புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்ட்ரைவ் ஸ்போர்ட் எக்ஸ்+ வேரியண்ட்கள் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த புதிய பிஎம்டபிள்யூ கார்களை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

எக்ஸ்ட்ரைவ்30டி ஸ்போர்ட் எக்ஸ்+ மற்றும் எக்ஸ்ட்ரைவ்40ஐ ஸ்போர்ட் எக்ஸ்+ என்பன தற்போது பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இரு வேரியண்ட்களாகும். நமது சென்னையில் உள்ள பிஎம்டபிள்யூ தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ள இவற்றை பிஎம்டபிள்யூவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் முன்பதிவு செய்யலாம்.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

எக்ஸ்5 காரின் இந்த இரு புதிய வேரியண்ட்களில் எக்ஸ்ட்ரைவ்30டி ஸ்போர்ட் எக்ஸ்+ -இன் விலை ரூ.79,50,000 ஆகவும், எக்ஸ்ட்ரைவ்40ஐ ஸ்போர்ட் எக்ஸ்+ -இன் விலை ரூ.77,90,000 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காருக்கு வழங்கப்படும் பராமரிப்பு சேவை தேர்வுகளை இந்த வேரியண்ட்களிலும் பெறலாம்.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

எக்ஸ்5 காருக்கு 10 வருடங்கள்/ 2 லட்ச கிமீ வரையிலான உத்தரவாதம் வழங்கப்படுகிறது. குறைந்தப்பட்சமாக 3 வருடங்கள்/ 40,000 கிமீ உத்தரவாதத்தை 1 கிமீ-க்கு ரூ.1.55 என்ற குறைந்த விலையில் பெறலாம். இதனுடன் வேறு சில உத்தரவாதங்களும் இந்த பிஎம்டபிள்யூ காருக்கு வழங்கப்படுகின்றன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்ட்ரைவ் ஸ்போர்ட் எக்ஸ்+ வேரியண்ட்கள் கிட்டத்தட்ட வழக்கமான எக்ஸ்5 காரையே தோற்றத்தில் ஒத்திருக்கின்றன. பெரிய அளவிலான ஒற்றை-துண்டு எண்கோண வடிவ 'கிட்னி' க்ரில் உடன் இந்த புதிய வேரியண்ட்களின் முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகளும் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

இவற்றின் பருத்த உடற் அமைப்பிற்கு ஏற்ப பின்பக்கத்தில் முப்பரிமாண எல்இடி டெயில்லைட்கள் சற்று பக்கவாட்டிற்கும் கொண்டுவரப்பட்டுள்ளன. மேற்கூரையில் தண்டவாளங்கள் சாடின்-சில்வர் நிறத்தில் ஃபினிஷ் செய்யப்பட்டுள்ளன. உட்புறத்தில் கியர் லிவர் மாற்றம் இந்த புதிய பிஎம்டபிள்யூ கார்களில் நிச்சயம் உங்களை வசீகரிக்கும்.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

அதேபோல் இருக்கை அமைப்புகளும் மிகவும் சவுகரியமானதாக உள்ளது. ஸ்டேரிங் சக்கரம் லெதரால் மூடப்பட்டிருக்க, இருக்கைகள் எலக்ட்ரிக் மூலமாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடியவைகளாக உள்ளன. மேலும், அட்ஜெஸ்ட் செய்யப்படும் இருக்கைகள் மெமரி வசதியையும் கொண்டுள்ளன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

பனோராமிக் சன்ரூஃப் கேபினை அழகாக்கும் விதத்திலும், 6 விதங்களாக சரிச்செய்து கொள்ளக்கூடிய விளக்குகள் உட்புற கேபினில் சூழலை மாற்றுவதாகவும், வழங்கப்பட்டுள்ளன. இவற்றுடன் 4-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உள்பட ஏகப்பட்ட வசதிகளும் உள்ளன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

பிஎம்டபிள்யூவின் இரட்டைபவர் டர்போ தொழிற்நுட்பத்தினால் எக்ஸ்5 மாடலின் பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின்கள் அதிகப்பட்ச ஆற்றல் மற்றும் முன்மாதிரியான எரிபொருள் திறன் இரண்டையும் குறைந்த என்ஜின் வேகத்திலும் சிறந்த கலவையில் வழங்குகின்றன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்ட்ரைவ்30டி வேரியண்ட்டின் 6-சிலிண்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 265 எச்பி மற்றும் 1,500 - 2,500 ஆர்பிஎம்-இல் 620 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த எக்ஸ்5 வேரியண்ட்டில் 0-வில் இருந்து 100kmph வேகத்தை 6.5 வினாடிகளில் எட்டிவிடலாம்.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

எக்ஸ்5 எக்ஸ்ட்ரைவ்40ஐ வேரியண்ட்டில் 340 எச்பி மற்றும் 1,500 - ரூ.5,200 ஆர்பிஎம்-இல் 450 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய 3-லிட்டர், 6-சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் மணிக்கு 100கிமீ வேகத்தை சற்று விரைவாக 5.5 வினாடிகளிலேயே அடைந்துவிடலாம். பிஎம்டபிள்யூவின் எக்ஸ்ட்ரைவ் காராக இருப்பதால் இவை இரண்டும் புத்திசாலித்தனமான அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்தை பெற்றுள்ளன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

கார் இயங்கும் சூழ்நிலையை உன்னிப்பாக கவனிக்கும் இந்த அமைப்பானது அதற்கு ஏற்ப பதிலளிக்கக்கூடியது. எந்தவொரு சாலையிலும் இயங்க, ADB-X, நீட்டிக்கப்பட்ட எலக்ட்ரானிக் டைனாமிக் டிராக்‌ஷன் கண்ட்ரோல், ஹில் ஸ்டார்ட் உதவி மற்றும் வாகனம் சறுக்குவதை தடுக்கும் கண்ட்ரோல் உள்ளிட்டவை இந்த புதிய எக்ஸ்ட்ரைவ் வேரியண்ட்களில் வழங்கப்பட்டுள்ளன.

புதிய இரு பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார்கள் இந்தியாவில் அறிமுகம்!! ஆரம்ப விலை ரூ.77.90 லட்சம்

தகவமைத்து கொள்ளக்கூடிய சஸ்பென்ஷன் அமைப்பு சிறந்த ட்ரைவிங்கிற்கும், ஹேண்ட்லிங்கிற்கும் வழிவகுக்கும். பிஎம்டபிள்யூ சைகை கண்ட்ரோல், பிஎம்டபிள்யூ திரை சாவி, பிஎம்டபிள்யூ ஹெட்-அப் திரை மற்றும் வயர் இல்லா ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்டவை அடங்கும் பிஎம்டபிள்யூவின் இணைப்பு-ட்ரைவ் தொழிற்நுட்பங்கள் ஆட்டோமொபைல் துறையில் தொடர்ச்சியாக பல எல்லைகளை உடைத்த வண்ணம் உள்ளன.

Most Read Articles

English summary
The new BMW X5 xDrive SportX Plus variants launched in India.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X