ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இந்தியாவில் கடந்த ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனை செய்யப்பட்ட டாப்-5 பிரீமியம் ஹேட்ச்பேக் கார்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில், மாருதி சுஸுகி பலேனோ முதல் இடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 16,384 பலேனோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 21,217 ஆக இருந்தது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இதன் மூலம் மாருதி சுஸுகி பலேனோ காரின் விற்பனை 22.78 சதவீதம் குறைந்துள்ளது. இந்த பட்டியலில் டாடா அல்ட்ராஸ் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. டாடா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 6,649 அல்ட்ராஸ் கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் அதற்கு முந்தைய மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 7,550 ஆக இருந்தது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இதன் மூலம் அல்ட்ராஸ் விற்பனை 11.93 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. அதிகம் விற்பனையாகி வரும் டாடா கார்களில் ஒன்றாக அல்ட்ராஸ் உள்ளது. இதற்கு அதன் பாதுகாப்பு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாகும். குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் டாடா அல்ட்ராஸ் 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்றுள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இதன் மூலம் பிரீமியம் ஹேட்ச்பேக் செக்மெண்ட்டில் மிகவும் பாதுகாப்பான காராகவும், குளோபல் என்சிஏபி மோதல் சோதனைகளில் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற மூன்று மேட் இன் இந்தியா கார்களில் ஒன்றாகவும் (எஞ்சிய இரண்டு கார்கள் மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் டாடா நெக்ஸான் காம்பேக்ட் எஸ்யூவிகள்) டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இந்த பட்டியலில் ஹூண்டாய் ஐ20 மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 5,002 ஐ20 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் மாதத்தில் 9,045 ஆக இருந்தது. இதன் மூலம் இந்திய சந்தையில் ஹூண்டாய் ஐ20 காரின் விற்பனை 44.70 சதவீதம் குறைந்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இந்த பட்டியலில் டொயோட்டா க்ளான்சா நான்காவது இடத்தை பிடித்துள்ளது. டொயோட்டா நிறுவனம் கடந்த ஏப்ரல் மாதம் 2,182 க்ளான்சா கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த மார்ச் மாதம் இந்த எண்ணிக்கை 2,989 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 27 சதவீத வீழ்ச்சியை டொயோட்டா க்ளான்சா பதிவு செய்துள்ளது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

மாருதி சுஸுகி பலேனோ காரின் ரீபேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன்தான் டொயோட்டா க்ளான்சா என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. டொயோட்டா-சுஸுகி நிறுவனங்கள் இடையே கூட்டணி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் மாருதி சுஸுகி பலேனோ காரை ரீபேட்ஜ் செய்து, க்ளான்சா என்ற பெயரில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

ஏப்ரல் மாதம் அதிகம் விற்பனையான பிரீமியம் ஹேட்ச்பேக் கார்கள்... கெத்து காட்டிய மாருதி சுஸுகி!

இந்த பட்டியலில் 5வது மற்றும் கடைசி இடத்தை ஃபோக்ஸ்வேகன் போலோ பிடித்துள்ளது. இந்திய சந்தையில் கடந்த ஏப்ரல் மாதம் 1,197 போலோ கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த மார்ச் மாதம் 1,888 ஆக இருந்தது. இதன் மூலம் ஃபோக்ஸ்வேகன் போலோ காரின் விற்பனை 36.60 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது.

Most Read Articles

English summary
Best Selling Premium Hatchbacks In India: April 2021. Read in Tamil
Story first published: Wednesday, May 5, 2021, 18:43 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X