கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்!

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்வதற்காக நவீன கட்டமைப்பு கொண்ட கன்டெய்னர் டிரக் மாடலை பாரத் பென்ஸ் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

கொரோனா தடுப்பு மருந்தை கொண்டு செல்ல நவீன கன்டெய்னர் டிரக்: பாரத்பென்ஸ் அறிமுகம்!

கொரோனா தடுப்பு மருந்து செலுத்தும் முதல்கட்டப் பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. இந்த நிலையில், முதல்கட்டமாக பெரு நகரங்களில் இந்த தடுப்பு மருந்து வினியோகிக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

எனினும், கொரோனா தடுப்பு மருந்து குறிப்பிட்ட வெப்ப நிலையில், மிகவும் பாதுகாப்பாக கொண்டு சென்று சேர்ப்பது என்பது மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கும், சுகாதாரத் துறைக்கும் மிகப்பெரிய சவாலாக இருந்து வருகிறது.

கொரோனா தடுப்பு மருந்தை நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கு குளிர்சாதன வசதி கொண்ட விசேஷ கன்டெய்னர் வாகனங்கள் தேவைப்படுகின்றன. இதனை கருத்தில்கொண்டு பாரத் பென்ஸ் நிறுவனம் கொரோனா தடுப்பு மருந்து கொண்டு செல்வதற்கான விசேஷ கன்டெய்னர் டிரக் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

பாரத்பென்ஸ் பி சேஃப் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் குறிப்பிடப்படும் இந்த கன்டெய்னர் டிரக் முழுவதும் பல்வேறு விசேஷ கட்டமைப்பு வசதிகளை பெற்றுள்ளது. கன்டெய்னர் டிரக் தயாரிப்பில் பிரலமான மதர்சன் நிறுவனத்துடன் இணைந்து இந்த டிரக்கை பாரத்பென்ஸ் உருவாக்கி வருகிறது.

இந்த டிரக்கின் பின்புறத்திற்கான குளிர்சாதன வசதியுடன் கூடிய விசேஷ கன்டெய்னரை 96 மணிநேரத்தில் உருவாக்கி கொடுத்துவிட முடியும் என்று மதர்சன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய கன்டெய்னர் வாகனத்திற்காக பாரத்பென்ஸ் நிறுவனத்தின் 2823ஆர் டிரக் சேஸீயில் பயன்படுத்தப்படுகிறது. இந்த சேஸீயில் கட்டமைக்கப்படும் டிரக்குகள் மிகவும் பாதுகாப்பான, நம்பகமான போக்குவரத்தை வழங்கும்.

மேலும், பாரத்பென்ஸ் நிறுவனத்தின் டிரக் கனெக்ட் என்ற கனெக்டெட் தொழில்நுட்பம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இதனால், டிரக் எந்த இடத்தில் இருக்கிறது என்பதையும், உள்ளே உள்ள சரக்கு டெலிவிரி கொடுக்கப்படும் விபரங்களையும் நிகழ்நேர முறையில் தெரிந்து கொள்ள முடியும்.

இந்த டிரக்குகளை உற்பத்தி செய்து விற்பனை செய்வதற்காக பாரத்பென்ஸ் மறும் மதர்சன் நிறுவனங்கள் கூட்டணி அமைத்துள்ளன. மேலும், கொரோனா தடுப்பு மருந்து திட்டம் முடிவுக்கு வந்தாலும்கூட இந்த டிரக்குகளை பழங்கள், கடல் உணவு உள்ளிட்ட பிற போக்குவரத்திற்காகவும் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
Daimler India Commercial Vehicles (DICV) have partnered with Motherson Group to announce the unveiling of the BharatBenz 'BSafe Express' - a specialised made-in-India reefer truck for the safe transportation of COVID-19 vaccine across the country.
Story first published: Saturday, January 23, 2021, 18:11 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X