ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

இழுவை பந்தயங்களில் புகாட்டி சிரோன் கார் மற்ற எல்லாவற்றிற்கும் தலைவன் போல் என்றால் அதில் மிகையில்லை. ஆனால் அத்தகைய ஸ்போர்ட்ஸ் கார் டசால்ட்டின் ரஃபேல் போர் விமானத்துடன் போட்டியிட்டால் கடைசியில் யார் ஜெயிப்பார் என்பது கேள்வியே.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

இந்த கேள்விக்கான பதிலை தான் இந்த செய்தியில் பார்க்கவுள்ளோம். புகாட்டி நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யுடியூப் சேனலில் வெளியிடப்பட்டுள்ள இந்த வீடியோவில் பிரான்ஸில் உள்ள டசால்டின் தலைமையகத்தில் இந்த இரு வாகனங்களுக்கு இடையே போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இந்த போட்டியில் சிரோன் புர் ஸ்போர்ட் என்ற சிரோனின் லிமிடெட் எடிசன் மாடல் உட்படுத்தப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள 8.0 லிட்டர் டபிள்யூ16 என்ஜின் அதிகப்பட்சமாக 1,500 எச்பி மற்றும் 1,600 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

மறுபக்கம் பிரெஞ்சு இராணுவத்திற்கு சொந்தமான இரு டர்போ ஜெட்களை கொண்ட போர் விமானம் களமிறக்கப்பட்டுள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள இரு ஜெட்கள் 58,550 நியூட்டன் உந்துதல் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

இது கிட்டத்தட்ட 5,727எச்பி ஆற்றலுக்கு சமமானதாகும். இத்தகைய ஆற்றலுடன் இதுவரையில் எந்தவொரு ஹைப்பர் காரும் கண்டுப்பிடிக்கப்படவில்லை. 16 சிலிண்டர்களை கொண்ட புகாட்டி சிரோன் புர் ஸ்போர்ட் ஹைப்பர் கார் அதிகப்பட்சமாக மணிக்கு 490கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

ஆனால் ரஃபெல் போர் விமானம் மணிக்கு 1.800-ல் இருந்து 1,912kmph வேகம் வரையில் செல்லக்கூடியது. இந்த வகையில் புகாட்டி ஹைப்பர் காருக்கும் இந்த ரஃபெல் விமானத்திற்கும் இடையே ஏகப்பட்ட தொலைவு வித்தியாசம் உள்ளது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

இருப்பினும் தனது சிரோன் ஹைப்பர் காரை தைரியமாக புகாட்டி நிறுவனம் அனுப்பி வைத்துள்ளது. போட்டி துவங்கிய முதலே முன்னிலை வகித்த புகாட்டி சிரோன் ஸ்போர்ட் கார் 0-வில் இருந்து 100kmph வேகத்தை வெறும் 2.4 வினாடிகளில் எட்டியுள்ளது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

இதனால் இந்த ஹைப்பர் காரால் 200kmph வேகத்தை 6.1 வினாடிகளிலும், 300kmph வேகத்தை 13 வினாடிகளிலும் எளிதாக எட்ட முடிந்தது. அதேநேரம் 150மீ தூரத்தை 165kmph வேகத்தில் கடந்தப்போதும் போர் விமானம் சிரோனுக்கு சற்று பின்னால் தான் இருந்தது.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

350 மீட்டர்கள் தூரத்தை கடந்தப்போது போர் விமானத்தின் வேகம் 210kmph இருந்தது. 450மீ தூரம் தாண்டிய பின் மணிக்கு 260கிமீ வேகத்தில் தரையை விட்டு மேலே பறக்க துவங்கியது இந்த விமானம்.

ஹைப்பர் கார்களின் அரசன் புகாட்டி சிரோன் ஸ்போர்ட் Vs ரஃபெல் போர் விமானம்! முடிவை எதிர்பார்த்திருக்கவே மாட்டீங்க

போட்டி துவங்கிய சில மீட்டர்கள் விமானம் தனக்கு பின்னால் தான் வந்தது என கூறிய புகாட்டி சிரோன் ஹைப்பர் காரை இயக்கிய ஓட்டுனர், ஆனால் அதன்பின் விமானம் தன்னை காட்டிலும் 20 மீட்டர்கள் முன்னோக்கி சென்று கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளார். அப்படியென்றால் யார் இந்த போட்டியில் வெற்றி பெற்றது என்பது இந்நேரம் உங்களுக்கு தெரிந்திருக்கும், ஆம் இரு ஜெட்களை கொண்ட ரஃபெல் போர் விமானம் தான்.

Most Read Articles
மேலும்... #புகாட்டி #bugatti
English summary
Bugatti vs Rafale: A drag race not for the faint-hearted
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X