Just In
- 7 hrs ago
எஃப்.இசட் வரிசையில் புதிய அட்வென்ச்சர் பைக்!! யமஹாவின் அதிரடி மூவ்!
- 10 hrs ago
பிஎம்டபிள்யூ எக்ஸ்1 எஸ்யூவி எப்படி இருக்கிறது?- டெஸ்ட் டிரைவ் ரிப்போர்ட்!
- 11 hrs ago
25கிமீ சைக்கிள் மிதித்து படப்பிடிப்பு தளத்திற்கு வந்த நடிகர்!! தளபதி விஜய் எஃபெக்ட் போல...
- 12 hrs ago
ஃபாஸ்ட் & ஃப்யூரியஸ் 9 பட ட்ரைலர் வெளியீடு!! இந்த கார்கள் எல்லாம் படத்தில் பயன்படுத்தப்பட்டுருக்கா?
Don't Miss!
- News
ஜெட் வேகத்தில் கொரோனா.. மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு தொற்று உறுதி!
- Sports
என்னப்பா நடக்குது இங்க.. விக்கெட்டில் விளையாடிய அம்பயர்.. விழிப்பிதுங்கிய டூப்ளசிஸ் வேடிக்கை சம்பவம்
- Movies
எல்லா விஷயமும் பேசலாம்… புதிய யூட்யூப் சேனலை தொடங்கிய ரேகா !
- Finance
பிட்காயின்-ஐ தடை செய்த துருக்கி.. இந்தியா என்ன செய்யப் போகிறது..!
- Education
10-வது தேர்ச்சியா? ரூ.1 லட்சம் ஊதியத்தில் BECIL நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்
- Lifestyle
கொரோனா தடுப்பூசி குறிப்பாக பெண்களுக்கு என்னென்ன பக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது தெரியுமா?
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்தியாவில் சாலை சோதனையில் இருக்கும் ஜப்பானிய பிஎஸ்6 கமர்ஷியல் வாகனம்!! ஏப்ரலில் அறிமுகமா?
பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனம் இந்தியாவில் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஸ்பை படங்களை இனி இந்த செய்தியில் பார்ப்போம்.

வாகனங்களை பிஎஸ்6 தரத்திற்கு மேம்படுத்த வேண்டும் என்று இந்திய அரசாங்கம் கடந்த 2020 ஏப்ரல் 1ஆம் தேதி வரையில் காலக்கெடு விதித்திருந்தது. இதில் அப்கிரேட் செய்யப்படாத வாகனங்களின் விற்பனை ஒவ்வொன்றாக அந்த சமயத்தில் நிறுத்தப்பட்டன.

இந்த வகையில் இந்தியாவில் தற்காலிகமாக விற்பனை நிறுத்தப்பட்ட வாகனம் தான் இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் ஆகும். ஆனால் தற்போது ஐப்பானிய ஆட்டோமொபைல் நிறுவனமான இசுஸு மீண்டும் அதன் டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தை நம் நாட்டில் விற்பனைக்கு கொண்டுவர தயாராகி வருகிறது.

அதன் ஒரு பகுதியாகவே தற்போது இந்த சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நமக்கு தெரிந்த வரையில் இந்த பிஎஸ்6 இசுஸு வாகனத்தின் இந்திய அறிமுகம் அடுத்த ஏப்ரல் மாதத்தின் இறுதியில் இருக்கலாம்.

கார் தேக்கோ செய்திதளம் மூலம் கிடைத்துள்ள தற்போதைய சோதனை ஓட்ட ஸ்பை படங்களில் பிஎஸ்6 டி-மேக்ஸ் வி-கிராஸ் வாகனத்தின் பின்பக்கத்தில் ‘டிடிஐ' முத்திரை பொருத்தப்பட்டுள்ளதை பார்க்க முடிகிறது. இதனால் இந்த சோதனை மாதிரியில் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கலாம்.

கமர்ஷியல் மற்றும் டீசல் வாகனங்களை மட்டுமே தயாரிக்கும் நிறுவனமான இசுஸுவின் பிஎஸ்4 வி-கிராஸ் வரிசை வாகனங்களில் 2.5 லிட்டர் டீசல் மற்றும் 1.9 லிட்டர் டீசல் என இரு விதமான என்ஜின் தேர்வுகள் வழங்கப்பட்டன.

இதில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 134 பிஎஸ் மற்றும் 320 என்எம் டார்க் திறனையும், 2.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு வழங்கப்பட்டன.

இந்த என்ஜின்களில் 2.5 லிட்டர் என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸும், 1.9 லிட்டர் டீசல் என்ஜின் உடன் 6-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸும் இணைக்கப்பட்டன. நமக்கு தெரிந்த வரையில் பிஎஸ்6 டி-மேக்ஸ் வி-க்ராஸில் 2.5 லிட்டர் டீசல் என்ஜின் தேர்வு வழங்கப்பட வாய்ப்பில்லை.

ஆனால் அதேநேரம் 1.9 லிட்டர் டீசல் என்ஜின் உடன் கூடுதலாக 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வும் கொடுக்கப்படலாம். என்ஜின் அப்கிரேடை தவிர்த்து பிஎஸ்6 இசுஸு டி-மேக்ஸ்வி-கிராஸ் வாகனத்தின் தோற்றத்தில் எந்த அப்கிரேடையும் எதிர்பார்க்க முடியாது.

கமர்ஷியல் வாகனமான டி-மேக்ஸ் வி-கிராஸில் தொடுத்திரை இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், க்ரூஸ் கண்ட்ரோல், என்ஜினை ஸ்டார்ட்/ஸ்டாப் செய்ய அழுத்து-பொத்தான், எல்இடி விளக்குகள், ஆடியோ கண்ட்ரோல்களுடன் ஸ்டேரிங் சக்கரம், ஆட்டோமேட்டிக் ஏசி, பவர் ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் மடக்கும் வசதி கொண்ட ஓட்டுனர் இருக்கை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வந்தன.

பயணிகளின் பாதுகாப்பிற்கு இரட்டை காற்றுப்பைகள், இபிடியுடன் ஏபிஎஸ், ட்ராக்ஷன் கண்ட்ரோல், எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்களை பெற்றுவந்த பிஎஸ்4 இசுஸு டி-மேக்ஸ் வி-க்ராஸ் வாகனத்தின் எக்ஸ்ஷோரூம் விலைகள் ரூ.16.55 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சம் வரையில் நிர்ணயிக்கப்பட்டன.

பிஎஸ்6 அப்கிரேடினால் இதன் முந்தைய விலைகளில் சிறிது அதிகரிப்பு கொண்டுவரப்படலாம். இந்த இசுஸு கமர்ஷியல் வாகனத்திற்கு இந்திய சந்தையில் வேறெந்த வாகனமும் நேரடி போட்டி வாகனமாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.