Just In
- 3 hrs ago
இந்தியாவில் இருந்து சிங்கப்பூருக்கு பஸ்ஸில் போக ஆசையா? அப்போ உடனே 'புக்' பண்ணுங்க...
- 5 hrs ago
சொகுசு கார்களை போன்று வெள்ளை நிற கேபின் உடன் புதிய டாடா சஃபாரி!! சொந்தமாக்கி கொள்ள தயாரா?!
- 6 hrs ago
க்விட் காரை ஏன் வாங்க வேண்டும், அப்படி என்னதான் இதில் இருக்கு? விடையாக ரெனால்ட்டின் புதிய டிவிசி வீடியோ...
- 6 hrs ago
உள்ளூர் பொருட்களுக்கு குரல் கொடுப்போம்... குடியரசு தின விழாவில் கெத்து காட்டிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்
Don't Miss!
- News
ஜெயலலிதா நினைவிடத்தில் சாரை சாரையாக திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய பெண்கள்.. வீடியோ
- Movies
சினம் படத்திற்கு சென்சார் சர்டிபிகேட் என்ன தெரியுமா…லேட்டஸ்ட் அப்டேட்!
- Sports
கூல் கஸ்டமர் வாக்கெடுப்பு... யாருக்கு வெற்றி... வேற யாருக்கு நம்ம கேப்டன் கூலுக்குதான்!
- Finance
கூல்டிரிங்ஸ் வித் காஃபி.. கோகோ கோலா ஸ்மார்ட்டான ஐடியா...!
- Lifestyle
மகரம் செல்லும் சுக்கிரனால் இந்த 4 ராசிக்கு சுமாரா தான் இருக்குமாம்... உங்க ராசி இதுல இருக்கா?
- Education
Indian Bank Recruitment 2021: ரூ.1 லட்சம் ஊதியத்தில் வங்கி வேலை அறிவிப்பு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் காருக்கு புக்கிங் எப்போது துவங்குகிறது... அதிகாரப்பூர்வ தகவல்!
வெகு சீக்கிரத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கிரான் லிமோசின் மாடலுக்கு முன்பதிவு துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சொகுசு செடான் கார் மாடல்களில் விலை குறைவான ஆரம்ப ரக மாடலாக 3 சீரிஸ் கார் விற்பனையில் உள்ளது. இந்த காருக்கு குறிப்பிடத்தக்க வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த காரின் அதிக வீல்பேஸ் நீளம் கொண்ட 3 சீரிஸ் க்ரான் லிமோசின் மாடல் வரும் 21ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

சாதாரண 3 சீரிஸ் செடான் கார் மாடலைவிட இந்த புதிய 3 சீரிஸ் க்ரான் லிமோசின் மாடலானது 110 மிமீ கூடுதல் வீல்பேஸ் நீளம் கொண்டது. அதாவது, 2,961 மிமீ வீல்பேஸ் நீளம் கொண்டதாக இந்த கார் வர இருக்கிறது.

சாதாரண 3 சீரிஸ் காரைவிட உட்புறத்தில் மிக அதிக இடவசதியை அளிக்கும். அத்துடன், பின் இருக்கை பயணிகளுக்கான லெக் ரூம் எனப்படும் கால் வைப்பதற்கான இடவசதி 43 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த புதிய 3 சீரிஸ் க்ரான் லிமோசின் சொகுசு கார் மாடல் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்த கார் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இந்த காருக்கு வரும் ஜனவரி 11ந் தேதி முதல் முன்பதிவு துவங்கப்பட உள்ளதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

ரூ.50,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும், முன்பதிவு துவங்கப்படும் அன்று பிற்பகல் 12 மணிக்குள் முதலில் முன்பதிவு செய்யும் 50 வாடிக்கையாளர்களுக்கு ரூ.1 லட்சம் மதிப்புடைய பின் இருக்கை பயணிகளுக்கான பொழுதுபோக்கு மற்றும் சொகுசு அம்சங்களை வழங்கும் ஐ-பேட், ஐ-பேட் ஹோல்டர் மற்றும் உடுப்பை மாட்டி வைப்பதற்கான ஹேங்கர் ஆகியவை அடங்கிய பேக்கேஜ் அன்பளிப்பாக வழங்கப்பட உள்ளது.

இந்த காரில் 3 சீரிஸ் செடான் காரைவிட அதிக சொகுசு அம்சங்கள் கொண்டதாக இருக்கும் வகையில் சிறப்பான இருக்கைகள், ஹெட்ரெஸ்ட்டுகள், அகலமான ஆர்ம்ரெஸ்ட், பனோரமிக் சன்ரூஃப் மற்றும் ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற இருக்கிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் வழங்கப்படும் பிஎஸ்6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 2. லிட்டர் பெட்ரோல், டீசல் எஞ்சின் தேர்வுகள் இந்த புதிய க்ரான் லிமோசின் எனப்படும் 3 சீரிஸ் லாங் வீல் பேஸ் மாடலிலும் பயன்படுத்தப்படும் என்று தெரிகிறது.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் வழங்கப்படும் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 255 பிஎச்பி பவரையும், 400 என்ம் டார்க் திறனையும் வழங்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 188 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வருகிறது. இதே எஞ்சின் மற்றும் கியர்பாக்ஸ் தேர்வுகள்தான் புதிய மாடலிலும் எதிர்பார்க்கப்படுகிறது.