமல் இருப்பதற்கு இது மிகச்சிறந்த வழி.

Most Read Articles
English summary
Best second hand cars under rs 75000 hyundai santro maruti alto 800 tata indica
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X