மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

பிஎம்டபிள்யூ எம்340ஐ கார் அடுத்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அறிமுகமாகவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றிய விபரங்களை இனி செய்தியில் பார்ப்போம்.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

பிஎம்டபிள்யூ நிறுவனம் 3 சிரீஸ் பிரிவில் எம்340ஐ என்ற பெயரில் புதிய செயல்திறன்மிக்க எம் காரை இணைக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. வருகிற மார்ச் 10ஆம் தேதி இந்தியாவில் இந்த கார் அறிமுகமாகவுள்ளது.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

இந்தியாவில் அசெம்பிள் செய்யப்பட்டு விற்பனை செய்யப்படவுள்ள முதல் எம் செயல்திறன் காராக விளங்கவுள்ள எம்340ஐ, பிஎம்டபிள்யூ 3 சீரிஸின் ஸ்போர்டியர் வெர்சனாக 374எச்பி என்ற அதிகப்பட்ச என்ஜின் ஆற்றலில் வெளிவரவுள்ளது.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

எம்3 காருடன் இந்த காரை குழப்பி கொள்ள வேண்டாம். ஏனெனில் அது அதிகப்பட்சமாக 480 எச்பி-இல் இயக்கக்கூடிய காராகும். எம்340ஐ காரில் இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 3.0 லிட்டர், இன்-லைன் 6-சிலிண்டர், இரட்டை-டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படவுள்ளது.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

அதிகப்பட்சமாக இந்த என்ஜின் மூலம் 374 எச்பி மற்றும் 500 என்எம் டார்க் திறனை பெற முடியும். இந்த என்ஜின் உடன் வழங்கப்பட உள்ள 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மற்றும் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்ட்ரைவ் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டம் என்ஜினின் ஆற்றலை காரின் அனைத்து சக்கரங்களுக்கும் வழங்கும்.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

சர்வதேச சந்தைகளில் எம்340ஐ கார் பின்-சக்கர-ட்ரைவ் லேஅவுட்டிலும் கிடைக்கிறது. ஆற்றல்மிக்க என்ஜின் மட்டுமின்றி சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள எம்340ஐ காரில் ஸ்டாண்டர்ட் மாடலை காட்டிலும் மெக்கானிக்கல் அப்கிரேட்களும் வழங்கப்படுகின்றன.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

இதில் பிஎம்டபிள்யூ எம் செயல்திறன்மிக்க கார்களில் மட்டுமே காரின் டைனாமிக்ஸை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படும் சஸ்பென்ஷன் தொழிற்நுட்பம், எம் ஸ்போர்ட் டிஃப்ரென்ஷியல், எம் ஸ்போர்ட் ப்ரேக்குகள் மற்றும் எம் ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் சிஸ்டம் உள்ளிட்டவை அடங்குகின்றன.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

மற்ற தொழிற்நுட்ப அம்சங்களை பொறுத்தவரையில் தற்போதைய 3 சீரிஸின் விலைமிக்க வேரியண்ட்களில் வழங்கப்படும் பிஎம்டபிள்யூவின் ஐட்ரைவ் சிஸ்டத்துடன் 10.25 இன்ச் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், குரல் கட்டுப்பாடுகள், சைகை கண்ட்ரோல், எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் டெயில்லைட்கள், 3-நிலை ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், காரை சுற்றிலும் விளக்குகள், முன் மற்றும் பின்பக்க பார்க்கிங் சென்சார்கள் மற்றும் பார்க்கிங் கேமிரா உள்ளிட்டவை புதிய எம்340ஐ காரிலும் கொடுக்கப்படும்.

மார்ச்சில் விற்பனைக்கு வரும் புதிய பிஎம்டபிள்யூ கார் இதுதான்!! தொழிற்நுட்ப அம்சங்கள் ரொம்ப அதிகம்...

இதனால் 3 சீரிஸ் வரிசைலேயே விலைமிக்க காராக எம்340ஐ விற்பனை செய்யப்படவுள்ளது. இதன் காரணமாக இதன் விலையை ரூ.65 லட்சம் என்ற அளவில் எதிர்பார்க்கலாம். தற்சமயம் விற்பனையில் உள்ள பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் கார்களாக 330ஐ ஸ்போர்ட் மற்றும் 330ஐ எம் ஸ்போர்ட் மற்றும் 320டி லக்சரி எடிசன் உள்ளன.

Most Read Articles
English summary
BMW M340i to launch on March 10
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X