எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

இந்திய சொகுசு கார் மார்க்கெட்டில் ஆதிக்கம் செலுத்தி வரும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது ஐஎக்ஸ் என்ற பெயரிலான முதல் எலெக்ட்ரிக் காரை களமிறக்குவதற்கு நாள் குறித்துவிட்டது. இந்த காரின் இந்திய அறிமுக தேதி மற்றும் இந்த கார் குறித்து தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விஷயங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

அடுத்த 6 மாதங்களில் 3 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. முதல் கார் மாடலாக ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் வரும் டிசம்பர் 11ந் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் போட்டியாளர்களிடத்தில் இருந்து தனித்து தெரியும் வகையில் நவீன டிசைன் அம்சங்களுடன் வர இருக்கிறது. முகப்பில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் பாரம்பரியமான க்ரில் அமைப்பு பிரதானமாக வீற்றுள்ளது. ஹெட்லைட் க்ளஸ்ட்டர்களுக்கு மேல் ஒளி உமிழ் பட்டைகள் உள்ளன. மெல்லிய எல்இடி டெயில் லைட்டுகள், கதவுகளில் ப்ரேம் இல்லாத ஜன்னல்கள் அமைப்பு, 22 அங்குல அலாய் வீல்கள், வித்தியாசமான பம்பர்களுடன் தனித்துவமான டிசைனில் காட்சித் தருகிறது.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் 14.9 அங்குல திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் ஆகியவை முக்கிய அம்சங்களாக உள்ளன. அடிப்பாகம் தட்டையான அமைப்புடைய ஸ்டீயரிங் வீல், நவீன யுகத்திற்கு மாறி இருக்கும் டேஷ்போர்டு அமைப்பு, சென்ட்ரல் கன்சோல் ஆகியவை வாடிக்கையாளர்களுக்கு புதுவிதமான அனுபவத்தையும், உற்சாகத்தையும் தரும்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ஐடிரைவ் 40 மற்றும் ஐடிரைவ் 50 என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுகிறது. இதில், ஐடிரைவ் 40 மாடலானது 326 பிஎச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வழங்க வல்லதாக இருக்கும். ஒருமுறை பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 414 கிமீ தூரம் வரை பயணிக்கும். 0 - 100 கிமீ வேகத்தை 6.1 வினாடிகளில் எட்டிவிடும்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

ஐடிரைவ் 50 மாடலானது 523 எச்பி பவரையும், 765 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை வெறும் 4.6 வினாடிகளில் எட்டிவிடும். இரண்டு வேரியண்ட்டுகளிலுமே இரண்டு ஆக்சில்களிலும் தலா ஒரு மின் மோட்டார் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக இருக்கும்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரில் 71kW பேட்டரித் தொகுப்பு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஐடிரைவ் மாடலின் பேட்டரியை ஃபாஸ்ட் சார்ஜர் பன்படுத்தினால் 10 சதவீதத்திலிருந்து 80 சதவீதம் வரை பேட்டரி சார்ஜ் ஆவதற்கு 31 நிமிடங்கள் பிடிக்கும். இதுவே ஐடிரைவ் மாடலுக்கு 35 நிமிடங்கள் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 11 kW ஏசி சார்ஜர் பயன்படுத்தினால் ஐடிரைவ் மாடலின் பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆக 11 மணிநேரமும், ஐடிரைவ் 40 மாடல் பேட்டரி சார்ஜ் ஆக 7.5 மணிநேரமும் பிடிக்கும்.

எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... 5 முக்கிய விஷயங்கள்

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் ரூ.1 கோடியை ஒட்டிய விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி, ஆடி இ ட்ரான் மற்றும் ஜாகுவார் ஐ பேஸ் கார்களுக்கு போட்டியாக இருக்கும். வரும் டிசம்பர் 11ந் தேதி விலை மற்றும் பல முக்கிய விபரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட உள்ளது.

Most Read Articles

English summary
BMW has revealed the all new iX Electric SUV India launch date and we compiled some important details here.
Story first published: Saturday, November 27, 2021, 12:19 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X