புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

பொலிரோ மஹிந்திராவின் சிறந்த தயாரிப்புகளுள் ஒன்று என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. இதனால் தான் என்னவோ சப்-4 மீட்டர் டியுவி300 காரை பொலிரோ நியோ என்ற பெயரில் கொண்டுவர இந்த இந்திய ஆட்டோமொபைல் நிறுவனம் தீவிரமாக உள்ளது.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

பொலிரோ நியோ வித்தியாசமான ஹெட்லேம்ப்கள் மற்றும் அப்டேட் செய்யப்பட்ட க்ரில் உடன் முற்றிலும் புத்துணர்ச்சியான முன்பக்கத்தை பெற்றுவரும் என தகவல்கள் கூறுகின்றன.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

இருப்பினும் பொலிரோவின் அடையாளங்களை இந்த புதிய நியோ காரில் வழங்க மஹிந்திரா வடிவமைப்பாளர்கள் முயற்சித்துள்ளனர் என்பது தற்போது ஆட்டோ கார் செய்திதளம் மூலம் நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படத்தை பார்க்கும்போது தெரிய வருகிறது.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

இதன்படி இந்த சோதனை மாடலின் பொனெட், க்ரில், அகலமான சக்கர வளைவுகள் மற்றும் ஃபெண்டர் உடன் வழங்கப்பட்டுள்ள தடிமனான பேண்ட் உள்ளிட்டவை நமக்கு பொலிரோவை நினைவுப்படுத்துகின்றன.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

அதேநேரம் முன்பக்க பம்பரை சுற்றிலும் கூடுதல் வ்ராப்-ஐ பார்க்க முடிகிறது. இதனால் சில எல்இடி ஸ்ட்ரிப்களை அந்த இடங்களில் எதிர்பார்க்கலாம். இவை தவிர்த்து காரின் பக்கவாட்டில் மற்றும் பின்பக்கத்தில் மாற்றங்கள் பெரிய அளவில் வழங்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

ஆனால் இதை பெரியதாக தெரியாத அளவிற்கு புதிய நிறங்களை பொலிரோ நியோவிற்கு மஹிந்திரா நிறுவனம் வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உட்புறத்தில் புதிய தோற்றத்திலான மைய கன்சோல் உடன் சில காஸ்மெட்டிக் மாற்றங்களை எதிர்பார்க்கலாம்.

புதிய நியோ மாடலின் மூலம் பொலிரோவின் பலத்தை அதிகரிக்கும் மஹிந்திரா!! ஓரங்கட்டப்படும் டியுவி300...

இயக்க ஆற்றலை வழங்குவதற்கு பொலிரோவின் தற்போதைய அதே 1.5 லிட்டர் 3-சிலிண்டர் டீசல் என்ஜினை தான் பிஎஸ்6 தரத்தில் புதிய பொலிரோ நியோ கார் பெறும் என தெரிகிறது. இந்த புதிய பொலிரோ மாடலின் அறிமுகம் வரும் மாதங்களில் இருக்கலாம். பொலிரோ நியோவின் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை ரூ.9.5 லட்சத்தில் நிர்ணயிக்கப்பட வாய்ப்புள்ளது.

Most Read Articles

மேலும்... #மஹிந்திரா #mahindra
English summary
Mahindra Bolero Neo coming soon
Story first published: Saturday, February 13, 2021, 16:45 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X