ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரின் படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. அவற்றை பற்றி இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

சொகுசு கார் தயாரிப்பில் உலகம் முழுவதிலும் பிரபலமான பிஎம்டபிள்யூ நிறுவனம் எக்ஸ்3 எஸ்யூவி காருக்கு அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கும் நோக்கில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை வழங்கவுள்ளது.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

இந்த நிலையில் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிடப்படவுள்ள இந்த ஃபேஸ்லிஃப்ட் காரின் படத்தின் மூலமாக பிஎம்டபிள்யூ எக்ஸ்3 மாடல் முன்பை காட்டிலும் கூடுதல் ஸ்போர்டியான தோற்றத்திற்கு மாறியுள்ளதை அறிய முடிகிறது.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

இந்த பிஎம்டபிள்யூ எஸ்யூவி காருக்கு போட்டியாக விளங்கும் ஆடி க்யூ5 கடந்த ஆண்டில் இதேபோன்ற அப்கிரேடை பெற்றிருந்தது இங்கு நினைவுக்கூரத்தக்கது. இந்த ஆடி கார் புதிய ஸ்டைலை பெற்றிருந்தது.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

இதன் காரணமாக பிஎம்டபிள்யூ-வும் தனது பிரதான எஸ்யூவி மாடலான எக்ஸ்3-க்கு குறிப்பிடத்தக்க அப்டேட்களை வழங்கியிருக்கும் என்று நம்புகிறோம். தற்போது கிடைத்துள்ள படத்தில் இராணுவ பச்சை நிறத்தில் எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் கார் காட்சியளிக்கிறது.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

காரின் பக்கவாட்டில் சக்கர வளைவுகளுக்கு இடையே தடிமனான ஷோல்டர் லைன் வழங்கப்பட்டுள்ளது. இதனுடன் பின்பக்கத்தில் கூர்மையான தோற்றத்தில் உள்ள பம்பர் மொத்த காருக்கும் நிமிர்ந்த தோற்றத்தை வழங்குகின்றன.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

இவற்றிற்கு ஏற்றாற்போல் அலாய் சக்கரங்கள் இரட்டை-நிறத்தில் உள்ளன. இந்த படத்தின் மூலம் காரின் பக்கவாட்டு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில் காரின் முன் மற்றும் பின்பகுதியில் தான் முக்கிய மாற்றங்கள் கொண்டுவரப்பட்டிருக்கும்.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

அவை என்னென்ன என்பதை அறிய அதிகாரப்பூர்வ வெளியீடு வரையில் காத்திருக்க வேண்டும். இருப்பினும் இந்த படத்தின் மூலம் பார்க்கும்போது சமீபத்திய எம்340ஐ காரில் வழங்கப்பட்ட அதே டிசைனில் தான் எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் கார் முன்பக்க க்ரில்லை பெற்றுவரும் என எதிர்பார்க்கிறோம்.

இந்த ஃபேஸ்லிஃப்ட் காரில் வழங்கப்படவுள்ள உட்புற கேபின் மற்றும் என்ஜின் தேர்வுகள் குறித்த எந்த விபரமும் தற்போதைக்கு இல்லை. நமக்கு தெரிந்தவரையில், புதிய பிஎம்டபிள்யூ ஐட்ரைவ் 9 இயக்க அமைப்பு இதன் கேபினில் வழங்கப்படலாம்.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

அதேபோல் 12.3 இன்ச்சில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ஆப்பிள் கார்ப்ளே, 16-ஸ்பீக்கர் ஹர்மன் கார்டன் சவுண்ட் சிஸ்டம், வயர்லெஸ் சார்ஜிங் வசதி மற்றும் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல் உடன் இதன் கேபினை சுற்றிலும் விளக்குகளையும் நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

ஆடி க்யூ5 காருக்கு டஃப் கொடுக்கும் தோற்றத்தில் 2021 பிஎம்டபிள்யூ எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட்!! படம் இணையத்தில் லீக்...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு எக்ஸ்3 ஃபேஸ்லிஃப்ட் காரில் என்ஜின் அமைப்பில் எந்த மாற்றமும் கொண்டுவரப்படாது என்றே நினைக்கிறோம். இதனால் வழக்கமான 2.0 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் ப்ளக்-இன் ஹைப்ரீட் வேரியண்ட்கள் 8-ஸ்பீடு ஸ்டெப்ட்ரானிக் ட்ரான்ஸ்மிஷன் உடன் வழங்கப்படவே வாய்ப்புள்ளது.

Most Read Articles

English summary
2021 BMW X3 Facelift Images Leaked. Read All Details In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X