முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... பெரும் சந்தோஷத்தில் பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் நேற்று விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த நிலையில், முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து கார்களுக்கும் முதல் நாளிலேயே புக்கிங் செய்யப்பட்டுவிட்டதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

மெர்சிடிஸ் பென்ஸ், ஜாகுவார், ஆடி கார் நிறுவனங்களை தொடர்ந்து பிஎம்டபிள்யூ நிறுவனமும் தனது முதல் எலெக்ட்ரிக் காரை நேற்று இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வந்தது. ஐஎக்ஸ் என்ற பெயரிலான இந்த எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார் ரூ.1.16 கோடி எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

போட்டியாளர்களைவிட சற்று கூடுதல் விலை கொண்ட மாடலாக வந்ததால், வாடிக்கையாளர்களிடத்தில் எந்த அளவுக்கு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதேநேரத்தில், டிசைன் மற்றும் வசதிகளில் சிறப்பானதாக கருதப்பட்டது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

இந்த சூழலில், முதல் லாட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட அனைத்து ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட முதல் நாளிலேயே முன்பதிவு முடிந்துவவிட்டதாக பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள டீலர்களில் ஆன்லைன் முறையில் புக்கிங் மேற்கொள்ளப்பட்டது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

முதல் லாட்டில் புக்கிங் செய்த வாடிக்கையாளர்களுக்கு வரும் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து டெலிவிரி கொடுக்கப்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இரண்டாம் கட்டமாக வரும் ஆண்டு முதல் காலண்டில் புக்கிங் துவங்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

இதுகுறித்து பிஎம்டபிள்யூ இந்தியா நிறுவனத்தின் தலைவர் விக்ரம் பவா கூறுகையில்,"எங்களது முதல் எலெக்ட்ரிக் கார் மாடலான ஐஎக்ஸ் காருக்கு கிடைத்திருக்கும் வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. எங்களது புதிய தொழில்நுட்பங்கள் சொகுசு கார் பயணத்தில் புதிய அனுபவத்தை வழங்கும்.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

எங்களது அனைத்து எதிர்பார்ப்புகளையும் மிஞ்சும் வகையில் ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்கு வரவேற்பு கிடைத்துள்ளது. புதிய ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் காருக்காக காத்திருக்கும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் பூர்த்தி செய்யும் முயற்சிகளில் இறங்கி இருக்கிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

புதிய பிஎம்டபிள்யூ ஐஎக்ஸ் காரின் டிசைன் நவீன யுக அம்சங்களுடன் வசீகரிக்கிறது. இந்தியாவில் ஐடிரைவ் 40 என்ற வேரியண்ட் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வேரியண்ட்டில் 76.6kWh பேட்டரி பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 425 கிமீ தூரம் வரை செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

இந்த காரில் இரண்டு மின் மோட்டார்களுடன் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்டதாக வந்துள்ளது. இதன் பேட்டரியும், மின் மோட்டார்களும் இணைந்து அதிகபட்சமாக 326 எச்பி பவரையும், 630 என்எம் டார்க் திறனையும் வழங்கும். மணிக்கு 200 கிமீ வேகம் வரை செல்லும் வல்லமையை வழங்கும். சாதாரண 11kW சார்ஜர் பயன்படுத்தினால் சார்ஜ் ஏற்றுவதற்கு 11 மணிநேரம் பிடிக்கும். ஃபாஸ்ட் சார்ஜர்களும் பயன்படுத்தி குறைவான நேரத்தில் சார்ஜ் ஏற்ற முடியும்.

முதல் நாளிலேயே இந்தியாவில் விற்று தீர்ந்தது ஐஎக்ஸ் எலெக்ட்ரிக் கார்... சந்தோஷத்தில் திக்குமுக்காடும் பிஎம்டபிள்யூ!

இந்த காரில் 14.9 திரையுடன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 12.3 அங்குல இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், பனோரமிக் சன்ரூஃப், மெமரி வசதியுடன் இருக்கைகள், ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, 4 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டம், சர்ரவுண்ட் வியூ கேமரா உள்ளிட்ட ஏராளமான சிறப்பம்சங்களை பெற்றுள்ளது.

Most Read Articles

English summary
BMW iX completely sold-out on India.
Story first published: Tuesday, December 14, 2021, 11:46 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X