இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

320டி ஸ்போர்ட் செடான் காரின் பெயரை பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து நீக்கியுள்ளது. இது பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் கடந்த மாதத்தில் க்ரான் லிமௌசைன் செடான் காரை அறிமுகப்படுத்தியது. அதனை தொடர்ந்து தற்போது 320டி ஸ்போர்ட் கார் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ளது.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

இதனால் வாடிக்கையாளர் 3-சீரிஸ் செடான் காரை 320டி லக்சரி லைன் ட்ரிம்மில் மட்டுமே வாங்க முடியும். இதன் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.47.9 லட்சமாக உள்ளது. இருப்பினும் 330ஐ பெட்ரோல் வேரியண்ட் தொடர்ந்து ஸ்போர்ட் மற்றும் எம் ஸ்போர்ட் ட்ரிம்களில் கிடைக்கும்.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

பிஎம்டபிள்யூ 3-சீரிஸ் வரிசையில் லக்சரி ட்ரிம்மிற்கு கீழே நிலைநிறுத்தப்பட்டு வந்த 320டி ஸ்போர்ட் காரின் விற்பனை இதேபோல் கடந்த 2020 மார்ச் மாதத்திலும் நிறுத்தப்பட்டது. அதன்பின் இந்த கார் மீண்டும் ஆகஸ்ட் மாதத்தில் ரூ.42.10 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

தற்போதைக்கு தனியாக இருக்கும் 320டி லக்சரி ட்ரிம்மில் 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் வழங்கப்படுகிறது. அதிகப்பட்சமாக 188 பிஎச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

இந்த ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் என்ஜினின் ஆற்றலை காரின் பின்சக்கரங்களுக்கு வழங்கும். இந்த லக்சரி ட்ரிம்மின் வெளிப்புறத்தில் எல்இடி ஹெட்லைட்ஸ் மற்றும் ஃபாக் விளக்குகள், 17 இன்ச்சில் அலாய் சக்கரங்கள் மற்றும் L-வடிவில் பிளவுப்பட்ட எல்இடி டெயில்லேம்ப்கள் வழங்கப்படுகின்றன.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

உட்புறத்தில் இந்த கார் 8.8 இன்ச்சில் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், முழு-டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கன்சோல், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், ஆட்டோ ப்ரேக் & ரிவர்ஸில் வருவதற்கு உதவி வசதிகளுடன் பின்பக்கத்தை பார்ப்பதற்கு கேமிரா உள்ளிட்டவற்றை பெறுகிறது.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

இவை மட்டுமின்றி மழை வருவதை உணர்ந்து செயல்படும் வைபர்கள், காரை சுற்றிலும் விளக்குகள், எலக்ட்ரிக் இருக்கைகள், டிபிஎம்எஸ் மற்றும் ட்ரைவிங் மோட்கள் போன்றவற்றையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் இந்த காரில் வழங்குகிறது.

இந்த பிஎம்டபிள்யூ காரை இனி வாங்க முடியாது!! வெப்சைட்டில் இருந்து பெயர் நீக்கம்!

3-சீரிஸ் வரிசையில் புதியதாக கடந்த மாதத்தில் இணைந்த க்ரான் லிமௌசைன் ஆனது லக்சரி செடான் கார் பிரிவில் பிஎம்டபிள்யூவின் வலிமையை அதிகரிக்கும் நோக்கில் இணைக்கப்பட்டுள்ளது. நீளமான சலூனான இந்த காரில் மூன்றாவது இருக்கை வரிசை நன்கு பெரியதாகவே வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
BMW 320d Sport delisted from official website
Story first published: Thursday, February 4, 2021, 23:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X