பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

புதிய பிஎம்டபிள்யூ 220ஐ 'ப்ளாக் ஷாடோ' எடிசனை பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா நிறுவனம் இன்று (நவம்பர் 16) விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய விரிவான விபரங்களை தொடர்ந்து பார்ப்போம்.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

கடந்த ஆண்டில் 2 சீரிஸ் க்ரான் கூபேவின் ப்ளாக் ஷாடோ எடிசனை பிஎம்டபிள்யூ நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் அப்போது இது வெறுமனே டீசல் வெர்சனாக 220டி எம் ஸ்போர்ட் வேரியண்ட்டில் கொண்டுவரப்பட்டது. ஆனால் தற்போது 2 சீரிஸ் க்ரான் கூபே மாடலின் பெட்ரோல் வெர்சனுக்கு ப்ளாக் ஷாடோ எடிசன் வழங்கப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

220டி எம் ஸ்போர்ட் ப்ளாக் ஷாடோ எடிசனை போன்று பிஎம்டபிள்யூவின் புதிய 220ஐ 'ப்ளாக் ஷாடோ' எடிசனும் லிமிடெட் எடிசனாகும். அதாவது இந்த ஸ்பெஷல் 2 சீரிஸ் க்ரான் கூபே காரானது மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் (வெறும் 24 யூனிட்கள்) மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளது. இதனை பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் இணைய சில்லறை ப்ளாட்ஃபாரத்தில் முன்பதிவு செய்யலாம்.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

புதிய 220ஐ ப்ளாக் ஷாடோ எடிசனின் எக்ஸ்ஷோரூம் விலை ரூ.43.50 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்ப இந்த பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் மாடல் அதி-பளபளப்பான ஷாடோ லைன் தொகுப்பை பெற்று வந்துள்ளது. அத்துடன் 2 சீரிஸிற்கான எம் செயல்திறன் பாகங்களும் இந்த ஸ்பெஷல் எடிசனுக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த எம் செயல்திறன் பாகங்கள் 2 சீரிஸின் டீசல் வெர்சன்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தன.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

அவை தற்போது இந்த புதிய லிமிடெட் எடிசனின் மூலமாக பெட்ரோல் வெர்சனுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த காருக்கு வழங்கப்பட்டுள்ள ப்ளாக் ஷாடோ எடிசன் தொகுப்பை பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் காரை வாங்கும் எவர் ஒருவரும் பெற முடியும். தனியாக இந்த தொகுப்பிற்கான விலையாக ரூ.3.25 லட்சத்தை பிஎம்டபிள்யூ நிர்ணயித்துள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

ஆனால் புதிய 220ஐ ப்ளாக் ஷாடோ எடிசனில் வெறும் ரூ.1.6 லட்சத்தில் இந்த தொகுப்பினை பெறலாம். ஏனெனில் வழக்கமான 220ஐ எம் ஸ்போர்ட்டின் விலை ரூ.41.90 லட்சமாக (43.50 லட்சம் - 41.90 லட்சம் = 1.6 லட்சம்) உள்ளது. வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், புதிய ஷாடோ எடிசன் புதிய டிசைன் பாகங்களுடன் மேம்படுத்தப்பட்ட பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபேவின் தோற்றத்தை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

இந்த வகையில் முன்பக்கத்தில் கருப்பு நிறத்தில் புதிய மெஷ் பேட்டர்னில் பிஎம்டபிள்யூவின் 'கிட்னி' வடிவ க்ரில், கருப்பு நிறத்தில் இறக்கை கண்ணாடி மூடிகள், எக்ஸாஸ்ட் குழாய்களின் மீது கருமை நிற க்ரோம் ஃபினிஷ் மற்றும் பளபளப்பான கருப்பு பூட் லிப் ஸ்பாய்லர் உள்ளிட்டவற்றை இந்த புதிய ப்ளாக் ஷாடோ எடிசன் பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

இவற்றுடன் புதிய 18 இன்ச் அலாய் சக்கரங்கள் இந்த காரில் வழங்கப்பட்டுள்ளன. இந்த அலாய் சக்கரங்களுக்கு மத்தியில், பிஎம்டபிள்யூவின் எம் செயல்திறன் பாகங்களில் ஒன்றான சுழலக்கூடிய ஹப் மூடிகள் பொருத்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டில் அறிமுகப்படுத்த டீசல் ப்ளாக் ஷாடோ எடிசனை போன்று இந்த பெட்ரோல் வெர்சனும் அல்பைன் வெள்ளை மற்றும் சாப்பையர் கருப்பு என்கிற இரு பெயிண்ட் தேர்வுகளை பெற்றுள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

இவ்வாறு காரின் வெளிப்பக்கத்தில் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்க, 220ஐ ப்ளாக் ஷாடோ எடிசனின் உட்புறம் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உள்ளது. ஏனெனில் வழக்கமான சென்சாடெக் சிப்பி மற்றும் கருப்பு லெதர் உள்ளமைவு தான் இந்த ஸ்பெஷல் எடிசனின் கேபினிலும் தொடரப்பட்டுள்ளது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

220ஐ எம் ஸ்போர்ட் மாடலில் வழங்கப்படும் அதே 2.0 லிட்டர், 4-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் தான் இந்த புதிய லிமிடெட் எடிசனிலும் வழங்கப்பட்டுள்ளது. அதிகப்பட்சமாக 190 எச்பி மற்றும் 280 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ-பெட்ரோல் என்ஜின் உடன் 7-ஸ்பீடு ட்யுல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் இணைக்கப்படுகிறது.

பிஎம்டபிள்யூ 220ஐ ‘ப்ளாக் ஷாடோ’ எடிசன் இந்தியாவில் அறிமுகம்!! விலை ரூ.43.50 லட்சம்

முன் சக்கரங்களின் மூலம் இயங்கும் பிஎம்டபிள்யூ 2 சீரிஸ் க்ரான் கூபே காரில் ஈக்கோ, ப்ரோ, கம்பர்ட் மற்றும் ஸ்போர்ட் என்ற மூன்று ரைடிங் மோட்கள் வழங்கப்படுகின்றன. 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 7.1 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த பிஎம்டபிள்யூ காருக்கு இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஏ-கிளாஸ் லிமௌசைன் போட்டியாக உள்ளது.

Most Read Articles
English summary
The BMW 220i ‘Black Shadow’ edition launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X