பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் ஏ க்ளாஸ் லிமோசின் சொகுசு செடான் கார் நாளை விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள நிலையில், அதிரடியாக இந்த விலை குறைவான வேரியண்ட்டை கொண்டு வந்துள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம். இந்த புதிய வேரியண்ட்டின் முக்கிய அம்சங்கள் குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப ரக சொகுசு கார் மாடலாக 2 சீரிஸ் க்ரான் கூபே இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. முதலில் டீசல் எஞ்சின் தேர்வில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் பெட்ரோல் எஞ்சின் தேர்வில் இந்த கார் வந்தது. பெட்ரோல் எஞ்சின் மாடலானது எம் ஸ்போர்ட் என்ற வேரியண்ட்டில் ரூ.40.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த நிலையில், 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் பெட்ரோல் மாடலில் அடுத்து ஒரு புதிய வேரியண்ட்டை இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது பிஎம்டபிள்யூ. இந்த புதிய வேரியண்ட்டானது 2 சீரிஸ் 220ஐ ஸ்போர்ட் என்ற பெயரில் வந்துள்ளது. ரூ.37.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய வேரியண்ட்டில் 2.0 லிட்டர் ட்வின்பவர் டர்போ பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 190 எச்பி பவரையும், 280 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 7 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஸ்போர்ட் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. முன்சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 7.1 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 240 கிமீ வேகம் வரை செல்லும். ஈக்கோ புரோ, கம்ஃபோர்ட் மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளை பெற்றுள்ளது. ஓட்டுபவரின் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றிக் கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரிய சிறுநீரக வடிவிலான முன்புற க்ரில் அமைப்பு, முழுமையான எல்இடி ஹெட்லைட்டுகள், எல்இடி பகல்நேர விளக்குகள், எல்இடி பனி விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளன. ஆட்டோமேட்டிக் வைப்பர் மற்றும் ஹெட்லைட்டுகளும் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் ஃப்ரேம் அமைப்பு இல்லாத கதவுகள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் முன்புறத்தில் ஸ்போர்ட்ஸ் இருக்கைகள், 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், முப்பரிமாண நேவிகேஷன் வசதி, அனலாக் டயல்களுடன் 5.1 டிஜிட்டல் மல்டி இன்ஃபர்மேஷன் திரை கொண்ட இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், ரியர் வியூ கேமரா, பார்க்கிங் அசிஸ்டென்ட், ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை வழங்கப்படுகின்றன. பின்புற இருக்கையை மடக்கி வைக்கும் வசதியும் உள்ளது.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

இந்த புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே 220ஐ வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், பிரேக் அசிஸ்ட் வசதியுடன் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், டைனமிக் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், டைனமிக் ட்ராக்ஷன் கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் டிஃபரன்ஷியல் லாக் கன்ட்ரோல், கார்னரிங் பிரேக் கன்ட்ரோல், ஆட்டோ ஹோல்டு வசதியுடன் எலெக்ட்ரிக் பார்க்கிங் பிரேக் உள்ளிட்ட ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன.

பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரின் விலை குறைவான வேரியண்ட் அறிமுகம்!

புதிய பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே 220ஐ வேரியண்ட் ஆரம்ப ரக சொகுசு கார் வாங்க விரும்புவோருக்கு சிறந்த தேர்வாக அமையும். நாளை விற்பனைக்கு வர இருக்கும் புதிய மெர்சிடிஸ் பென்ஸ் ஏ க்ளாஸ் லிமோசின் மற்றும் விரைவில் வரும் ஆடி ஏ3 செடான் கார்களுக்கு போட்டியாக இருக்கும். சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ ஆலையில்தான் இந்த புதிய வேரிண்ட்டும் உற்பத்தி செய்யப்பட உள்ளது.

Most Read Articles
English summary
BMW has launched a new sedan model in the Indian market called the 220i Sport in India. The BMW 220i Sport retails at Rs 37.90 lakh, ex-showroom (India). The newly launched variant is now the entry-level offering in the brand's 2-Series Gran Coupe line-up.
Story first published: Wednesday, March 24, 2021, 16:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X