2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கருப்பு வெர்மிலியன் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தையில் விற்பனைக்கு வரவுள்ள இந்த பிஎம்டபிள்யூ காரை பற்றிய கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்ப்போம்.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் என்கிற பெயரில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசன் கார் அமெரிக்க வாடிக்கையாளர்களுக்காக வருகிற செப்டம்பரில் இருந்து கலிஃபோர்னியா தொழிற்சாலையில் தயாரிக்கப்பட உள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலின் இந்த ஸ்பெஷல் எடிசன் வட அமெரிக்காவில் வெறும் 350 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க சந்தையில் எக்ஸ்5 ப்ளாக் வெர்மியன் எடிசனின் விலை 83,295 டாலர்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

இந்திய ரூபாயில் இதன் மதிப்பு கிட்டத்தட்ட 62 லட்ச ரூபாயாகும். வழக்கமான பிஎம்டபிள்யூ எக்ஸ்5 எக்ஸ்ட்ரைவ்40ஐ காரின் விலை ரூ.60 லட்சம் என்ற அளவில் உள்ளது குறிப்பிடத்தக்கது. பெயருக்கு ஏற்ப இந்த ஸ்பெஷல் எடிசன் கார் சாடின் கருப்பு நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

அதேநேரம் முன்பக்க க்ரில்லில் செங்குத்து ஸ்லாட்கள் மற்றும் சக்கரங்களில் ப்ரேக் காலிபர்கள் அடர் சிவப்பு நிறத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. காரின் நிறத்திற்கு ஏற்ப டார்க் க்ரே நிறத்தில் இதன் சக்கரங்கள் 22 இன்ச்சில் வழங்கப்பட்டு உள்ளன.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

மேலும் புதிய எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசனில் எம் ஸ்போர்ட் பம்பர்கள் & பக்கவாட்டு அடிப்பாகங்கள், எம் ஸ்போர்ட் எக்ஸாஸ்ட் மற்றும் அடாப்டிவ் எம் சஸ்பென்ஷன் உள்ளிட்டவை அடங்கிய எம் ஸ்போர்ட் தொகுப்பையும் பிஎம்டபிள்யூ நிறுவனம் வழங்கியுள்ளது.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

முன்பக்க முழு-எல்இடி ஹெட்லேம்ப்கள், லேசர் தொழிற்நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளன. கருப்பு நிற தீம் உட்புற கேபினிலும் தொடரப்பட்டுள்ளது. முன் க்ரில் & சக்கர ப்ரேக் காலிபர்களில் உள்ள அடர் சிவப்பு நிறத்தை உட்புற கேபினிலும் குழாய்களாக, தையல்களாக பார்க்க முடிகின்றன.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

டேஸ்போர்டு ஆனது கார்பன் ஃபைபர் வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பாட்டில்களை வைக்க உதவும் கப் ஹோல்டர்கள் ஸ்பெஷல் எடிசனிற்கான லோகோவை கொண்டுள்ளன. எம்-பிராண்ட் தொகுப்பில் அடங்குகின்ற அல்காண்ட்ரா ஹெட்லைனர் உட்புற கேபினிற்கு கூடுதல் ப்ரீமியம் லுக்கை வழங்குகிறது.

2022 பிஎம்டபிள்யூ எக்ஸ்5 ப்ளாக் வெர்மிலியன் எடிசன் வெளியீடு!! அமெரிக்காவில் விற்பனைக்கு வருகிறது

பிஎம்டபிள்யூ எக்ஸ்5 மாடலின் எக்ஸ்ட்ரைவ்40ஐ ட்ரிம்-இன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ப்ளாக் வெர்மிலியன் எடிசனில் 3.0 லிட்டர், 6-சிலிண்டர் இன்லைன் என்ஜின் பிஎம்டபிள்யூவின் எக்ஸ்ட்ரைவ் அனைத்து-சக்கர-ட்ரைவ் சிஸ்டத்துடன் பொருத்தப்பட்டுள்ளது.

Most Read Articles

English summary
2022 BMW X5 Black Vermilion Edition Revealed.
Story first published: Tuesday, July 13, 2021, 23:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X