வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

பிஎம்டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் புகழ்வாய்ந்த 5 சீரிஸ் (5 Series) சொகுசு செடான் ரக கார் மாடலில் புதிதாக கார்பன் எடிசன் (Carbon Edition) எனப்படும் சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

பிரபல சொகுசு உற்பத்தி நிறுவனமான பிஎம்டபிள்யூ கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு தனது புகழ்வாய்ந்த 5 சீரிஸ் சொகுசு செடான் ரக காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இப்புதுப்பிக்கப்பட்ட கார் மாடல் ரூ. 62.9 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்குக் கிடைத்து வருகின்றது. இந்த காரை கூடுதல் சிறப்பான தேர்வாக மாற்றும் வகையில் தற்போது நிறுவனம் ஓர் தரமான நடவடிக்கையை மேற்கொண்டிருக்கின்றது.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

அதாவது, 5 சீரிஸ் கார் மாடலில் புதிய சிறப்பு பதிப்பு ஒன்றை நிறுவனம் உருவாக்கி இருக்கின்றது. இந்த சிறப்பு பதிப்பு 5 சீரிஸ் காரை நாளை இந்தியாவில் நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. 5 சீரிஸ் கார்பன் எடிசன் (5 Series Carbon Edition) எனும் பெயரில் அச்சிறப்பு பதிப்பு சொகுசு கார் நாட்டில் வெளியீட்டைப் பெற இருக்கின்றது.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

உலக சந்தையில் 5 சீரிஸ் கார்பன் எடிசன் 530ஐ (530i), 530ஐ எக்ஸ்டிரைவ் (530i xDrive), 540ஐ (540i) மற்றும் 540ஐ எக்ஸ்டிரைவ் (540i xDrive) ஆகிய தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஆனால், இந்தியாவில் எந்த தேர்வில் கார்பன் எடிசன் விற்பனைக்கு வழங்கப்படும் என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

நாளையே இதுகுறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிறுவனத்தின் எம் பெர்ஃபார்மென்ஸ் (M Performance) தேர்வுகளில் வழங்கப்படுவதைப் போல பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் சிறப்பு அலங்கார அணிகலன்கள் இதில் வழங்கப்பட இருக்கின்றன.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

ராக்கர் பேனல் டிகேல்கள், மேட் கருப்பு நிற பம்பர், கார்பன் எடிசன் எனும் பெயர் பேட்ஜ், எம்-பிராண்ட் பிராக்கெட்டுகள், இரட்டை ஸ்போக் டிசைனிலான 19 இன்ச் கருப்பு நிற அலாய் வீல்கள் மற்றும் பல அதிக சிறப்பு வசதிகள் இக்காரில் வழங்கப்பட இருக்கின்றன. சிறப்பம்சங்கள் மட்டுமின்றி டிசைனிலும் லேசான மாற்றங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

ஆனால், இதன் உட்புறத்தில் பெரியளவில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்காது என கூறப்படுகின்றது. வழக்கமான 5 சீரிஸ் மாடல்களில் இடம் பெற்றிருக்கும் அம்சங்கள் மட்டுமே புதிய கார்பன் எடிசன் 5 சீரிஸ் மாடலிலும் இடம் பெற்றிருக்குமாம். வழக்கமான 5 சீரிஸ் சொகுசு செடான் காரில் 12.3 இன்ச் அளவுள்ள முழு இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிரைவர் டிஸ்பிளே, மிகவும் மிருதுவான வசதிக் கொண்ட இருக்கைகள், பிஎம்டபிள்யூ ஆபரேட்டிங் சிஸ்டம் 7.0, 3டி நேவிகேஷன் மற்றும் பல அம்சங்களைக் கொண்டிருக்கின்றது.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

இதே அம்சங்களே புதிய 5 சீரிஸ் கார்பன் எடிசனிலும் இடம் பெற இருக்கின்றன. உட்புறத்தில் இடம் பெற்றிருக்கும் சிறப்பம்சங்களை போலவே எஞ்ஜின் விஷயத்திலும் சிறப்பு பதிப்பு மற்றும் வழக்கமான பதிப்பு இரண்டும் ஒரே மாதிரியானதாக காட்சியளிக்க இருக்கின்றன. பிஎம்டபிள்யூ 5 சீரிஸின் வழக்கமான வேரியண்ட் 2.0 லிட்டர் 4 சிலிண்டர் மற்றும் 3.0 லிட்டர் 6 சிலிண்டர் இன்லைன் ஆகிய இரு விதமான மோட்டார் தேர்வுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

இதில், 252 எச்பி மற்றும் 350 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறனைக் கொண்ட 2.0 லிட்டர் 4 சிலிண்டர் பெட்ரோல் எஞ்ஜினே 5 சீரிஸ் கார்பன் பதிப்பில் பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த எஞ்ஜின் 8 ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் தானியங்கி கியர்பாக்ஸ் வாயிலாக இயங்கும்.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

பிஎம்டபிள்யூ 5 சீரிஸ் வழக்கமான மாடல் மூன்று விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 530ஐ எம் ஸ்போர்ட் (530i M Sport), பிஎம்டபிள்யூ 530டி எம் ஸ்போர்ட் (BMW 530d M Sport) மற்றும் பிஎம்டபிள்யூ 520டி லக்சூரி லைன் (BMW 520d Luxury Line) ஆகியவை அவை ஆகும். இந்த மூன்று ட்ரிம்களிலுமே கார்பன் பதிப்பு விற்பனைக்கு வரும் எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதுகுறித்த தகவல் நாளையே உறுதியாக இருக்கின்றது.

வழக்கமான மாடலை காட்டிலும் கூடுதல் அம்சங்களுடன்... நாளை அறிமுகமாகிறது BMW 5 Series Carbon Edition!

பிஎம்டபிள்யூ நிறுவனம் புதிய தயாரிப்புகளின் இந்தியாவை அலங்கரித்து வருகின்றது. அந்தவகையில், அக்டோபர் 15ம் தேதி அன்று 3 சீரிஸ் க்ரான் லிமௌசைன் ஐகானிக் எடிசன் எனும் புதிய சிறப்பு பதிப்பை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த் காரின் ஆரம்ப விலை ரூ. 53.50 லட்சம் ஆகும். இது பெட்ரோல் வெர்ஷனின் விலை ஆகும். இதன் டீசல் வெர்ஷனுக்கு ரூ.54.90 லட்சம் என்ற விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 330 எல்இ, 320 எல்டி ஆகிய தேர்வுகளில் இக்கார் நாட்டில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

குறிப்பு: 2 முதல் 10 வரையிலான படங்கள் உதாரணத்திற்கு வழங்கப்பட்டவை.

Most Read Articles
English summary
Bmw teased 5 series carbon edition india launch tomorrow
Story first published: Wednesday, October 20, 2021, 15:24 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X