பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் சொகுசு காரின் பவர்ஃபுல் மாடல் இந்தியாவில் அறிமுகம்... முழு விபரம்!

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் சொகுசு காரின் அதிசெயல்திறன் மிக்க எம் மாடல் இன்று இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. சென்னையில் உற்பத்தி செய்யப்படும் இந்த புதிய பெர்ஃபார்மென்ஸ் கார் குறித்த பல கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் முழுமையாக பார்க்கலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுகம்

இந்தியாவின் ஆரம்ப ரக சொகுசு செடான் கார் மார்க்கெட்டில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 3 சீரிஸ் சொகுசு கார் மிக முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், அதிகரித்து வரும் சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வை வழங்கும் விதத்தில், 3 சீரிஸ் காரின் அதிசெயல்திறன் மிக்க எம் மாடலை இந்தியாவில் களமிறக்கி உள்ளது பிஎம்டபிள்யூ நிறுவனம்.

பிஎம்டபிள்யூ M340i xDrive என்ற பெயரில் இந்த புதிய மாடல் வந்துள்ளது. இந்த காருக்கு ரூ.62.90 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.

பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் M என்ற பெர்ஃபார்மென்ஸ் கார்கள் உருவாகப் பணிகளுக்கான பிரிவுதான் இந்த கார் மாடலையும் உருவாக்கி இருக்கிறது. இந்த அதிசெயல்திறன் மிக்க சொகுசு செடான் காரில் சக்திவாய்ந்த எஞ்சின் தேர்வு கொடுக்கப்படுகிறது.

இந்த புதிய மாடலில் 6 சிலிண்டர்கள் கொண்ட 3.0 லிட்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 382 பிஎச்பி பவரையும், 500 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இந்த காரில் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரோனிக் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் மூலமாக எஞ்சின் சக்தி அனைத்து சக்கரங்களுக்கும் செலுத்தப்படுகிறது. புதிய பிஎம்டபிள்யூ எம்340ஐ எக்ஸ்ட்ரைவ் மாடலானது 0 - 100 கிமீ வேகத்தை 4.4 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 220 கிமீ வேகம் வரை செல்லும் திறன் படைத்தது.

இந்த செயல்திறன் மிக்க காரில் எம் ஸ்போர்ட் ரியர் டிஃபரன்ஷியல் சிஸ்டமும், இதன் செயல்திறனை தாக்குப்பிடித்து நிறுத்துவதற்கான விசேஷ எம் ஸ்போர்ட் பிரேக்குகளும் கொடுக்கப்பட்டுள்ளது. எம் ஸ்போர்ட் புகைப்போக்கி அமைப்பு, லான்ச் கன்ட்ரோல் சிஸ்டம், 6 ஏர்பேக்குகள், க்ராஷ் சென்சார் மற்றும் டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டமும் இதன் முக்கிய பாதுகாப்பு அம்சங்களாக கூறலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுக விபரம்

சாதாரண 3 சீரிஸ் செடான் காரிலிருந்து வேறுபடுத்தும் விதமாக, சாம்பல் வண்ண அலங்காரத்துடன் புதிய க்ரில் அமைப்பு, பம்பர், ரியர் வியூ மிரர்கள், புகைப்போக்கி குழல் முனைகள் இடம்பெற்றுள்ளன. இந்த காரில் லேதர் ஹை பீம் மற்றும் வேறுபடுத்தும் எல்இடி பகல்நேர விளக்குகள் உள்ளன. இந்த தனித்துவ அம்சங்களுடன் இந்த கார் வேறுபடுகிறது.

உட்புறத்தில் அல்கான்டரா அப்ஹோல்ஸ்ட்ரி, விசேஷ தையல் வேலைப்பாடுகள், புதிய டேஷ்போர்டு பேனல்கள் மூலமாக வேறுபடுத்தப்பட்டுள்ளது. 12.3 அங்குல டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர், 10.25 அங்குல தொடுதிரையுடன் ஐ-ட்ரைவ் செயலியில் இதன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் இயங்குகிறது. ஆப்பிள் கார் ப்ளே, ஆன்ட்ராய்டு ஆட்டோ செயலிகளை சப்போர்ட் செய்யும். ஹெட்ஸ் அப் டிஸ்ப்ளே, ஆம்பியன்ட் லைட் சிஸ்டம் ஆகியவற்றை சப்போர்ட் செய்யும்.

மேலும், 3 ஸோன் க்ளைமேட் கன்ட்ரோல், எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஹார்மன் கார்டன் 16 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், 4 டிரைவிங் மோடுகள், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் இருக்கைகள் ஆகியவையும் இதன் முக்கிய வசதிகளாக குறிப்பிடலாம்.

பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரின் பவர்ஃபுல் மாடல் அறிமுக தகவல்கள்

இந்த காரை முதலில் முன்பதிவு செய்யும் 40 அதிர்ஷ்டசாலி வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு ஓட்டுனர் பயிற்சி திட்டமும் இலவசமாக வழங்கப்படும். பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஓட்டுனர் பயிற்றுவிப்பு நிபுணர்கள் மூலமாக இந்த 40 பேருக்கும் கார் ஓட்டுதலுக்கான நுட்பங்கள் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியாவில் மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் கூபே ரக மாடலாக விற்பனை செய்யப்பட்டு வரும் சி43 கூபே மாடலுக்கு போட்டியாக கூறலாம். மேலும், விரைவில் வர இருக்கும் ஆடி எஸ்5 ஸ்போர்ட்பேக் மாடலுக்கும் இது போட்டியாக அமையும்.

Most Read Articles

English summary
BMW has launched M340i xDrive performance luxury sedan car in India and priced at Rs.62.90 lakh (Ex-Showroom).
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X