புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் கார் இந்திய சந்தையில் ரூ.53.50 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பிஎம்டபிள்யூ காரை பற்றிய தகவல்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

330 எல்இ, 320 எல்டி என்கிற பெட்ரோல் மற்றும் டீசல் வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் பிஎம்டபிள்யூ காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.53.50 லட்சம் (பெட்ரோல் வெர்சன்) மற்றும் ரூ.54.90 லட்சம் (டீசல் வெர்சன்) என நிர்ணயிக்கப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

மிகவும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ள புதிய ஐகானிக் எடிசன் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்து புறங்களிலும் மாற்றங்களை 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் வரிசை கார்களில் இருந்து பெற்றுள்ளது. முன்பக்கத்தில் ‘கிட்னி' வடிவத்தில் பளபளப்பான க்ரில் அமைப்பை கொண்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

கிட்டத்தட்ட புதிய எக்ஸ்6 எஸ்யூவி காரின் முன்பக்கத்தை போல் இந்த ஸ்பெஷல் எடிசன் செடான் காரின் முன்பக்கமும் ஒளியால் மின்னுகிறது. இந்த அம்சம் நிச்சயம் பல தரப்பட்ட வாடிக்கையாளர்களை கவர்ந்திழுக்கும். உட்புறத்தில் ஹெட்ரெஸ்ட் குஷின்கள் உடன் ‘வெர்னாஸ்கா' லெதர் உள்ளமைவில் பின் இருக்கைகளை கொண்டுள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

அதேபோல் கோட் ஹேங்கர், ‘3' என்ற லோகோ உடன் ஒளிரக்கூடிய க்ரிஸ்டல் கண்ணாடியால் ஆன கியர் க்னாப், கூடுதல் சவுகரியமான முன் இருக்கைகள் மற்றும் உள்ளே நுழையும்போதும், இறங்கும்போதும் ஒளிரும் ‘வெல்கம் லைட் கார்பேட்' உள்ளிட்டவையும் வழங்கப்பட்டுள்ளன. இதில் வெல்கம் லைட்கள் ஆனது காரின் பக்கவாட்டு சில்களில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

மினரல் வெள்ளை, கார்பன் கருப்பு மற்றும் காஷ்மீர் சில்வர் என்கிற மூன்று விதமான நிறங்களில் புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசனை வாங்கலாம். உட்புற கேபினை பிரான்ஸில் பிரபலமான காக்னாக் பிராண்டின் நிறத்தில் அல்லது கருப்பு நிறத்தில் வெளிப்புற பெயிண்ட்டிற்கு ஏற்ப தேர்வு செய்யலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

மேலும் இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் காருடன் பிஎம்டபிள்யூவின் சேவை தொகுப்புகளையும் பெறலாம். காரின் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு சேவை கட்டணமாக ரூ.48,262-யும், பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.65,018-யும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 3 வருட/ முடிவிலா மைலேஜ் நீட்டிக்கப்பட்ட உத்தரவாதத்தையும் ரூ.38.114க்கு இந்த புதிய காருடன் பெறலாம்.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

3-சீரிஸ் க்ரான் லிமௌசைன் செடான் காரில் 6-காற்றுப்பைகள், ஏபிஎஸ், இஎஸ்சி, பனோராமிக் சன்ரூஃப், 6-விதங்களில் ஒளிரக்கூடிய விளக்குகள், 3-நிலை க்ளைமேட் கண்ட்ரோல், பிஎம்டபிள்யூவின் ‘லைவ் காக்பிட் ப்ரோஃபெஸ்னல்' 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 10.25 இன்ச் திரை உடன் பிராண்டின் ஐட்ரைவ் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே, வயர் இல்லா சார்ஜிங், 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம் மற்றும் ஆட்டோமேட்டிக் பூட் செயல்பாடு உள்ளிட்டவற்றை பிஎம்டபிள்யூ நிறுவனம் ஏற்கனவே வழங்குகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

ஏற்கனவே கூறியதுதான், புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசனானது 2.0 லிட்டர் டர்போ-பெட்ரோல் மற்றும் 2.0 லிட்டர் டர்போ-டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கும். இதில் பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 258 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும், டீசல் என்ஜின் 190 எச்பி மற்றும் 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியவைகளாக உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

இந்த இரு என்ஜின்களுடன் 8-ஸ்பீடு டார்க் கன்வெட்டர் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இதில் பெட்ரோல் வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 6.2 வினாடிகளில் எட்டிவிடலாம் என்றும், டீசல் வேரியண்ட்டில் 7.6 வினாடிகளில் எட்டிவிடலாம் என்றும் பிஎம்டபிள்யூ நிறுவனம் தெரிவித்துள்ளது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

இந்த ஸ்பெஷல் எடிசன் காரின் வேரியண்ட்கள் இரண்டிலும் ஈக்கோ ப்ரோ, கம்ஃபர்ட், ஸ்போர்ட் மற்றும் ஸ்போர்ட் ப்ளஸ் என்கிற நான்கு விதமான டிரைவிங் மோட்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்தியாவில் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் மற்றும் 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் என்ற இரு விதமான செடான் கார்களும் விற்பனையில் உள்ளன.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.53.50 லட்சம்

இவற்றிற்கு இந்திய சந்தையில் ஆடி ஏ4, மெர்சிடிஸ்-பென்ஸ் சி-கிளாஸ், வால்வோ எஸ்60 மற்றும் ஜாகுவார் எஸ்இ உள்ளிட்டவை விற்பனையில் போட்டியாக உள்ளன. அளவில் பெரியதாக இருப்பது மட்டுமின்றி, கூடுதல் லக்சரியான பின் இருக்கை பயணத்தை வழங்குவதினால் மேற்கூறப்பட்ட போட்டி மாடல்கள் அனைத்தை காட்டிலும் 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் சற்று விலைமிக்கதாக உள்ளது.

Most Read Articles

English summary
Bmw launched the all new 3 series gran limousine iconic edition in india
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X