பவர்ஃபுல் எஞ்ஜின், தரமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5சீரிஸ் அறிமுகம்! இன்னும் எக்கசக்க வசதிகளுடன்!

பிஎம்டபிள்யூ நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட 5 சீரிஸ் சொகுசு காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் பிற முக்கிய விபரங்களை இப்பதிவில் காணலாம், வாங்க.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

சொகுசு கார் உற்பத்தியாளரான பிஎம்டபிள்யூ, அதன் புதுப்பிக்கப்பட்ட 5 சீரிஸ் காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. தற்போது இந்திய சொகுசு வாகன சந்தையில் கடும் போட்டி நிலவி வருவதன் காரணத்தினால் இக்காருக்கு புதுப்பொலிவை நிறுவனம் கொடுத்திருந்தது.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

குறிப்பாக, புதிய சிறப்பங்கள் மற்றும் லேசாக மாற்றப்பட்ட வெளிப்புற தோற்றத்துடன் இக்கார் களமிறக்கப்பட்டிருக்கின்றது. பவர்ஃபுல் எஞ்ஜின், மிகவும் அட்வான்ஸ்டான டிரைவர் அசிஸ்டன்ஸ் சிஸ்டம், புதிய கிட்னி-கிரில் மற்றும் மின் விளக்குகள், பிரத்யேகமான இன்டீரியர் தோற்றம், இத்துடன் இருக்கைகளில் பன்முக தேர்வு என பல்வேறு சிறப்பு புதுமையான அம்சங்களுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் அறிமுகமாகியிருக்கின்றது.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

இப்புதுப்பிதல்கள் பணிகள் அனைத்தும் சென்னையில் அதன் உற்பத்தி ஆலையில் வைத்தே நிறுவனம் மேற்கொண்டிருக்கின்றது. இது ஒரு பெட்ரோல் எஞ்ஜினிலும், இரு விதமான டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும்.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் (பெட்ரோல் எஞ்ஜின்), 530டி எம் ஸ்போர்ட் மற்றும் 520டி லக்சுரி லைன் ஆகியவை டீசல் எஞ்ஜின் தேர்விலும் விற்பனைக்குக் கிடைக்கும். இதில், 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்டிற்கு ரூ. 62.90 லட்சம் என்ற விலையும், லக்சுரி லைன் வேரியண்டிற்கு ரூ. 63.90 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

இவையிரண்டைக் காட்டிலும் அதிக விலைக் கொண்ட வேரியண்டாக எம் ஸ்போர்ட் வேரியண்ட் இருக்கின்றது. இதற்கு ரூ. 71.90 லட்சம் என்ற விலையையும் நிறுவனம் நிர்ணயித்துள்ளது. இவையனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த உச்சபட்ச விலையிலேயே புதிய பிஎம்டபிள்யூ 5சீரிஸ் கார்கள் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

அறிமுகத்தைத் தொடர்ந்து ஆன்லைன் மற்றும் விற்பனையாளர்கள் வாயிலாக காருக்கான புக்கிங்கை பிஎம்டபிள்யூ தொடங்கியுள்ளது. இத்துடன், 24 ஜூலை முன்னதாக இக்காரை புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு 50 சதவீதம் குறிப்பிட்ட அக்ஸசெரீஸ்களில் தள்ளுபடி வழங்க இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!
 • நிற தேர்வு:
 • புதுப்பிக்கப்பட்ட பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கார் ஏழு விதமான நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும்.
 • அல்பைன் வெள்ளை
 • கருப்பு சப்பையர்
 • கிளாசியர் சில்வர்
 • கார்பன் கருப்பு
 • தாது வெள்ளை
 • ஃபைட்டானிக் நீலம்
 • நீல கல், ஆகிய நிறங்கள் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் கிடைக்கும்.
 • பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

  காருக்குள் சேர்க்கப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பங்கள்:

  காருக்குள் செய்யப்பட்டிருக்கும் மிகப்பெரிய மாற்றமாக புதிய ஐடிரைவ் சிஸ்டம் இருக்கின்றது. இது ஏழாம் தலைமுறை தொழில்நுட்பம் ஆகும். புதிய செயலிகள், இணைப்பு வசதி மற்றும் தனிப்பனாக்கப்பட்ட வசதியை இந்த தொழில்நுட்பம் வழங்கும். இத்துடன், க்ளைமேட் கன்ட்ரோல் வசதிக் கொண்ட திரை டேஷ்போர்டின் மையப் பகுதியில் வழங்கப்பட்டிருக்கின்றது.

  பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

  இதுதவிர,

  • 10.25 இன்சிலான இன்ஃபோடெயின்மென்ட் திரை
  • 10.25 இன்சிலான இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல்
  • ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி
  • ஸ்போர்ஸ்ட் கார்களில் இருக்கக் கூடியதைப் போல பன்முக வசதிகள் கொண்ட ஸ்டியரிங் வீல்
  • இரட்டை மண்டல காலநிலை கட்டுப்பாடு கருவி
  • பனோரமிக் சன்ரூஃப்
  • பேட்டில் ஷிஃப்டர்
  • காற்றோட்ட வசதிக் கொண்ட இருக்கை
  • ஆம்பிசியன்ட் மின் விளக்கு
  • பிஎம்டபிள்யூ விர்சுவல் அசிஸ்டன் மற்றும் கெஸ்டர் கன்ட்ரோல் உள்ளிட்ட ஏராளமான வசதிகள் இக்காரில் வழங்கப்பட்டிருக்கின்றன.
  • பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

   எஞ்ஜின்:

   பிஎம்டபிள்யூ 530ஐ எம் ஸ்போர்ட் வேரியண்டில் 2.0 லிட்டர், இன்லைன் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது அதிகபட்சமாக 248 பிஎச்பியையும், 350 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இதன் டாப் ஸீப்டு மணிக்கு 250 கிமீ வேகம் ஆகும். மேலும், 6.1 செகண்டில் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தில் செல்லக் கூடியது.

   பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

   பிஎம்டபிள்யூ 520டி லக்சூரி லைன் வேரியண்டில் 2.0 லிட்டர் இன்லைன் 4 சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் அதிகபட்சமாக 187.7 பிஎச்பியையும், 400 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தக் கூடியது. இதுவும் மணிக்கு 250கிமீ வேகத்தில் செல்லக் கூடியது. ஆனால், பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ எனும் வேகத்தை எட்ட இது 7.3 செகண்டுகளை எடுத்துக் கொள்ளும்.

   பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

   பிஎம்டபிள்யூ 530டி எம் ஸ்போர்ட் வேரியண்டில் பவர்ஃபுல்லான 3.0 லிட்டர் இன்லைன் சிக்ஸ் சிலிண்டர் டீசல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இது உச்சபட்சமாக 261.4 பிஎச்பியையும், 620 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இது வெறும் 5.7 செகண்டிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து 100 கிமீ எனும் வேகத்தைத் தொட்டுவிடும். இதன் டாப் ஸ்பீடு 250கிமீ வேகம் ஆகும்.

   பவர்ஃபுல் எஞ்ஜின், அட்டகாசமான தொழில்நுட்ப வசதிகளுடன் பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் அறிமுகம்! சுலப மாத தவனை திட்டத்தில் கிடைக்கும்!

   இத்தகைய அதிக சிறப்பு திறன்கள் கொண்ட சொகுசு காரையே பிஎம்டபிள்யூ இன்று (ஜூலை 24) இந்தியாவில் விற்பனைக்குக் களமிறக்கியிருக்கின்றது. இதற்கு குறைந்த மாதத் தவனை திட்டமாக ரூ. 49,999 என்ற திட்டத்தை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இத்துடன், நான்கு ஆண்டுகள் வரையிலான சிறப்பு பை-பேக் திட்டத்தையும் நிறுவனம் வழங்குகின்றது. மேலும், இன்னும் பல சிறப்பு சலுகைகளை நிறுவனம் இக்காருக்காக அறிவித்திருக்கின்றது.

Most Read Articles

English summary
BMW Launches 2021 5 Series In India With New Powerful Engine. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X